கதைகளின் கதைகள்... ஒரு மழை நாள். பிரபஞ்சன் சாரின் அறையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அறை முழுதும் புத்தகங்கள். தளத்தில் இருந்து மழை சொட்டுகிறது. மழை படாத இடங்களுக்கு புத்தகங்களை நகர்த்தி வைக்கிறார். பிரபஞ்சன் சார் அடுத்து அந்தப் புத்தகத்தை நகர்த்தப் போகிறார் என்று மழைக்குத் தெரிந்திருக்கிறது. அவர் நகர்த்தி வைத்த இடத்தில் சரியாக சொட்டுகிறது. அறைக்குள் மழை. அதன் நடுவே விளையாட்டு. ''முக்கியமான புத்தகங்களை பீரோவுக்குள் வைத்துப் பூட்டிவிட்டேன்'' என்கிறார் பெருமிதமாய். கொஞ்ச நேரம் கழித்து அவராகவே, ''இன்னும் கொஞ்சம் புத்தகங்களை நண்பரின் அறையில் வைத்திருக்கிறேன்'' என்றார். பின் ஒரு பெரிய பையில் இப்போதைக்கு அவருக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ச
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
நான் எழுதிய கதைகளுக்கு நானே எப்படி விமர்சனம் எழுதுவது? ஆனந்த விகடனில் வெளிவந்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உண்டு. அனைத்தும் நட்சத்திர எழுத்தாளர் வரிசையில் வெளி வந்தவை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.