துரோகத்தை உடனிருப்பவர்களே தான் செய்வர். தங்கை மீது அவ்வளவு பாசத்தைக் கொட்டினாலும் அண்ணன் வாரிசை அழிக்க அவள் முற்படுவது கொடூரத்தின் உச்சம்.
விஷத்திலிருந்து தப்பித்தவன் விபத்திலிருந்தும் தப்பித்தது வினுவை வலிமை ஆக்கி எதிரிகளாக தன் முன் நிற்கும் உறவுகளைப் பந்தாட முயலும் போது தானாகவே உயிரிழப்பும் ஏற்பட்டுப் பல ஆண்டுகளாக மனதிலிருந்த வெம்மை நீங்குகிறது.
மிரட்டி தன்னை மணக்க வைத்த பெண்ணே தன் சிறுவயது தோழியும் காதலியும் என்றறிந்த நொடி தனிப்பட்ட வாழ்வும் மலர்ந்து விரிகிறது.
துரோகத்தின் பின் வைத்து எழுப்பப்பட்ட கதை இணைப்பு சங்கிலியை ஆங்காங்கே விட்டு வைத்ததால் தொடர்ச்சி தடைப்படுகிறது. கூடவே பெரும் நாடகத்தன்மை மேலோங்கி இருக்கிறது.