பள்ளியில் படிக்கும் போது நிச்சயம் இந்தக் கேள்வி உங்களிடமும் கேட்கப்பட்டிருக்கும். “எதிர்காலத்தில் நீ என்னவாக ஆகப் போகின்றாய்?” டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், மருத்துவர், வக்கீல், தொழில்நுட்ப வல்லுநர், விஞ்ஞானி வரைக்கும் ஒவ்வொருவரின் வெவ்வேறு விதமான ஆசைகள் கேட்டிருப்போம். கலைகள் குறித்தோ வணிகம் சார்ந்த ஆசைகளை ஒருவர் கூடச் சொல்லியிருக்கமாட்டார்கள். ஒருவர் கூட நான் தொழில் அதிபர் ஆகப் போகின்றேன் என்று சொல்லியிருக்கவே மாட்டார்கள். காரணம் இன்றைய தமிழர்கள் வணிகத்தை விட்டு வெளியே வரவே விரும்புகின்றார்கள். எப்படி விவசாயத்தை விட்டு இரண்டாவது தலைமுறை வெளியே வந்து விட்டதே வணிகமும் வேண்டாத ஒன்றாக ஆகிக் கொண்டு வருகின்றது.
வணிகம் பற்றி நேர்மறையான சிந்தனைகளையே அள்ளித்தந்து சென்றிருக்கிறது. மிகவும் எளிமையான உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. கடைசியில் இப்போது நம்மிடம் என்ன உள்ளது? என்ற கேள்விக்கான விடையை அறிந்து விட்டேன்😍💕