அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி இவ்விதழ் "பெரியாரை காத்து வளர்த்த" அன்னை மணியம்மையார் சிறப்பிதழாக வருவது உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அன்னை மணியம்மையாரின் சிறப்பிதழாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் சில தோழர்களால் விதைக்கப்பட்டு இன்று இந்த சிறப்பிதழாக விருட்சமாகி இருக்கிறது. இந்த இதழில் பல முக்கிய கட்டுரைகள் இடம்பெற்று இருக்கிறது. திராவிட இயக்க வரலாற்றில் அன்னை மணியம்மையாரின் பங்கு அளப்பரியது. தந்தை பெரியாரின் துணைவியார் என்பதை தாண்டி, மணியம்மையார் அவர்களின் ஆளுமைமிக்க தனித்திறன்களை இந்த கட்டுரைகளை வாசிக்கும் போது அறிந்துக்கொள்ளலாம். இதுவரை மணியம்மையார் குறித்து வாசித்து அறியாதவர்களுக்கு இந்த இதழ் ஒ&#