Jump to ratings and reviews
Rate this book

Venvel Senni - 1

Rate this book
இதுவரை எழுதப்படாத மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு 261ல் நடைபெற்ற பெரும் போரே 'வென்வேல் சென்னி' புதினம். மௌரியரின் தமிழகப் படையெடுப்பிற்கும், மூவேந்தர்கள் மற்றும் வேளிர்கள் சேர்ந்து மொழிபெயர் தேயத்தில் நிலை நிறுத்தியிருந்த தமிழக கூட்டுப் படைகள் மோரியரைத் தடுத்து நிறுத்திய பெரும் போருக்கும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.கலிங்கப் போர் நடைபெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கழித்தே அசோகன் தனது 'தம்மா' மதக் கொள்கையை அறிவித்தான். அசோகன் கலிங்கப் போரை முன்னெடுத்தது முதல் அவனது பெளத்த மதமாற்றம் நடை பெரும் வரை இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும் போரே 'வென்வேல் சென்னி' புதினம்.

989 pages, Kindle Edition

Published April 13, 2020

38 people are currently reading
118 people want to read

About the author

C.Vetrivel Salaiyakkurichy

9 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
61 (59%)
4 stars
23 (22%)
3 stars
13 (12%)
2 stars
3 (2%)
1 star
2 (1%)
Displaying 1 - 13 of 13 reviews
2,121 reviews1,109 followers
July 13, 2020
மண்ணை ஆளவிரும்புவன் தன் தகுதியை மட்டுமே வளர்த்துக் கொள்ளாமல் திறமையானவர்களையும் தந்திரமானவர்களையும் கொண்ட கூட்டத்தை நேர்ப்படுத்தி ஒத்த அலைவரிசையை உண்டாக்கும் போதே அவனின் கனவு நிகழ்காலச் சம்பவத்தின் வாசலை நெருங்கிவிடுகிறது என்றே சொல்லலாம்.

திட்டமிடுதல், இது இல்லையென்றால் எப்பேர்பட்ட காரியமும் தோல்வியைத் தான் தழுவும். சாதாரணத் தினசரி நடவடிக்கைகளுக்கே திட்டமிடுதல் தேவைப்படும் போது ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து மிகப்பெரிய நிலஅமைப்பை தன்கீழ் கொண்டுவர நினைப்பவன் காட்டும் முனைப்பு முழுக்க முழுக்கத் தந்திரத்தின் வழியால் மட்டுமே செயல்படுத்த முடியும். இங்கே நேர்மறை எதிர்மறை, நல்லது கெட்டது என்ற பேச்சை கூட எழுப்பத் தேவையில்லை.

மோரியப் பேரரசு கலிங்கத்தை முடித்துவிட்டுத் தமிழகத்தில் எப்படி இரு வேறுவழிகளில் ஒரே நேரத்தில் நுழைகிறது என்பதை விரிவாகச் சொல்லகிறது இந்த முதல் பாகம்.

கன்னியை உருவகப்படுதிக்கொண்டு அதன் மூலமே துளு நாட்டின் அழகைப் புகழ்வதில் இருந்து தொடங்குகிறது.

மோரியப் படையெடுப்பை எதிர்பார்த்து அதை முறியடிக்கத் திட்டம் தீட்டி தன் நிலத்தில் தான் மட்டுமே சுதந்திரமாக ஆளவிரும்பும் நன்னன் வேண்மான் மேற்கொள்ளும் முயற்சிகளைச் சூழ்ச்சிமுறையில் எதிர்கொள்ள வந்த மோரிய ஒற்றன் தன் பணியைச் சிறப்பாகச் செய்து அஃதையை அவரின் பேராசை மூலம் வளைத்துவிட்டு திரும்பி போகும் போது சோழ இளவல் சென்னியின் படைத்தலைவன் பிடர்தலையனின் ஒற்றறிதல் கண் அசைவிலே தான் அவன் தன் நாட்டிற்குத் திரும்புகிறான். இருவரும் ஒற்றர்களாக இருப்பதால் பயணம் சூடுபிடிக்கிறது. எவனோ ஒருவன் தான் இறப்பை தள்ளி போட முடியும் என்று தெரிந்திருந்தாலும் யார் எப்படித் தோல்வியைச் சந்திப்பார்கள் என்ற சுவாரசியமே கதையின் உள்ளே ஆர்வமாகப் படிக்கத் தூண்டுகிறது. தமிழர்களின் வீரத்திற்காக எழுதப்பட்டது என்பதை கதையின் வார்த்தைகளிலே புலனாகுகிறது.

மோரிய ஒற்றனின் இடத்தில் தன்னை நிலைநிறுத்திய பிடர்தலையன், சோழ இளவலின் தந்திரத்தையே அவர்களின் படையெடுப்பில் பிரதிபலிக்க வைத்து தன் பணியை முடித்துவிட்டு வெளியேறுகிறான்.

பிடர்தலையன் மற்றும் அன்னி மிஞிலியன் எப்படி மோரிய பேரரசுவில் நுழைந்து தாங்கள் கொண்டு சென்ற சேதியை எந்தவித சந்தேகமும் அவர்கள் அடையாமல் அதன்படி நடக்கவேண்டும் என்று செய்வது தான் முதல் பாகம் முழுவதும்.

மோரிய பேரரசர் அசோகன் அந்த அரியணையில் அமர்வதற்குச் செய்த சூழ்ச்சிகளும் அவரின் அந்த நாட்டு தந்திரங்களும் இவ்விரு ஒற்றர்களின் பார்வை வழியே நம்மை வந்து சேர்கிறது.

எழுத்தின் வழி ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது அது மோரியர்களுக்குச் சாதகமாக இல்லை.

எவ்வகைத் திட்டம் தீட்டினாலும் சூழ்ச்சியின் முன்பு அது அடிப்பட்டே போகும். அஃதையின் மகன் இளங்கோசனின் சூழ்ச்சியால் துளு நாட்டின் கோட்டை மோரியர்களின் வசமாகிறது.

முக்கிய கதாபாத்திரத்தை கட்டமைக்க உருவாக்கப்பட்ட சொல்லாடல் அதீத உயரத்திற்கே அதைக் கொண்டு செல்கிறது. சென்னி ஆகட்டும் இந்திரசேனை ஆகட்டும் அவர்களின் சூழ்ச்சியைத் தந்திரமாகவே கையாளப்படுகிறது.

சென்னி ஒருவர் அல்ல, உடன்பிறந்த இரட்டையர்கள் சென்னி என்ற பெயரில் அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுவதிலிருந்து அவர்களைப் புகழப்படுவதன் வேகம் அதிகரிக்கிறது.

ஆணின் பலவீனம் பெண் என்று அறியப்படுவது உண்மை. அதற்காக இதில் முழுவதும் பெண் ஒரே போக்கிற்காக உபயோகப்படுத்தியதாக வந்து கொண்டே இருப்பது சலிப்பின் பக்கம் நம்மைத் தள்ளிவிட முயல்கிறது.

சூழ்ச்சிக்கான காரணம் எவருக்காக என்று சொல்லப்பட்டாலும் அம்மனிதருக்கு அதில் விருப்பமில்லை என்றால் அனைத்தும் வீண் தான். தேரதரன் யாருக்காக இளங்கோசனின் சூழ்ச்சிக்கு தலையசைத்தானோ அவளாலே கொல்லப்படுவதுடன் அவனின் மனைவியாக வாழ்ந்த அவமானத்தில் அஃதையின் மகள் தானும் மாண்டுபோவது சூழ்ச்சிகளின் முடிவு எப்பொழுதும் நிலையானதை தருவது இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது.

போர் நடப்பது என்னவோ சில நாட்கள் மட்டுமே அதற்கான திட்டமிடலாக நிகழ்த்தும் நாடகங்கள் அவ்வளவு அணுக்கமாகவும் விவரமாகவும், போர்காட்சிகள் விவரிப்பும் மிகவும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
Profile Image for Manju Senthil.
46 reviews4 followers
May 16, 2023

சாம்ராட் அசோகரால் கைப்பற்ற முடியாத ஒரே நிலப்பரப்பு தமிழகம் மட்டுமே! அதற்கு காரணம் சோழ இளவரசன் வென்வேல் சென்னி. மோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நடந்த போர் தான் இக்கதை. பல நாட்கள் கழித்து ஒரு நல்ல வரலாற்று புதினம் வாசித்த அனுபவம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

மெல்ல நகரந்தாலும் சுவாரஸ்யமான கதைகளம், பல கதாபாத்திரங்கள் இருந்தும் வாசகர்கள் குழம்பாமல் இருக்கும் வண்ணம் அவர்களைத் திறம்பட கையாண்ட விதம், எனப் பல சிறப்பம்சங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த படைப்பில் குறை என்று நான் கூறுவது ஒன்று மட்டும் தான். சாதாரண வீரன் முதல், அரசன்\இளவரசன் வரை அனைவரும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது முகம் சுளிக்கும் வண்ணம் இருந்தது. புத்தகம் முழுவதும் பெண்களை, ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பதும், ஆடல் பாடல் நிகழ்த்தி உற்சாக படுத்துவதும், இரவுப் பொழுதை இன்பமயமாக்குவதுமாக சித்தரித்திருக்கிறார் எழுத்தாளர். அதை சமாளிப்பதற்காக இந்திரசேனை, காமக்கணியாள் போன்ற கதாபாத்திரங்களைப் படைத்தாலும் இக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது.

நன்னன் வேண்மானின் வீரமரணம், துரோகத்தால் வீழும் பாழி கோட்டை, என்று நம் மனதை ரணமாக்கிவிட்டு முடிகிறது இப்பாகம். அடுத்த பாகம் வாசித்துவிட்டு எனது மதிப்புரையைப் பதிவு செய்கிறேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Dharshini.
70 reviews1 follower
September 10, 2023
பகுதி 1 - வேண்மானின் வீரம் 🏞️"கரும்பெண்ணை நதியை எவன் கடக்க நினைத்தாலும் அவன் தன் காதலியை தழுவுவதற்கு திரும்ப மாட்டான் "🏞️
மௌரிய பேரரசன் அசோகன் தன் ஆட்சியை விரிவுபடுத்த நினைக்கிறான். தமிழகத்தையும், கலிங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறான். இதன் முதல்படியாக துளு நாட்டின் மீது படையெடுக்கிறான். இதை தடுத்து நிறுத்த 🐅சோழ இளவரசன் 🔥வென்வேல் சென்னி🔥 தன் படைத்தலைவன் அன்னி மிஞிலியன் மற்றும் அழுந்தூர் இளவரசன் நற்கிள்ளி ஆகியோரை பாடலிக்கு ஒற்றர்களாக அனுப்புகிறான் . அவன் திட்டம் வென்றதா ? போர் எவ்வாறு நடந்தது ? துளு நாட்டின் பாழிக்கோட்டை எவ்வாறு கைப்பற்றப்பட்டது என்பதை இந்ந புத்தகத்தின் கதைக்கரு‌.
இந்க கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள்.
📜நற்கிள்ளியும், அன்னி மிஞிலியனும் எவ்வாறு ஒற்று வேலை பார்க்கிறார்கள் , எவ்வாறு சமயோசிதமாக யோசிக்கிறார்கள் , என்பதை ஆசிரியர் அழகாக எழுதியுள்ளார்.
📜ஆண்கள் மட்டுமல்ல பெண்களாலும் திட்டம் வகுத்து நாட்டைக் காக்க முடியம் , எதிரிகளை அழிக்க முடியும் என்பதற்கு சான்றாக மௌரிய முதலமைச்சரின் மகள் "இந்திரசேனை" . இவ���து அறிவிற்கு முன்‌ நாம் அனைவரும் அடிபணிந்தே ஆக வேண்டும்.
📜தமிழகத்தின் மீது அளவற்ற அன்பு வைத்து அதற்காக வென்வேல் சென்னியின் உளவாளியாக கணிகைப்பெண் "நித்திலவல்லி"
📜துளு நாட்டின் மன்னனான நன்னன் வேண்மான் மற்றும் பிட்டங்கொற்றான் ஆகியோரின்‌ வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
📜கரும்பெண்ணை நதியில் இருந்து தமிழகத்தை பாதுக்கிறான் மற்றொரு சோழ புலியான 🐅🔥வெற்றிவேல் சென்னி 🔥
நற்கிள்ளி பாடலியில் இருந்துகொண்டு சித்திரக்கன்னியின் முன் தென்திசை நோக்கி மண்டியிட்டு வணங்குவது வெற்றிவேல் சென்னியின் வீரத்தை அனைவருக்கும் பறைசாற்றுகிறது !!!!
இந்நூலில் அசோகன் எப்படி அரியணை ஏறினான், அவன் செய்த செயல்கள் , அவனின்‌ "பூலோக நரகம்" ஆகியவற்றை வாசிக்கும் போது சிறிது நடுக்கம் ஏற்படுகிறது.
வஞ்சகமும் , துரோகமும் எவ்வாறு நாட்டை அழிக்கும் என்பதை ஆசிரியர் அழகாக எழுதியுள்ளார்.
Profile Image for Meenakshisankar M.
274 reviews10 followers
November 5, 2025
This is an exciting first part of a historical epic novel set more than 2000 years ago in ancient Tamilnadu, detailing emperor Asoka's and the Mauryan empire's attempted conquest of Tamil kingdoms in 3rd century BCE, which was defeated by the triumvirate of Cholas, Pandyas and Cheras, under the capable leadership of the Chola princes - the Chenni twins (iLamchet Chenni and Venvel Chenni). An impressive cast of characters provides ample ammunition for a well-crafted plot full of palace intrigue, loyalty and mistrust, that goes from Tamil Nadu to Tulu kingdom, Kalingam and even to Pataliputra into Asoka's palaces. Background plot of Asoka's ascension to power was also well described. The author has extensively researched Tamil sangam poetry and used them or reimagined them brilliantly in several places to enhance the beauty of the narrative. I was impressed by this first part, which ended tantalizingly in the Mauryan army's conquest of the Paazhi fort at the edges of the Tamil kingdoms. I'm looking forward to read the next two parts of this trilogy.
69 reviews1 follower
December 17, 2020
A very worst fiction.

The author mentioned that literature evidences. Good. From first Page onwards he concentrate more on Sex. Free Sex with any Girls by almost all the male characters.

He want write something against Brahmins, so he mentioned Chanakya got married, and his grand daughter is Indhirasenai.

A wonderful joke.

There is no doubt on Tamil kings Victory. There is no doubt on Karigal Chozhan's courageous personality.

Also the Author wanted to write against ritual ceremonies of Tamil Hindus. He should read at least the First Poem of Chilappathikaram.
Profile Image for புத்தக Lover.
4 reviews
September 1, 2025
I felt that he should have concentrated less in sex. Most of the scenes are unwanted, and I felt irritated sometimes while reading those lines. He should have focused more on character development or events. It is appreciated that he did his own research to write this book. His writing is marvellous and interesting. Sometimes, you might find yourself reading this book for hours. Not Boring! Everyone should try this book, who's interested in history and war fiction. It's one of the finest choices that exist with great writing.
Profile Image for Aargee.
163 reviews1 follower
September 5, 2023
Time spent well

மிகவும் அருமையான கற்பனையில் ஊடே சரித்திரமும் கலந்த சுவையான புதினம். எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் ஆகும் இது. ஆசிரியர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றி
5 reviews
June 30, 2020
வென்வேல் செண்ணி

Excellent narration of known to unknown facts, more over the narration showed the images in our mind and unknown or old Tamil words explained well...
Profile Image for Anandha Balasubramanian.
2 reviews
June 23, 2021
Amazing..

Great story. Wonderful read. Starting the next part. Enjoyed the flow and story telling style. Great experience. Keep up the good work.
1 review
August 20, 2021
Appa read it. He loved the writing. Comparing the author to Kalki, Balakumaran.
1 review
January 24, 2023
Awesome, Seat edging thriller. Interesting and must read book. Very well characterization, from start to end hero attitude and awareness on the situation all will go beyond the thinking 🤩😍🔥😎
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.