மனோரஞ்சிதம் தனது பதினோராவது வயதில் தாயை இழந்தாள். தந்தையும் காணாமல் போனார்.ஆனால் தந்தையுடைய நண்பர் சந்தானமும் அவர் மனைவி கருணாகரியும் பெற்றோரை விட மேலாக அன்பு காட்டி அவளை வளர்த்தனர்.சந்தானத்தின் தாய் அப்படிப்பட்ட உன்னத உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவளாக இருந்தாள்.அவளுடைய போதனையில் சந்தானத்தின் மகன் குணாளனும் மனோவை புழுவைப் போலவே நடத்தினான்.பாட்டியும் பேரனும் ஆடிய ஆட்டத்தில் மனம் நொந்து மனோ வீட்டை விட்டு வெளியேறினாள். ஒரு நாள் திரும்பி வர வேண்டும் !இவர்களிடம் தான் பணத்துக்காக அங்கே இருக்கவில்லை என்று நிரூபிக்க வேண்டும் ! என்றெல்லாம் எண்ணி சென்றாள். அவளது எண்னம் நிறைவேறியதா ?
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
அந்தஸ்த்துப் பேதத்தை முதன்மையாக்கி மனித மனங்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கே மற்றவர்கள் செய்யும் உதவி கவனத்தில் வராமல் போகும்.
தான் செய்த விபத்தைத் தனக்காக நண்பன் ஏற்றுக் கொண்டு ஆயுள் தண்டனை கைதியாக இருப்பதால் அவனின் மகளான மனோரஞ்சிதத்தைத் தன் வீட்டு பெண்ணாக வளர்க்க அழைத்து வந்த சந்தானத்தின் செய்கை அவரின் தாய்க்குப் பிடிக்காமல் போகுது.
தன் பேச்சை மகன் கேட்காமல் போனதால் பேரன் குணாளனிடம் மனோரஞ்சிதத்தைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கப் பதின் பருவத்தில் இருந்தவனும் அதையே நம்பிவிடுகிறான்.
தன்னைப் பற்றி மோசமாகக் குணாளன் நினைத்துக் கொண்டிருப்பதைத் தாங்க முடியாதவள் வீட்டை விட்டு வெளியேறி தன் படிப்பை முடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறாள்.
சந்தானத்தின் இறப்பு அவரின் மனைவியைத் துவண்டு போகச் செய்திருப்பதால் அவர்களைத் தேற்றும் பொருட்டுச் சில நாட்கள் அங்கேயே தங்கி இருக்கும் மனோரஞ்சிதத்தின் மேல் குணாளனின் கவனம் விழுகிறது அதுவும் தந்தையின் உயிலில் இருவரும் அவர் மணக்க வேண்டும் என்று சொன்னது அவனுக்குச் சாதகமாகவே இருக்கிறது.
சந்தானத்தின் தாயார் மேலும் மேலும் மனோரஞ்சிதத்தை அசிங்கப்படுத்திக் கொண்டே போக அதைப் பொறுத்து கொண்டிருந்தவளுக்கு விடுதலையாகி வந்த தந்தையைச் சொன்ன கொடும் சொற்களைத் தாங்க முடியாமல் அவருடன் வெளியேறும் நேரத்தில் சொல்லப்படும் உண்மை அம்முதியவளை மாற்றிவிடுகிறது.
மிக மிக அருமையான கதை. மனோரஞ்சிதம் கருணாகரிஇருவரின் பாசமும் அன்பும் மிக அருமை. குணாளன் தன் தவறு அறிந்து மன்னிப்பு கேட்டு மிகவும் உயர்ந்துவிட்டான். பாட்டியும் தாத்தாவும் மனோ குணா திருமணம் நடத்திவைக்க எல்லாம் சுபம்