என்னோடு இப்புவனத்தில் வாழும் பெண்ணை அறியும் முனைப்பில் நான் கொண்ட சிறுபுரிதல் இவை, பல்வேறு சூழல்களில் முகப்புத்தகத்தில் எழுதியவை. நான் சொல்வதே சரி என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. இவற்றில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். அப்படி இருக்குமாயின் நீங்களே உங்களுக்குள் அலசி ஆராய்ந்து ஒரு புதிய புரிதலை நோக்கி நகர இவ் அத்தினி உதவும் என்று நம்புகிறேன். அன்பு.