ஒடிசாவில் கோலோச்சி இருக்கும் கோர்த்தா கேங்கிற்கு இன்னொரு பெயர் மைனிங் மாஃபியாஸ். அங்கே இயங்கும் கனிம சுரங்கங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க, அவர்கள் எதையும் செய்வார்கள். கொலை, கொள்ளை, கடத்தல் எதற்கும் அஞ்சாத அந்த அரக்கக் கூட்டத்தின் முதன்மை தளபதி அவன்.. அர்ஜுன்... மனதின் மெல்லிய உணர்வுகளை அறிந்திராதவன்.. கடுமையானவன்.. இரக்கமற்றவன்.. கொலைகாரன்.. அவன் கையில் பணையக்கைதியாக மாட்டிக்கொள்ளும் மிருதுளா, எதிர்கால கனவுகளோடு பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் ஒரு கல்லூரி மாணவி. இரக்கமற்ற அந்த அரக்கன் தன் சிக்கிக் கொண்ட அந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய போகிறான்?
Awesome.what a flow of writing.very interesting .all about the mafia and the under ground world explained in an awesome way taking us to a different world no doubt.great work.