நாயகன் நிகிலன் சென்னையின் புகழ் பெற்ற அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆக இருக்கிறான்..31 வயது முடிந்தும் நிகிலன் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தன் அன்னையின் கெஞ்சலுக்கும் வற்புறுத்தலுக்கும் செவி சாய்க்காமல் பிடிவாதமாக இருப்பவன். நாயகி மதுவந்தினி. மிகவும் பயந்த சுபாவம் உடையவள். விதிவசத்தால் எதிர்பாராத விதமாக கட்டாயத்தின் பேரில் இருவரும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். விருப்பமின்றி இணைந்த இருவரும் தங்கள் திருமணத்தை ஏற்று கொண்டார்களா? இவர்களை வைத்து அந்த சிங்கார வேலன் ஆடும் ஆட்டம் என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த கதையை படியுங்கள்.. இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதையாகும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..