நாயகன் ஆதித்யா ஒரு ப்ளே பாய்.வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்க வேண்டும். எந்த கமிட்மென்ட் ம் இருக்க கூடாது என்ற கொள்கையில் வாழ்பவன். தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்தவன் வாழ்வில் குறுக்கே வருகிறாள் நாயகி பவித்ரா. வழக்கம் போல இருவருக்கும் ஆரம்பத்தில் முட்டி கொள்கிறது. அவனுடைய அழகையும் அந்தஸ்தையும் கண்டு மற்ற பொண்ணுங்களை போல தன்னிடம் வழிந்து நிற்காமல், தன் மீது வந்து விழாமல் தன்னை எதிர்த்து நின்ற நாயகி பவித்ராவை பழி வாங்க திட்டமிடுகிறான் ஆதித்யா. அதற்காக அவளை ஏமாற்றி பேருக்காக அவளை மணந்து மனைவியாக்கி கொள்கிறான்.அதை கண்டு கொண்ட பவித்ரா அவன் எண்ணம் ஒரு நாளும் நிறைவேறக்கூடாது என அவனை எதிர்த்து நிற்கிறாள்.