டால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அக்பர், ஐன்ஸ்டைன், அம்பேத்கர், அமிர் குஸ்ரோ, சாக்ரடீஸ், புரோமிதியஸ், ரொமிலா தாப்பர் என்று இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களைக் கோத்து தந்திருப்பதோடு... ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன்.
இந்தியா என்றால் என்ன என்று தாகூர் எழுதிய கட்டுரையின் சாரம், கிரேக்க இதிகாசங்கள், நல்ல இலக்கியங்கள் என பலவற்றையும் உள்ளடக்கிய இளைஞர் குழந்தைகள் என யாவரும் படிக்கக்கூடிய கட்டுரைகளை உள்ளடக்கிய அழகிய புத்தகம்.