Jump to ratings and reviews
Rate this book

பிரபாகரன்: வாழ்வும் மரணமும்

Rate this book
பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது. ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக.

223 pages, Kindle Edition

First published January 1, 2009

180 people are currently reading
2004 people want to read

About the author

Pa Raghavan

122 books285 followers
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.

Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.

Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
204 (42%)
4 stars
148 (30%)
3 stars
76 (15%)
2 stars
21 (4%)
1 star
33 (6%)
Displaying 1 - 30 of 33 reviews
Profile Image for Avanthika.
145 reviews854 followers
September 25, 2015
தமிழ் ஈழம் என்ற கனவுக்கு பின்னிருக்கும் அரசியலும் ரத்தகளமும் சார்ந்த பிரபாகரனின் வாழ்கை பயணம். எண்ணற்ற/விளக்கமற்ற கேள்விகளுக்கு விடையை எவ்வாறு வரும்கால வரலாறு கண்டறியப்போகிறது ?! LTTE , அரசியல் பேச்சுவார்த்தைகள், இருநாட்டு அரசின் இரட்டை முகங்கள், ஒரு இனத்தின் ஒட்டு மொத்த அழிவு என இந்த நூற்றாண்டின் மிக பெரும் இன வீழ்ச்சியை அறிந்து கொள்ள சிறந்த புத்தகம் :)
Profile Image for Muthu.
27 reviews2 followers
August 24, 2022
பிரபாகரனை போற்றியும் இந்த நூல் பாடவில்லை தூற்றியும் பாடவில்லை ஒரு நேர்கோட்டில் நின்று அவர் செய்த சரி தவறுகளை விமர்சித்து பேசியிருக்கிறது கண்டிப்பாக அவருடைய கதையை படிக்கும் போது ஒரு தலைவன் எப்படி இருக்கணும்னு நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம்
இந்த புத்தகம் எனக்கு கூறிய விஷயம் உலகத்தில் எந்த இனமும் மக்களும் வன்முறை மூலமாக விடுதலை அடைய முடியாது வன்முறை வழியாக பலரை நாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம் ஆனால் அதை வைத்துக்கொண்டு விடுதலை அடைய முடியாது பிரபாகரனின் ஒரு சிறு தவறு அவருடைய மொத்த கனவுக்குமே முழுக்கு போட்டு விட்டது
Profile Image for Balaji M.
221 reviews14 followers
August 31, 2024
பிரபாகரன் வாழ்வும் மரணமும் - பா.ராகவன்

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றிய தொடர், புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

'எந்த காலத்திலும் இலங்கை ஈடேறாது' என்பது இராவணன் காலத்திலிருந்தே, கதையாக இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஈழத்தின் மீது எப்போதும் கரிசன பார்வை உண்டு...அந்த எண்ணமோ என்னவோ, 'கருப்பு ஜூலை' எனும் ஈழத்தமிழர்கள் இனவெறிக்கு தாக்குதலுக்கு உள்ளான(1983) ஜூலை மாதத்தில், நம்மையறியாமலேயே இந்த புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது.

அந்த வகையில், இலங்கை ஈழத் தமிழர்களுக்கு, இலங்கையின் சுதந்திரத்திலிருந்தே பிரச்சனை தொடங்கியது முதல் சிங்கள இன வெறி வெளிப்பட்டது, அதை எதிர்த்து தமிழர்கள் அரசியல் கட்சி தொடங்கி அறவழி போராடுவது, சிலர் அறவழி ஒத்துவராது என ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகி, குழுக்களாக உருவானது, அதிலும் ஒன்றுக்கு ஒன்று அடித்து கொண்டது, துரோகிகள் சூழ் போராட்ட குழுக்கள், உலக அரசியலின் பார்வையை இலங்கைப்பக்கம் திருப்பியது, இந்திரா மற்றும் எம்ஜிஆர்-யின் ஈழ ஆதரவு, இலங்கை ராணுவ/அரசியல் கொலைகள், அமைதிப்படை, தமிழிககத்திலும் விடுதலை புலிகள் நடத்திய படுகொலை வெறியாட்டங்கள், தமிழ்நாட்டில் ஆட்சி களைப்பு, ராஜீவ் படுகொலை, போர் நிறுத்தங்கள், பிரபாகரன் மரணம், ஈழத்தின் தற்போதைய நிலை என மொத்த கதையையும் நியாய கற்பிதங்களை யார் பக்கமும் இல்லாமல், ஒரு பெரும் போராட்ட சரித்திரத்தை புத்தக வழியில் காட்சிகளாக பார்க்க முடிந்தது.

பிரபாகரன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆகச்சிறந்த ஆளுமை, தேர்ந்த நிர்வாகி என்பதற்கு பல சான்றுகள் சம்பவங்களாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. இல்லையெனில் இவ்வளவு பெரிய மக்கள் சக்தியை போர் போராளிகளாக கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்வி எழாமலில்லை.

பல போராளிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், திரு சீமான் தனது பிரசங்கங்களில் சொல்லும் பெயர்களை காட்டிலும் அதிகம் அறியமுடிகிறது.


புத்தகத்தில் சில முக்கியமான வரிகளை Markerஆல் குறிக்கலாம், ஆனால் கிட்டத்தட்ட புத்தகத்தில் அனைத்து வரிகளையும் குறிக்கும்படியாய், விடுதலை புலிகளை பற்றியும் பிரபாகரன் பற்றியும் அத்தனை தகவல்கள் பொதிந்து தரப்பட்டிருக்கிறது.

எவ்வளவு கர்ண கொடூர சரித்திரத்தையும், ஒரு திரைக்கதையை சுவாரசியமாய் சொல்வதில் திரு பா.ராகவன் சமர்த்தர் என்பது இப்புத்தகத்திலும் நிரூபித்துள்ளார்.

விடுதலை புலிகளின் மீதோ பிரபாகரன் மீதோ எந்த விருப்பு வெறுப்பின்றி அவர்களின் சரித்திரத்தை, ஒரு சார்பாக இல்லாது எழுதப்பட்ட புத்தகத்தை வாசிக்க வேண்டுமெனில், நிச்சயமாக பரிந்துரைக்க படவேண்டிய புத்தகம் இது.




புத்தகத்திலிருந்து...

(See Highlights)
Profile Image for Naresh Kumar.
1 review2 followers
April 23, 2013
I think this would be a beginning for younger generation like me to know about tamil eelam and mighty warrior Velu Pillai Prabhakaran. Dream on Tamil eelam continues...
Profile Image for Vidyasagar Santhanagopalan.
50 reviews4 followers
March 25, 2019
Must read to understand the great tamil leader and the reasons behind his 33 year fight. Even though this book does not comprehensively cover his life, it's definitely a good start. Loved it!
Profile Image for Praveen.
86 reviews5 followers
October 19, 2018
1. Wanna Thank and appreciate Pa Raghavan for his sincere effort to take me to the timeline of my ancestors.
2. Every pages contains emotions relationships friendship trust confidence truth , I can say everything
4. A lot of research has done for this book. Wonder how does the author got these many contacts
5. Every reader can read, but very few can experience this book.
Note :
Readers : please do not have any conclusion after reading this book.
Known is a drop, unknown is an ocean.
188 reviews4 followers
February 25, 2015
This book written by pa.raghavan as usual has lot of research works that could be noticed as we start turning the pages. Whenever I see news I was not aware of tamil eelam people. I just know tamil people are being killed in srilanka kinda genocide. After reading this book I got clear understanding on where the issue raised and what is the real demand and suffering for tamil people. Really great read for younger generation like me.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
June 9, 2023
இது எப்பக்கமும் சார்பில்லாமல் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். நடந்தவற்றைத் திரும்பிப் பார்க்கையில் உணர்ச்சிவயப்படாமல் இருக்க முடியவில்லை. நடுநிலையாகப் பார்ப்போர்க்கும் மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு மாபெரும் மனிதராகவே தெரிகிறார்.
நேசநாடான இந்தியாவும் துரோகமிழைத்து விடுதலை உணர்வையும் சமத்துவத்தையும் கழுவிலேற்ற, பல கொடுங்கோற்கைகளால் கழுத்து நெரிக்கப்பட்டு மாய்கிறது சமத்துவமும் விடுதலையுணர்வும். இதைத் தமிழர் பிரச்சினையாய் மட்டும் பார்க்கவியலாது மனித குலத்திற்கேயான பிரச்சினையாய் அணுகுவதே ஏற்புடைத்து.

பிரபாகரன் அவர்களின் சுபாவமே அநியாயத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாததாகவே இருப்பது தெரிகிறது.
தமிழர் ஒருவர் காரணமின்றித் தாக்கப்பட்டதைப் பற்றி கோயிலில் இறைப்பணி செய்யும் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை இன்னொருவருடன் இப்படிச் செய்தால் என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். அப்போது ஐந்து வயதேயான பிரபாகரன் தன் தந்தையிடம் கேட்கிறார் " அப்பா, நாம் ஏன் அவர்களைத் திரும்பி அடிக்கவில்லை ? " என்று.
பிரபாகரனின் அப்பா பின்வரும் படி பிரபாகரனைப்பற்றி கவலைப்படுகிறார் " அவன் படிக்கவே மாட்டேங்கிறான். ஆனால் எல்லா நேரமும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கிறான் ".
பிரபாகரனின் போக்கைக்கண்டு ஐயமுற்ற வேலுப்பிள்ளை காந்தியைப்பற்றியும் இந்திய விடுதலைப்போராட்டத்தில் அகிம்சையின் பங்கையும் போதிக்கிறார் ஆனால் ���ிரபாகரனை போசும் பகத் சிங்குமே ஈர்க்கின்றனர்.
பல்லாண்டுகளாக தமிழர்க்கெதிராய் இழைக்கப்பட்ட அநீதிகளைக் காந்திய வழியில் எதிர்த்து வந்த ஈழத்தமிழர் தாக்கப்படுவதையும் அழித்தொழிக்கப்படுவதையும் கண்டு பொறுக்க முடியாத பிரபாகரன் ' நாம் போராடும் வழிமுறையை நமது எதிரியே தீர்மானிக்கிறான் ' என்று கூறி வன்முறையே தமிழர் விடுதலைக்கான வழியென முன்மொழிகிறார். அந்த முடிவே விடுதலைப் புலிகள் எனும் இயக்கத்திற்கான விதையை விதைக்கிறது.

இயக்கம் ஈழத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஒரு அசைக்கமுடியாதவிடத்தைப் பிடித்த பின்பு இந்தியாவே கூட உளவு வேலைகளில் ஈடுபட்டு இயக்கத்தார் மனதைமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையில் ஊடகத்தார் பிரபாகரனைப் பார்த்து இந்தக்கேள்வியைக் கேட்கின்றனர், "வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்த பெரும் பாடம் என்ன ?". அதற்கு அண்ணன் தந்த பதில் மறக்கமுடியாதது
" இயற்கை எனது நண்பன்
வரலாறு எனது ஆசான்
அனுபவம் எனது தத்துவ ஆசிரியர்'.

விடுதலையையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவும் எண்ணற்றத் தோழர்கள் பட்டபாடெல்லாம் உலக அரசியலுக்கு இரையானது வரலாற்றில் நடந்த பெரும்பிழையாகும். அது இன்றும் தமிழர் அமைதியைக் குலைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
103 reviews1 follower
March 7, 2020
நடுநிலையான வாதத்தை எடுத்துவைக்கும் புத்தகமாக எனக்கு தோண்றவில்லை. பிரபாகரனின் பக்கம்தான் பெரும்பாலும் பேசுகிறது. அதில் ஒன்றும் தவறில்லை. இருந்தாலும் முழுக்க பிரபாகரனின் பக்கம் ஆதரிப்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. வன்முறைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது உண்மைதான், ஆனால் யாருக்காக போறாடுகிறோம் என்பதையே ஒரு கட்டத்தில் விடுதலை புலிகள் மறந்துவிட்டார்கள் போல. இறந்த அத்தனை தமிழர்களும் இலங்கை ராணுவத்தால் தான் கொல்லப்பட்டார்களா? விடுதலை புலிகளால் இறந்துப்போன தமிழர்கள் யாவும் தற்செயலாக ஏற்ப்பட்ட மரணங்கள் தானா? பிரபாகரன் நேரடியாக தமிழர்களுக்கு எந்த தீங்கும் நிகழ்த்தாதிருக்கலாம், நினைக்காதிருக்கலாம், ஆனால் அவர் உருவாக்கி, தலைமை வகித்த விடுதலை புலிகளால் ஆன மரணங்களுக்கு அவர் சிறிதேனும் பொறுப்பேற்றுதான் ஆகவேண்டும்.

இது எல்லாம் தாண்டியும் விடுதலை புலிகளின் மைய கொள்கையை நான் மட்டும் அல்ல, அனைத்து தமிழர்களும் ஆதரிக்கவேண்டிய ஒன்று தான்.
Profile Image for Madhan (மதன்).
83 reviews20 followers
November 29, 2018
என் 50வது புத்தகமாக (2018)
பிரபாகரன் வாழ்வும் மரணமும் by
பா. ராகவன்•
.
I don’t know how to review this book. So I’m leaving it in silence. But quotes might speaks.
.
•வேலுப்பிள்ளை பிரபாகரன்•
.
•சாத்திரங்கள் பிணம் தின்னத் தொடங்கும்போது யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிடும்.•
.
•சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை.•
.
•இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.•
.
•முப்பதாண்டு காலமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மனிதரின் நியாயங்களை ஏற்க இயலாதுபோனாலும் புரிந்துகொள்ளச் சற்று முயற்சி செய்யலாம். தவறில்லை.•
.
•ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேம்பிக்கிடக்கிறது. இன்னோர் இனம் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது.•
Profile Image for Saravanan.
356 reviews20 followers
August 13, 2018
- பிரபாகரனது நியாயங்கள் முற்றிலும் சரியானவையாக இல்லாது போயிருந்தால் அரசாங்கங்கள் வேண்டாம், மக்களே நிராகரித்திருப்பார்கள்.
- அமெரிக்காவின் உதவியை நாடலாம் என்று முடித்திருப்பது, கொலை செய்தவனிடமே நியாயம் கேட்பது போலத்தான்.
இந்திய அரசும், அதன் அமைதிப்படையும் ஈழத்தில் செய்த அட்டூழியங்களை படிக்கும் போது சாதாரண மனிதன் எனக்கே அவ்வளவு கோபம் வருக்கிறதெனில் தமிழினத் தலைவருக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்?
25 reviews2 followers
June 14, 2021
ஈழத் தமிழர்களுக்காக போராடிய பிரபாகரனைப் பற்றி அறிவதற்கான ஒரு வாய்ப்பு. போராட்டங்கள் பற்றியும் இந்திய, தமிழக, இலங்கை அரசுகளின் உதவிகள் மற்றும் போர் சமயங்களில் அவர்கள் செய்த செயல்கள் அவர்கள் போட்ட திட்டங்கள் பற்றி அறிவதற்கான ஒரு வாய்ப்பு இந்த புத்தகம்.

ஈழத் தமிழர்களுக்காக பிரபாகரன் போராடியது தங்களைப் பற்றி ஒரு அளவுக்கு எடுத்துக் கூறுகிறது.

ஈழத் தமிழர்களின் தலைவனாக பிரபாகரன் உருமாறிய கதைகளையும், அவர்களுக்கு இடையே நடந்த அரசியல் நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள ஒரு ஆவணம் இந்த புத்தகம்.
4 reviews
August 11, 2023
போராட்டம் எங்கள் வாழ்வின் நியதி என்று கூறிய இன்குலாபின் கூற்றே நினைவுக்கு வருகிறது. பிரபாகரன் என்னும் போராளியின் உன்னதமான போராட்ட வாழ்வை மிகைகள் இல்லாமலும், அவர் தரப்பு கோரிக்கையில் இருந்த நியாயங்களை மறைத்து அவரை தீவிரவாதியாக சித்தரித்து வைத்திருக்கும் உலகத்தின் சித்தரிபுகளையும் உடைத்து காட்டுகிறது இந்த எளிமையான புத்தகம்.
2 reviews
May 8, 2019
This book is way good but it has no timeline way of story as it jumps between the incidents. It almost covers every important historical moments yet it describes only in brief! So this book I recommend for one doesn't know the history of LTTE and THALAIVAR Prabhakaran 😇
Profile Image for Sivaramakkrishnan.S.K.
84 reviews1 follower
January 4, 2018
A good book on life of Prabhakaran and LTTE. Recommend for neutral readers to learn about prabhakran and what made him great leader among Tamil diaspora.
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
January 18, 2022
பிரபாகரன் பற்றிய மிக அடிப்படையான அறிதலுக்கும் தெளிவான புரிதலுக்கும் இப்புத்தகம் உதவும்.
Profile Image for Sriram Mangaleswaran.
175 reviews3 followers
May 16, 2022
Nice information but the facts are not much deep, this can be taken as facts and cannot be correlated
Profile Image for KB's Odyssey.
13 reviews
January 25, 2022
சமூகத்தில் சமநிலையை அடைய ஆயுதம் எடுத்து போராட வேண்டுமென்ற உணர்வும், அதற்கான தேவையும் இருப்பின் அதை ஒரு இயக்கமாக மாற்றி அதில் கட்டுப்பாடுகளை செயல்படுத்தி அந்த இயக்கத்தை வழிநடத்தி இருக்கும் பிரபாகரன் அவர்களின் போராட்ட வாழ்வின் துணுக்குகள் அடங்கிய பதிவு.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் சந்திக்க ஏற்படும் அரசியல் தலையீடுகள், துரோகங்கள், இழப்புகள், இடையூறுகள், இன்னல்கள் என அனைத்தையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் பா.ராகவன்.

ஈழம் என்பதும் விடுதலை புலிகள் என்பதும் அறை நூற்றாண்டு வரலாறு. அவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுமா என்றால் "இல்லை" என்பதே பதில். ஆனால், அதனை பற்றிய ஒரு புரிதலை தெரிந்து கொள்ளலாம்.

ஈழ போராட்ட இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகளை சிறு சிறு தகவல்களாக நம்க்கு அளித்து இருக்கிறார் ஆசிரியர் ராகவன்
Profile Image for Krishna Priya.
16 reviews4 followers
June 18, 2021
பா.ராகவன் எழுதிய புத்தங்களில் நான் முதலில் வாசித்த புத்தகம் இது தான். சிறுவயதில் என் அப்பா மூலம் தலைவர் பிரபாகரனை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவரை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இப்புத்தகத்தை வாசித்தேன்.என் ஆர்வத்திற்கு தீனி போடுவதாக அமைந்தது இந்நூல்.

தலைவர் பிரபாகரனது கொள்கைகள் சரியாக இல்லாமல் போயிருந்தால் மக்களே அதனை நிராகரித்து இருப்பார்கள்.இலங்கை அரசும் ,அமைதிப்படை என சொல்லப்பட்ட சாத்தானின் படைகளும் ஈழ தமிழர்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.வலி நிறைந்தது.

சிங்களர்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சனையில் தொடங்கி, வரலாற்றில் அங்கு நடைபெற்ற முக்கியமான சம்பவங்கள் என அனைத்தையும் ஓரளவு விரிவாக விவரித்துள்ளார் பா.ராகவன். விடுதலைப் புலிகள், தலைவர் பிரபாகரன் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.

ஓரினம் உரத்து அழக்கூட தெம்பில்லாமல் தேங்கிக்கிடக்கிறது.இன்னோர் இனம் இனிப்பு வழங்கி ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது.இந்தியா துரோகம் செய்யாதிருந்தால் தமிழீழமும் மலர்ந்திருக்கும்.
Profile Image for Mohamed Ussain.
11 reviews1 follower
April 21, 2024
Mohamed Ussain

One of the best book which I read recently... M
ust read book lovers... Complete understanding of what happened in final war...instead of listening from others
..
Profile Image for Gowtham Mahalingam.
34 reviews3 followers
May 15, 2015
Informative in Pa.Ra 's style. Surely will help people who like to know about LTTE rise and crisis and political negotiations between Indian and Srilankan government and LTTE.
Glad to know about many groups other than LTTE among srilankan tamils like PLOTE and TELO etc.,

Worth d read
Displaying 1 - 30 of 33 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.