உண்மையான வாசிப்பனும் அடையும் பேரானாந்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது .நாம் வாங்க நினைக்கும் புத்தகத்தை தேடி அலைந்து திரிந்து கடைசியில் கண்டடையும் போது எற்படும் மன எழுச்சி சொல்லி மாளாது. கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை என்ற நாவலில் போக்குவரத்து உழியர்கள் படும் வேதனையை அத்தனை அழகாக பதிவு செய்திருப்பார். அதை படித்த பின்னர் டிரைவர், கண்டெக்டர் மேல் மரியாதை கொஞ்சம் கூடியது. ஒரு நாள் இரவுப் பேருந்து பயணத்தில் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டு சாகவாசமாய் என் அருகில் உட்கார்ந்த அந்த கண்டெக்டரிடம் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி கூறினேன். அவர் மிகவும் ஆர்வமுடன் கேட்டார். "எங்க பிரச்சினை பற்றிலாம் எழுதிருக்காரா சார், அந்த புக் எங்க சார் கிடைக்கும்...