முதலில் மனித வடிவில் வந்த தெய்வமாம் எல்லாம் வல்ல பகவான் கிருஷ்ணர் திருவடி சரணம் என்று அவரைத் தொழுகிறேன். சரணாகதி தத்துவத்தைக் கூறுவதுதான் பகவத் கீதை. எல்லாம் பகவான் கிருஷ்ணரே என்பதுதான் அதன் சாராம்சம். மானுடக் கடமைகள் பற்றி சொல்லும் வேதம் என கீதையைச் சொல்லலாம். பகவத் கீதை எப்படி உயர்ந்த இடத்தைப். பிடித்தது? உலக மக்களின் எல்லா தேவைகளையும், அவர்களின் நன்மை-தீமைகளையும், கடமைகளையும் அது முன்னிறுத்துவதால்தான் ஒருவன் நரன். இன்னொருவன் நாராயணன். இந்த இரண்டு பேரும் குருசேத்ர யுத்தகளத்தில் ஒருசேர இருந்தபோது…….பிறந்ததுதான் இந்த கீதை. அது சாதாரண மானிடருக்கு எவ்வாறு ஞானம் ஊட்டுகிறது எனப் பார்ப்போம்.