Jump to ratings and reviews
Rate this book

செளந்தர்ய

Rate this book
இது ‘அபிதா' எனும் நாவலின் கதாநாயகி ஆகிய பெண்மணிக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன். கருவூலங்கள் எப்படிப் பிறக்கின்றன என்பது இன்னும் புரியாத வெளிச்சம்தான்.

‘சௌந்தர்ய' ஒரு ஏழை குருக்கள் குடும்பத்தைப் பற்றியது. இப்பொழுது விசாலாட்சியும் மறைந்து விட்டாள். அவளுடைய கணவன் வைத்தியநாத குருக்களும் காலமாகி விட்டார். அவர்களுக்கு சந்ததி கிடையாது. எப்படி வந்தார்களோ அப்படி போய் விட்டார்கள். அவர்கள் வாழ்ந்தவரை அந்த வாழ்க்கை எனக்குக் கவிதையாகவே படுகிறது.

- லா. ச. ராமாமிருதம்

106 pages, Kindle Edition

First published September 1, 2004

Loading...
Loading...

About the author

La Sa Ramamrutham

37 books64 followers
Lalgudi Saptarishi Ramamrutham was a veteran Tamil novelist, having authored 300 short stories, 6 novels and 10 collections of essays.

Born in 1916, he was a native of Lalgudi and one of the writers of the Manikodi era. He started writing when he was 20 originally in English and then changed over to Tamil. He worked in Punjab National Bank for 30 years and settled down in Chennai after his retirement.
La.Sa.Ra. worked for three years as a typist in Vauhini Pictures, which then produced a series of landmark Telugu films like "Vande Mataram", "Sumangali", and "Devata". It was then K. Ramnoth, another South Indian movie director, told La.Sa.Ra. not to waste his gift indicating that his hoping for a career in films would not be salutary. He ultimately became a banker but he continued with his writing.

He won the Sahitya Akademi Award in 1989 for Chintha nathi, a collection of autobiographical essays.

Source: http://en.wikipedia.org/wiki/La_Sa_Ra

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (42%)
4 stars
11 (42%)
3 stars
4 (15%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews224 followers
December 7, 2020
தமிழுக்காகவும், தமிழின் சுவைக்காகவும் தாரளமாக வாசிக்கலாம். அருமை!

நான் லா.ச.ராமாமிர்தம் அவர்களின் Classic நாவலான 'அபிதா'வை வாசிக்க உந்துதலாக இருந்த புத்தகம் 'சௌந்தர்ய'.

இப்புத்தகத்தில் லா.ச.ரா, அபிதா என்ற நாவலை எழுதித் தூண்டுதலாக இருந்த, தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான பெண்ணான ‘விசாலி’ பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

மேலும் நாவல் பற்றி: https://youtu.be/OhoguAaNeXo

#booktagforum
1 review
July 25, 2022
La sa ra’s writings are divine… u need that godliness to feel … like the incense from the temple …. Read and feel that divinity …
Profile Image for Balaji M.
228 reviews14 followers
December 3, 2021
“சௌந்தர்ய” - லா ச ராமாமிர்தம்
=============================
80 பக்கங்களே கொண்ட புத்தகம். இது லா.ச.ரா அவர்களின் சுயசரிதையா? புனைவு நாவலா? உண்மைச் சம்பவமா? எனப் பிரித்தறிய முடியாத அளவிற்கு கலந்துகட்டி எழுதியுள்ளார்.

முதல் பகுதி, "சௌந்தர்ய" மற்றும் "சௌந்தர்ய காண்டம்" என்ற தலைப்பிலும், இரண்டாம் பகுதி "விசாலி" என்ற தலைப்பிலும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அனைத்துக்கும் அடிநாதமாக 'சௌந்தர்ய' எனும் பதம் பொருந்துபடி இயற்றப்பட்டுள்ளது.

சௌந்தர்ய/சௌந்தர்ய காண்டம்:
தனது கவித்துவமான எழுத்துநடைக்கு எழுந்த விமர்சனத்திற்கு, பதில் தரும் வகையிலும்...எது சௌந்தர்யம் என தனது ஞாபக சிதறல்களை கொண்டும் இந்த பாகம் படைக்கப்பட்டுள்ளது. அவரது ஒவ்வொரு காலகட்டத்தின் படிநிலையில் தாம் கண்ட அல்லது கண்டதாக எண்ணி அதில் லயித்ததையும், அதன் சௌந்தர்யத்தையும் நமக்கு சொல்கிறார்.

விசாலி:
முதல் நபர் பார்வையில் எழுதப்பட்ட இக்குறுநாவலில், லா.ச.ரா அவர்கள் தனது 80 களின் மத்தியில் முதுமையின் பயன்களை(!) அனுபவித்து வருகிறார். விசாலம் தவறிவிட்டதாக தந்தி வருகிறது. அவரது ஞாபக கூண்டிலிருந்து விசாலி எனும் விசாலம் அல்லது விசாலாட்சி பற்றிய அவரது நினைவலைகளை நம்கண் முன் விரிக்கிறார். தனது சிறுவயது முதலான நண்பனின் மனைவி அவள். அவ்விளம்பருவம் முதல், அவளுக்கும் தனக்குமுள்ள இனம்புரியாத ஈர்ப்பை, கதை நெடுகிலும் வர்ணித்து வருகிறார்.

அவளையே அபிதா/உண்ணா எனும் அபிதகுசாம்பாள்/உண்ணாமுலையம்மன் ஆக பிரிதொரு நாவலில் உருவாக்கியிருக்கிறார்.

மேலும், இக்குறுநாவலின் ஒருபகுதியின் மூலம், காஞ்சிபுரத்தை பற்றியும் அங்குள்ள கோவில் பூஜைமுறைகள், திருவிழாக்கள் பற்றியும் அறியக் கிடைக்கின்றது. கோவில் கைங்கர்ய பிராமணர்களின் பக்தியும் அவர்களது கஷ்ட ஜீவனமும் பற்றியும் கூறப்பட்டுள்ளது

ஆங்காங்கே ஆங்கிலத்தில் தாம் யோசித்ததை அப்படியே சிறு சொற்றொடராகவும் எழுதியுள்ளார். அது திரு லா.ச.ரா அவர்களே நம்மிடம் பேசுவதைப்போல அமைந்திருக்கிறது.

மறுவாசிப்பிற்கும் ஏற்ற புத்தகம் !!!


புத்தகத்திலிருந்து...

//
மௌனம் . சௌந்தர்யத்தின் உச்சக்கட்டம். இந்த ஞானத்தை அடைவதற்கு ரீம்ரீமாய் எழுதிக்கொண்டிருக்கிறோம். பேசிப்பேசி அழைக்கிறோம். நான் சொல்கிறேன் 'எழுத்தின் சாக்கில் எழுத்தாளன்தான் நிறைய பேசுகிறான்', பேச்சாளரைக் காட்டிலும்.
\\

//
என் கற்பனைவழி மடையுடைந்த காட்டாறு போல் அன்று., கண்ணீரின் தாரை போன்று மெதுவாக அதன் வழியில் வழிவது.
\\

//
வாழ்க்கையில் முதன் முதலாய் பார்த்த உடனேயே சில பேர் மீது இனம் தெரியாத பாசம் ஏற்பட்டுவிடுகிறது. வெறுப்பும் அப்படித்தான். போகப்போக உறவு அவர்களுடன் நெருக்கம் ஆகுகையில், ஆரம்பத்தில் கண்ட உணர்வு ஊர்ஜிதமாகிறது. அவர்களுடைய குணங்கள், குற்றங்களுக்கும் இந்த உணர்வுக்கும் சம்பந்தம் கிடையாது. "என்னமோப்பா, எனக்கு தெரியல, எனக்கு அவளை பிடிச்சு போச்சு" - என்று சொல்கிறோமல்லவா? இது நட்பு. காவிய காலத்திலிருந்தே இந்த உறவு இயங்கிக்கொண்டிருக்கிறது. விருப்பத்துக்கு உதாரணமாக ராமனும் அனுமனும். விரோதத்திற்கு துரியோதனனும் பீமனும். காலம் முற்ற முற்ற, இந்த உறவின் உக்ரஹம் நீர்த்துப் போய்விட்டது என்றாலும், இன்னும் அழிந்து போய் விடவில்லை. இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நேர்கையில் அதன் சிலிர்ப்பை மறுக்க முடியவில்லை.
\\

\\
ஆஸ்கர் வைல்ட் சொல்கிறான்: " It is better to have loved and lost than, never to have loved at all."
//

\\
குருக்கள் ஆசீர்வதிக்கிறார். "எல்லாம் அம்பாளுடைய பிரசாதம் தான்." என்னுள் பெருமிதம் பொங்குகிறது. இந்த சமயத்தில் நான் ஒன்று சொல்வது அவசியமாகிறது. கண்ணன் கேட்கிறான்: "இது என்ன சரித்திரமா? நாவலா? கட்டுரையா? சிந்தனை தொடரா? விசாலாட்சியின் சரித்திரமா? எதுவும் தொடர்ச்சியாக இல்லையே?"

இதற்கு பதில் நான் ஏற்கனவே இந்த எழுத்தின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டதாக ஞாபகம். எண்ணங்கள் தோன்றுவது சிதர் சிதராக உதிர்கின்றது. புத்தி பின்னால் அவைகளைக் கோர்வைப் படுத்துகிறது.

சௌந்தரியம் என்கிற பாவம் காலத்திற்கு அப்பாற்பட்டது. அழகை எப்படி , எப்போது, எதில் நுகர முடியும்? பக்குவத்தை அதன் தன்மையை வேலை கூற முடியாது. ஏதோ ஒரு தினுசில் என் மனசு திறக்கிறது. அந்திம காலத்தில் பேழை. உருவங்கள் முன்னும் பின்னுமாக ஒரு சமயம் ஒளிக்காட்டி, ஒருசமயம் இருள் காட்டி உள்ளேயே சுற்றி சுழன்று மறைகின்றன. நான் கண்டதைச் சொல்கிறேன். கண்ணன் எழுதுகிறான். அவரவர் விரும்பியதை கண்டு கொள்ளுங்கள். ஏற்கனவே பண்டையோர் சொல்லி விட்டு போய்விட்டார்கள். "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்."
இது லா.ச.ராவின் உத்தி இன்று உங்களை ஏமாற்ற போவதில்லை
//

\\
"எப்படியும் உங்க மாதிரி வருமா?" இப்பொழுது தனி சம்பளத்துக்கு சம்மதித்து விட்டார்கள். அமாவாசை உண்டியலிலும் பங்கு கொண்டு. அர்ச்சனை, அபிஷேகம், தர்பண தக்ஷணை கொஞ்சம் கூடுதல், பிச்சைக்காரனுக்கு சுக்ர திசை என்றால் புதையலா கிடைக்கும்? இரண்டு ரூபாய்க்கு பதில் அஞ்சு ரூபாய். அதுவே சந்தோஷம்தான். கிராமத்துக் கோயில் குருக்கள் பிழைப்பு இதுதான் . அன்றாட பிழைப்புதான் உன்னை, உடல் ஆரோக்கியத்தில் மனச்சுறுசுறுப்பில், கிடைத்தது திருப்தியிலும் வைத்திருக்கிறது என்று படியளக்கும் தெய்வம் வைத்திருக்கிறது
//
Profile Image for Chidambaram.
76 reviews1 follower
March 16, 2018
Another classic from ல சா ராமாமிர்தம்.
Displaying 1 - 4 of 4 reviews