தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள். தத்துவ விசாரம், சமூக விமர்சனம், வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும், பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று. இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு. -அரவிந்தன்
R. Narayanaswami (1919-1992), popularly known by his pen name Karichan Kunju, was a Tamil short-story writer and novelist who wrote mainly on historical themes.
It's a short story collection. Total 22 stories... I like it a few stories only. Some stories are simple and deep. I want to write a detailed review. But now my mindset is unstable for some reason. I will write another day..!
இது மாதிரிலாம் இன்னைய தேதிக்கு எழுதிட முடியாதுங்கிறது உண்மை… சும்மா நீதி நேர்மை நியாயம்னுலாம் கம்பி சுத்தாம இயல்பான கதைகள் கொடுத்திருக்கார் அவரோட நாவல போல…. படித்தவர்கள், யார் சமத்து, தங்க கழுகு கதைலாம் 🔥🔥
1) முன்னுரை : "எது நிற்கும்?" புத்தகம் மொத்தம் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.இந்த கதைகளை தொகுத்தவர் அரவிந்தன். அனைத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. முக்கியமாக சமூக ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள், குடும்ப உறவுகளின் நிலவும் போலித்தனங்கள், சுயநலன்கள், மரபு வழிபட்ட பார்வை கண்ணோட்டத்துடன் இருக்கக்கூடிய கதைகள் இந்த சிறுகதை தொகுப்பில் உள்ளது.
2) பகுப்பாய்வு : இந்த சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் பல இருந்தாலும் இங்கு நான் ஒரு சில கதைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
- “ குசமேட்டுச் ஜோதி” - இந்த சிறுகதை மக்களிடம் நிலவும் சராசரிஆன்மீக தேடலை பயன்படுத்தி போலி ஆன்மீக குருமார்களை உருவாக்கி அதன் மூலம் மக்களின் லாபம் அடையும் மனிதர்களைப் பற்றிய கதை. சராசரி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் அவனிடம் விற்று விடலாம் அதில் ஆன்மீகம் மிகவும் சுலபம்.
- "காதம்பரி" - எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதை காதம்பரி. இந்த கதை ஒரு எழுச்சி புலவன் அரசை எதிர்த்து பல பாடல்களை இயற்றுகிறான். பின்பு அரசு பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து எதிர்க்க முடியாமல் தன் நண்பர்கள் உடன் காட்டுக்கு தப்பி செல்கிறான்.
அங்கு காட்டில் வாழும் காதம்பரியை சந்திக்கிறான். அவர்கள் இருவரும் பிடித்து போய் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.அவளுக்கு நாட்டு மனிதர்களைப் போல உடை உடுத்தி அவர்களின் வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை.
புலவனும் தன் மனைவி ஆசையை நிறைவேற்றலாம் என்று நாட்டுக்கு செல்ல கிளம்புகிறான். புத்த அரசன் ஆட்சியில் நாடு இருக்கிறது. தன்னால் இந்த அரசுடன் ஒன்றி வாழ முடியுமா என்று குழப்பத்துடன் நாட்டில் குடியேறுகிறான்.
காதம்பரியின் ஆசைக்கிணங்க தனது பல சுய கௌரவங்களை விட்டு நாட்டு மக்களுடன் ஒத்து போய் சாமானிய வாழ முடிவு எடுத்த தருணம். அவனுக்கு அரசனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அரசன் அவனை அரசவைப் புலவனாக பதவி கொடுக்கிறான். புலவனுக்கு அரசாங்க குடியிருப்பு கொடுக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை தான் காதாம்ரியின் ஆசை. தன் மனைவிக்காக தனக்கு ஏற்பில்லாதவற்றையும் சகித்துக் கொள்கிறான். ஒரு நாள் வீட்டில் புலவன் எழுதி எழுதி பார்த்து கவிதைகளை கிழித்து போடுவதை கவனித்த காதம்பரி என்னவாயிற்று என்று கேட்கிறாள். அரசனைப் புகழ்ந்து கவிதை வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கிறார்கள் என்று காதாமரிடம் சொல்கிறான். கிளம்புங்கள் என்றால் காதம்பரி .எழுதிய கவிதைகளை எரிந்து விட்டு தன் கணவனை அழைத்துக் கொண்டு காட்டை நோக்கி செல்கிறாள். மறுபடியும் லட்சிய கவிஞனாக மாறுகிறான்.
3) எழுத்து நடை: கருச்சான் குஞ்சு அவர்கள் எழுத்து மிகவும் செம்மையான மொழி கட்டமைப்பு உடையது, தேவைப்படும் இடங்களில் மட்டுமே வட்டார மொழியை உபயோகப்படுத்தி மற்ற இடங்களில் அவருடைய மொழி ஆளுமை மூலம் கதை கட்டமைப்புக்கு தேவையான உரைநடை மொழியாக கதையை சொல்கிறார்.
4) வரலாற்று / கலாச்சார சூழல்: கரிச்சான் குஞ்சு அவர்கள் கும்பகோணம் தஞ்சை வட்டாரங்களில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர் அவர் கதை மாந்தர்களும் அவர் கதைகளும் அந்த பகுதியை சுற்றியே அமைந்துள்ளன முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள்/சூழ்நிலைகளை சார்ந்த கதைகள்.
5) முடிவுரை : லட்சியவாதிகளின் வாழ்வியல் தருணங்கள், சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை, போலி சித்தாந்தம் ஆளுமைகளை கேலி செய்தும். சில தத்துவ விசாரணமுள்ள( “மானுடம் வென்றதம்மா”) சிறுகதைகளும் இதில் அடங்கும். இந்த தொகுப்பு எனக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் ஏற்படுத்தியது மற்றும் கருச்சான் குஞ்சு எழுத்துக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த தொகுப்பு எனக்கு உதவியது.
கண்டிப்பாக தமிழின் சிறந்ததொரு சிறுகதை தொகுப்பு என்றே இந்த புத்தகத்தை சொல்ல வேண்டும் . ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம் . இலக்கிய வாசிப்பாளர்களுக்கு ஒரு அற்புதமான விருந்து என்றே இந்த புத்தகத்தை சொல்லலாம் . 90's 2k வாசிப்பாளர்களுக்கு பெரிதும் அறிமுகமில்லாத எழுத்தாளர் இவர் . சமூக மூட நம்பிக்கைகளை , குடும்ப உறவுகள் , மனிதனின் கொள்கை பிடிப்பு என்று சமூகத்தின் மனித மதிப்புகளை சொல்லும் கதைகளை அவர் கையாண்ட விதம் , புதிய எழுத்தாளர்களுக்கு இலக்கிய எழுத்தில் பாடங்கள் பல என்றே சொல்ல வேண்டும் . கண்டிப்பாக இலக்கிய வாசிப்பாளர்கள் படிக்கவேண்டிய புத்தகம் .