பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளரின் முகம் இவளை பார்த்ததும் கடுமையாக மாறியது. “ஒரு மாசமா எங்க போயிருந்த? நீ நினைக்கும் போது வர்றதுக்கும் போறதுக்கும் இது என்ன சத்திரமா இல்ல சந்தைக்கடையா?” என்று எரிந்து விழுந்தார். அவமானத்தில் குன்றிப் போய் தலை கவிழ்ந்து நின்றவள் மீது மேலும் பல வசைமொழிகளை அள்ளி வீசிவிட்டு,“பிரேக்ல ப்ரின்சிபால போய் மீட் பண்ணு.. நாளைக்கு பேரண்ட்ஸ்கிட்டேருந்து லெட்டர் வாங்கிட்டு வரனும்” என்று கடிந்துக் கூறி உள்ளே அனுமதித்தார். குனிந்த தலை நிமிராமல் உள்ளே வந்த மிருதுளா ஏதோ உள்ளுணர்வு உந்த நின்று திரும்பிப் பார்த்தாள். பகீரென்றது! அங்கே இடுங்கிய கண்களுடன் விரிவுரையாளரை முறைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.