சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.----வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் எ
இது எழுத்தாளர் திரு.சி . வெற்றிவேல் அவர்கள் எழுதிய "வானவல்லி " என்ற வரலாற்று நாவலை பற்றிய இரண்டாம் பாகத்தின் பதிவு. இது முற்கால சோழன், காவேரிக்கு குறுக்கே கல்லணை கட்டி, இரு புறங்களிலும் கரை எடுத்த, இமயம் வரை தன் புலி கொடியினை பறக்க விட்ட திருமாவளவன் என்று அழைக்கப்படும் "கரிகால சோழனின் " வரலாற்றை சொல்லும் புதினம்.
நான்கு பாகங்கள் கொண்ட , நாவலில் குறைந்த பக்கங்கள் கொண்ட பாகம் , இரண்டாம் பாகம்தான் .[400 பக்கங்கள்]. இந்த பாகம் முழுவதும் , கடலிலேயே பயணிக்கிறது. கரிகாற் பெருவளத்தான் பற்றிய , இந்த நாவலில், இந்த பாகம் முழுவதும் , கரிகாலன் ப்ரசன்னமாகவே இல்லை.
முதல் பாகத்தில் , Super man ஆக, உருவகிக்கப்பட்ட "விறல் வேல்" [கற்பனை பாத்திரம்] இந்த பாகம் முழுவதுமே ஆக்கிரமிதித்துக்கொள்கிறான். கொற்கை கடலில் விழுந்த "விறல் வேலை" , யவன கப்பல் காப்பாற்றுகிறது. கப்பலில் பல அடிமைகளை சந்திக்கிறான். அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்கிறான். அவர்களுக்காக கொள்ளையருடன் சேர நிர்பந்திக்கப்படுகிறான். எங்கேயோ கேட்ட , பார்த்த கதையாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ? .M.G.R நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்ததுதான் இந்த கதாபாத்திரத்தின் உருவாக்கம் , முக்கியமாக இந்த பாகத்தில், ஆயிரத்தில் ஒருவன் M.G.R யை பிரதிபலிக்கறது. அந்த படம் போலவே, அடிமை கூட்டத்தை வழி நடத்தி , விடுகிறான். M.G.R யை மனதில் வைத்தே, இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது போல இருக்கிறது. இந்த நாவலின் இரண்டாம் பாகம் , [ 30% ஆயிரத்தில் ஒருவன் +25% கடல் புறா +15% யவனராணி +10% கிளாடியேட்டர் +20% சுய கற்பனை +0% வரலாறு ] என்ற விகிதாச்சாரத்தில் எழுதப்பட்டு உள்ளது. இயக்குனர் அட்லீ , எப்படி திரைக்கதையினை உருவாக்குவாரோ, அதே உத்தியினை , இந்த எழுத்தாளரும் பின்பற்றி இருக்கிறார். நிறைய வரலாற்று தகவல்களை [ கரிகாலனின் வரலாற்றுக்கு சம்பந்தம் இல்லாத ] , நாவல் நெடுக கொடுத்துள்ளார் . நமது தொலைக்காட்சியில் , ஒளிபரப்பாகும் பல தொடர்களில், சில வாரங்கள் பார்க்காமல் போனால் கூட , அந்த தொடரை தொடர்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது .ஏனென்றால், அந்த காட்சிகள் , அந்த தொடரின் கதையினை , எந்த விதத்திலும் பாதிக்காது. அது போலவே , இந்த நாவலின் , இரண்டாம் பாகத்தை , தவிர்த்து விட்டாலும், கரிகாலனின் வரலாற்றை தெரிந்து கொள்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. இதனை கற்பனை நாவல் என்று எடுத்துக்கொண்டால், சுவாரசியமான , விறுவிறுப்பான கதை என்று சொன்னால் , அது மிகை இல்லை வரலாற்று நாவல் என்ற வகையில் எடுத்துக்கொண்டால் , நாவல் மட்டுமே இருக்கிறது. கரிகாலன் பற்றிய வரலாறு இல்லவே இல்லை என்பதே என் பட்டறிவு.
ஏற்கனவே பல கருத்துக்களில் கூறியது போல இந்த பாகத்தினை படிக்கும் பொழுது கண்டிப்பாக கடல் புறா, கிளாடியேட்டர், ஆயிரத்தில் ஒருவன் போன்றவை ஞாபகத்துக்கு வந்து செல்லும்.
புத்தகம் முழுவதும் விறல்வேலின் ஆதிக்கம் தான். ஆங்காங்கே லாஜிக் சறுக்கல்களும் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு தோன்றிய பிரதானமான சந்தகேம் என்பது, ஒரு மனிதன் எப்படி ஒரு பருவநிலையில் இருந்து பல மாற்றங்களை சந்திக்கிறான். உதாரணமாக விறல்வேல் கடல் பயணம், எகிப்து, கிரீஸ் என்று பல மாற்றங்களை சந்திக்கிறான். இவை அனைத்தையும் ஒரு சராசரி மனிதன் கடப்பது கடினமாக இருக்கும், மேலும் அவன் அதே வலுவோடு இருப்பானா என்பது மற்றும் ஒரு சந்தேகம். எனினும், இது வரலாற்று புதினம் என்பதால் இதை எல்லாம் உதறிவிட்டு தான் படிக்க வேண்டியிருக்கிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் நெடுந்தொடர்களில் சில வாரங்கள் பார்க்காமல் விட்டால் கூட நேயர்களால் எந்தவித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பார்க்க முடியும் . அதை போன்று தன் இந்த பாகமும். இந்த பாகத்தை படிக்காமல் கூட அடுத்த பாகத்தை படிக்கலாம்.
Good travel to egypt , Rome and Greece along with story... Able to relate the story with few movies.... Did learn much about Rome and Greece.. also came to know about himotep... Can't wait to read next part..... Thumsup..