I simply loveeee this!
This is one of those rarest pieces that prove:
1) A book doesn't need too much theory or too many pages to deliver a complex message about society.
2) A reader does not need theory or too many pages to fall in love with a book/story.
ஓர் கிடை செய்த அழிமானத்தை கருவாகக் கொண்ட கதையாயினும், ஆசிரியர் வெகு அழகாக அக்கிராமத்தின் வாழ்வியலையும், சமூக நீதிகளையும் உள்ளே கோர்த்திருக்கிறார்.
எல்லப்பனுக்கும் செவனிக்கும் சமூகம் தரும் தீவிர வேறுபாடு கதையின் முன்னிலையாக இருந்தாலும், எனக்கு அது வெளிப்படையான (obvious) ஒன்றாகவே தோன்றியது.
கதையின் இதர அம்சங்களே என்னை வெகுவாகக் கவர்ந்தன. கிடையில் நடக்கும் அதிகாலைச் சம்பவங்கள், ஆடுகளைக் கண்டறியும் விதங்கள், (அடேயப்பா! ஆட்டிற்கு எத்தனை பெயர்கள்!), "பாங்கு", "கிடை மறித்திருக்கிறது" என்பதன் முக்கியதுவம், ஊருக்குக் கட்டுப்படும் கிடைக்காரர்கள், உடனுக்குடன் கொடுக்கப்படும் நஷ்ட ஈடு, குறி கேட்டவர்களிடம் பஞ்சாயத்திற்கு முன்னர் கேக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, இவை அனைத்தும் நகரத்தில் வளர்ந்த எனக்குப் புதிதாகவும், மனதிற்குச் சரியாகவும் பட்டன.
இது போக, ஒரு ஒரு கதாபாத்திரத்தையும் ஆசிரியர் சுவைமிக விவரித்த விதமே மேலும் என்னை ஈர்த்தது! திம்மய நாயக்கரின் துப்பறியும் படலம், அவர் சொல்லும் விஷயங்கள், உண்மை தெரிந்த போதும் கூட்டத்தில் உடைக்காமல் ராமசுப்பா நாயக்கரிடம் தனித்து சொன்ன இங்கிதம், பொன்னுசாமி நாயக்கரும் அவர் மனைவியும் செய்யும் திருட்டு வேலைகள், செய்யாத தவறுக்கு அவருக்குக் கிடைத்த தகுந்த தண்டனை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கரிசல் மன்னனின் படைப்புகளில் இது என் முதல் வாசிப்பு. அவரின் எழுத்து நடையும், சுவாரசியமான கிராமிய விஷயங்களும் அவரின் இதர நூல்களை வாசிக்கத் தூண்டுகின்றன. It is a book that made me feel it could've been longer. Must read.