இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குறைந்துபோனதன் தரவீழ்ச்சியை நாம் வாழ்க்கைத்தரத்தில், சிந்தனைத்துறையில், அறிவியலில், தொழில்துறையில், கல்வித்துறையில், சினிமாவில், அரசியலில், நிர்வாகத்தில், கலைகளில் அன்றாடம் எதிர்கொள்கிறோம். அந்த வகையில் இஃதொரு தேசிய பிரச்சனை. அனைவருமே சேர்ந்து இதன் வேர்களை ஆராய வேண்டுமென்று விரும்புகிறேன். அனுபவத்தின் வழியாக கண்டடைந்த சில கோணங்களை இங்கு முன்வைக்கிறேன். எனக்குப் பலனளித்த சில வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். இதை வாசிக்கிற ஒருவர் என்னோடு முரண்படும் புள்ளிகள் சிறந்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
இந்த நூல் கண்டுகொள்ளப்படாமல் போவதற்குரிய அத்தனைச் சாத்தியங்களும் உண்டு. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
நான் வாசிக்க ஆரம்பித்தது, என்னுடைய 25 வயதுக்கு பிறகே.. இப்போது கிடைக்கின்ற வாசிப்பனுபவத்தை, இந்த புரிதலை, பதின்ம வயதுகளில் தவறவிட்டது மாபெரும் தவறாக நினைக்கிறேன். ஆரம்ப நிலை வாசிப்பாளர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
A person who has read about Periyar, Ambedkar, and Gandhi would give up their caste identities. If a person reads one of Salim Ali's book about the environment, he would not throw beer bottles in forest areas. If he has read one essay about sculptures, he wouldn't write "Julie, I love you" on the sculptures or cave paintings.
This is the first time I am reviewing a self help motivational genre, primarily because this pertains to the area that I can relate to - Reading and the importance of it. 🌸 A collection of 23 short chapters, 'How to Read' by Selventhiran is thought provoking, written to target the Non Reader audience. On the basis of few stats and figures, he showed how the satisfaction of reading a book that used to persist in most of the people, is gradually dwindling as the newer generation's interests are shifting to other sources of entertainment. Which is quite true. Quite a many friends of mine would prefer to watch the movie or TV show adaptation of a book, than go ahead and read it.
The author has given crisp and tiny examples of his experience over the lack of knowledge people tend to have nowadays, since they do not read anymore. He has repeatedly emphasized on how good reading skills can build a character of a person to a great extent, in terms of their personality, knowledge base, and vocabulary.
The best thing about this book for a reader though, would be the list of books the authors ended up mentioned. Beautiful collection. ❤️
This book is a guide on how to read. It gives the uses and advantages of daily reading in our lives. The author also tells the excuses that people make for not reading. I liked how he has supported his words with statistics. There are several examples, some from the author's personal life about how reading everyday benefitted him. The author gives a list of what to read, which is basically anything we can get a hold of.
The chapters are to the point and the book is short. Definitely recommended for beginners.
Book 8 of 2021 புத்தகத்தின் பெயர் : வாசிப்பது எப்படி எழுத்தாளரின் பெயர் : செல்வேந்திரன் @writerselventhiran பதிப்பகத்தின் பெயர் : கிண்டில் / Kindle பக்கங்கள் : 89 இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் போதே (Jan-2021) நான் 50+ புத்தகங்களை படித்திருந்தேன். அப்படியிருந்தும் ஏன் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அந்த எண்ணத்தை எழுத்தாளர் செல்வேந்திரன் அவரது எழுத்துகளால் தவிடுபொடியாக்கி விட்டார். நான் படித்த கல்லூரி, எங்கல் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. நூலகத்தில் 1000+ அதிகமான புத்தகங்களைக் கொண்டது. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற எண்ணம் இப்போது தோன்றுகிறது. எழுத்தாளர் கூறியதில் எனக்கு மிகவும் பிடித்தவை : 💥புத்தகத்தின் ஆரம்ப பக்கத்திலயே எனக்கு மிகவும் பிடித்த ஐயா “பவா செல்லத்துரை” அவர்களை பற்றி கூறிப்பிட்டு இருந்த்து, மட்டற்ற மகிழ்ச்சி. 💥’ஏன் வாசிக்க வேண்டும் ‘ என்ற கேள்விக்கு எழுத்தாளரின் முதன்மையான பதில், “ கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆகவேண்டும்” என்ற பதில் மிகவும் பொருத்தம். 💥இந்த சோப்பை பயன்படுத்து , ஷாம்புவைப் போடு என்று விளம்பரம் செய்யும் நடிகர் / நடிகைகள் யாரும் , ஏன் ஒரு சமயம் கூட புத்தக வாசிப்பப் பற்றி கூறுவதில்லை என்று நான் பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். எழுத்தாளரும் இதை பதிவு செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை படிக்கவில்லை என்றால் நிச்சயம் வாசித்து பாருங்கள்.
❤புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..
இந்தப் புத்தகம் போதிப்பவை எல்லாம் டிஜிட்டல் உலகில் வாழும் இளம் தலைமுறைக்கு மிக மிக கசப்பான கருத்துக்கள் ஆனால் உலகில் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் வாசிப்பு பழக்கத்தை பற்றியது. வாசிப்பு பழக்கம் உடையவர்கள் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பலதரப்பட்ட மக்களின்(நிகழ் கால, இறந்த கால,எதிர் கால) வாழ்க்கை அனுபவங்களையும், எண்ணிலடங்கா தகவல்களையும் தெரிந்து வைத்திருபார்கள் & இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை ஒரு சிறப்பான வாழ்க்கையாக அமைய வழி செய்யும் என்பது எனது கருத்து. வாசிப்பு பழக்கம் மனிதனுக்கு ஏன் தேவை என்பதற்கான விளக்கமே வாசிப்பது எப்படி? புத்தகம். -கலைச்செல்வன் செல்வராஜ்.
வாசிக்கும் பழக்கம் குறைவாக உள்ள நம் சமூகத்திற்கு வாசித்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது இந்நூல். 'ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?' 'புத்தகம் வாசிப்பதால் என்ன பயன்?' 'எப்படி வாசிக்க வேண்டும்?' இது போன்ற கேள்விகளுக்கு பதில் தருவதோடு மட்டுமல்லாமல் இலக்கியத்தின் மீது மேலும் ஆவலை தூண்டுகிறது. பதின்பருவத்து மாணவர்களுக்கான புத்தகம் என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
A concise book that shows why and how reading is a highly beneficial habit.
This book brings to light so much about the significance of reading and what we neglect, and lose when we don't read. It focuses on why one should read more, how it builds one's character and what distracts the young generation with a lot of examples and personal incidents to assert it's importance.
Anybody, teenager or adult, reader or not, can pick up the book to gain some valuable perspective on the art and habit of reading. The list of book recommendations at the end is a delightful bonus for book enthusiasts!
வாசிப்பது எப்படி? ❤️ • வாசிப்பது எப்படி? என்பது இக்காலகட்டத்தில் அனைவரினதும் கேள்வியாகிவிட்டது. எப்படி நேரம் ஒதுக்குவது? என்ன மாதிரியான புத்தகங்கள் வாசிப்பது? எங்கிருந்து தொடங்குவது? இது போல வாசிப்பு தொடர்பான பல கேள்விகளுக்கான பதில்தரும் முயற்சியில் தனது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் செல்வேந்திரன். • “வாசிப்பது வெற்றியாளர்களின் இயல்பு.” • சமூகத்தின் உண்மையான இழிவு அறிவுக்குறைபாடும் வாசிக்காதிருப்பதுமே என சாடும் ஆசிரியர் புத்தக வாசிப்பிற்கு தடைகளாக இருப்பவை பற்றியும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, ஏன் நாம் அனைவரும் வாசிக்க வேண்டும், வாசிப்பதால் கிடைக்கும் பயன்கள் எவ்வகையானவை, வாசிப்பு பழக்கத்தை எப்படி மேம்படுத்துவது என அனைத்தைப் பற்றியும் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை எளிமையான தனது எழுத்தில் விளக்கியிருக்கிறார். • “பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி” என்று வெளியிடப்பட்டிருக்கும் இப்படைப்பு என்னைப்பொறுத்த வரையில் அனைவருக்குமானது. நீங்கள் ஏற்கனவே ஒரு வாசகராக இருந்தாலும் கூட இதை வாசிக்கலாம். • ஒரு வாசகனாக எனது கடமையை நிறைவேற்றுகிறேன் என்பதில் திருப்தி. “நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள். வாசித்ததைச் சொல்லுங்கள். போதும்.” • வாசி, புத்தகங்களை சுவாசித்து உன் வாழ்க்கையை நேசி!
“How to read? A guide to reading for the adolescents and young readers”
It’s my first-book through my new Kindle e-reader where both are really worth.
This book taught about *Uses & benefits of reading the book, *How it helps in your day-to-day life *what are the excuses people will say
As Author provided the statistics, average Indian spends 10hrs45mins/week, where the rural people spends more when compare to Urbans. Some countries made the law towards mandatory hours to read the books.
Why can’t we simply watch history movies instead of reading the books. For example. HistoricalMovies vs HistoryBooks.
The best example here I got here is, PonniyinSelvan’s Vandhiyathevan. When we read book, each and every one’s imagination and perception builts him in unique way. But whereas in Movies, it’s directors visualisation and pulls the cast accordingly. And we are consuming Directors imagination only.
In many of the places, it really makes me glad about, the same thoughts which I has about reading books.
As much as possible, I used to pro’ject about my “Currently-Reading” book & my review of the books I read, as status in Goodreads/Whatsapp/FB. This is not about showcase or self praise, but try to make people understand that it’s not big thing to start reading books. Also it’s helps me to recollect my thoughts about the book, when I revisit my reviews later.
My heartfelt thanks to Author and Translator, for their simple language to understand the pros and it really helps to others.
I would strongly recommend this book to beginners.
BOOK REVIEW OF 'HOW TO READ?' BY SELVENTHIRAN, TRANSLATED BY NANDINI EZHIL • Rating:- ⭐⭐⭐⭐/⭐⭐⭐⭐⭐ • Book review:- The objective of this book is not to advise or chide the ignorant. We see the challenges which are arising due to a decrease in reading habit among the people. This is affecting different areas like politics, business, academics, industry, science, arts and so on. This has become a national issue. Each one of us has to join together to understand the root cause of this issue.
This book contains all the characteristics to be neglected. The people who this book targets are already distracted by other constraints. Parents who are concerned about their children's well being and professor who care for their students can recommend this book to them. • My review:- The author has talked about how the number of people who read are decreasing rapidly. This is a short read of half an hour. The title of the book should have been 'why to reach instead of 'how to read'. I recommend this book to all my friends who don't read and would like to develop an interest in reading.
The book is aimed as a primer for students who are otherwise lost in the smartphone world of ephemeral pleasures. The book is passionately evangelical in trying to convert the present lot of youngsters into the secular religion of reading books. Though the author oversells the habit of reading newspapers, the book is an important and essential book in the hands of every Tamil parent and student. A philistine Tamil society is in the making and books like these are the first guard of defence against it.
வாசிப்பின் அவசியமும் வாசகர்கள் குறைந்து வருவதற்கான காரணியும் வாசிப்பதை எப்படி மக்களிடம் ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்து வைத்துள்ளார் எழுத்தாளர் செல்வேந்திரன். ஆங்காங்கே அவரின் அரசியல் நிலைப்பாடு தெரிந்ததே தவிர பிரச்சார நோக்கம் தென்பட்டதாக எனக்கு தெரியவில்லை, அதுவரையில் நன்று. இந்த நூல் எனக்கு ஒரு 5 வருடம் முன்னதாக கிடைத்திருக்க கூடாதா என்று ஏக்கத்தை கடைசியில் ஏற்படுத்தியது.
என்னிடம் பல பேர் கேட்பதுண்டு ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று ! சிலரிடம் நான் இப்படிச் சொல்வது உண்டு ஒரு சாமானியனாக இருக்கும்போது ரசனையின் ஆழம் குறைந்திருக்கும் எல்லைகளின் நீலம் குறுகியிருக்கும். இந்த உலகை ஏன் ஒரு கதவின் சிறிய துளையில் பார்க்கிறீர்கள், நீங்கள் படித்து அறிவை மெருகேற்றும் போது உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் இடையில் இருக்கும் கதவை நீக்கி உலகை முழுமையாகப் பார்க்க முயற்சி செய்வீர்கள். உலகத்தின் பல ரகசியங்கள் புரியும் வாழ்க்கை சுவாரசியமாக மாறும்.
என்னுடைய விளக்கங்களை விட "வாசிப்பது எப்படி?" என்ற புத்தகத்தில் எழுத்தாளர் செல்வேந்திரன் சொல்லும் விளக்கங்கள் மிகப் பொருத்தமானவை. புத்தகங்களைப் படிப்பதற்கு மேலும் உந்துதலாக இருக்கிறது. மிக எளிமையாகவும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவரும் விதத்தில் மிக அழகாக எழுதியிருக்கிறார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.
புத்தகங்கள் உங்கள் ரசனையையும் வாழ்க்கையின் எல்லைகளையும் விரிவுபடுத்தும்.
- அருண் தட்சண்
"வாசிப்பது எப்படி?" புத்தகத்தில் இருந்து சில வரிகள்.
யோசித்துப் பாருங்கள். பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத்தான் ஒரேயொரு சூழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான் பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒருபோதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக்கொள்ளமாட்டான் சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்களின் மீது ஜூலி ஐ லவ்யூ' எனக் கிறுக்க மாட்டான். இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது. நமது அறிதல் முறைகளை தத்துவங்களை வாசித்துவிட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்டமாட்டான் அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்பதறிவான் இந்தக் கட்டுமானம் சிதைக்கப்படாமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வான்
உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்
அனைவரும் வாசிக்க வேண்டும். வாசித்தலினால் நமக்கு மதிப்பு, முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு கிடைக்கின்றன என்றும், நம் நாட்டின் மிகப்பெரும் ஆளுமைகள், தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாசிப்பாளார்களே என்றும் தெளிவாக விவரித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டுமுறை வாசித்துவிட்டேன். எந்த ஒரு வரியையும் தெரியாமல் கூட விட்டுவிடக் கூடாதென்று. :)
வாசிப்பின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புத்தகம். வாசித்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த பழக்கத்தை இன்னும் மெருகேற்றும் இப்புத்தகம்.
“நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள். வாசித்ததை சொல்லுங்கள். போதும். “
வாசிப்பது எப்படி? செல்வேந்திரன் ✨
வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து மிகவும் தீவிரமான ஒரு குறிப்பு என்று நினைத்து கொண்டு புத்தகத்தின் உள்ளே சென்றால்,
ஏன் வாசிக்க வேண்டும்? “கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்து தான் ஆக வேண்டும் ராஜா”
என்று யதார்த்தமான ஆசிரியரின் நகைச்சுவை கலந்த எழுத்து நடையுடன் கடந்து செல்கின்றன பக்கங்கள்.
வாசிப்பு ஆர்வம் குறைந்த காரணங்கள் எது என்று சுட்டிக் காட்டி, அதை சரி செய்வது எப்படி. வாசிப்பின் வகைகள். வாசிப்பின் முக்கியத்துவம்,அதனால் விளையும் நன்மைகள், அந்த பழக்கத்தை மேம்படுத்த வழிகள் என்று வாசிப்புக்கு ஒரு இலக்கணமாக இந்த புத்தகம் இருக்கிறது.
பதின் பருவத்தினர் மட்டுமல்ல அனைத்து வயதினரு���் வாசிக்க நிச்சயம் இந்த புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டி.
புத்தகத்தில் நான் ரசித்த வரிகளில் சில.✨
⭐ஒரு நூலைத் தொட்ட மறுகணமே உங்கள் ரசனையின் எல்லைகள் விரிவடைகின்றன்.
⭐வாழ்க்கையை சற்று விலகி நின்று புரிந்து கொள்ளவும், அன்றாட கவலைகளிலிருந்தும் உளைச்சல்களிலிருந்தும் சற்றேனும் விடுபடவிம் இலக்கிய வாசிப்பு உதவிகிறது.
⭐கிறுக்குத்தனமான சிந்தனை என கருதப்பட்டவைதான் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன.
⭐படித்தால் நாடே கிடைக்கிறது. வேலை கிடைக்காதா என்ன?
⭐நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது.
⭐வாசியுங்கள் என்று சொல்லி ஒருவரை வாசிக்க வைக்க முடியாது.
புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியரின் புத்தக பரிந்துரை நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எந்த நடிகனும் தனது ரசிகனுக்கு புத்தகத்தை பரிந்துரைப்பதில்லை அவ்வாறு செய்தால் அறிவு பெற்று அந்த நடிகனின் பின் செல்லமாட்டான் என்று இந்த புத்தகத்தில் இதன் ஆசிரியர் சொன்னதை படித்தோ என்னவோ இந்த சீசன் பிக்பாஸில் கமல் சில புத்தகங்களை பரிந்துரைத்ததோடு பைனல் அன்று இந்த புத்தகத்தையும் பரிந்துரைத்தார் , அதன்பின் தற்போது இப்புத்தகம் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தில் எப்படி வாசிக்க வேண்டும் என்பதை விட ஏன் வாசிக்க வேண்டும் என்றே அதிகம் விவரிக்கபட்டுள்ளது அவை படிப்பவருக்கு வாசிப்பை தொடங்க ஒரு நல்ல தூண்டுதலாக இருக்கும்.
ஜெயலலிதா, விராட் கோலி , பில்கேடஸ் , வாரன் பப்பேட் , மார்க் இன்னும் பல பிரபலங்களின் வாசிப்பு பழக்கம் பற்றி சுருக்கமாக குறிப்பிடபட்டுள்ள இந்நூலில் வாசிப்பு எவ்வாறு அறிவு வளர்ச்சி, பொருளாதாரம் , வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகள் போன்றவற்றிற்கு உதவுகிறது என்றும் கூறுகிறது.
தலைப்புக்குகேற்ப புத்தகம் வாசிப்பது எப்படி , நாளிதழ் வாசிப்பது எப்படி என்பதை மிகவும் சுருக்கமாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.
சமூக வலைத்தளங்கள் , மொபைல் போன்ற டிவைஸ்கள் எவ்வாறு வாசிப்புக்கு இடையுறாக இருக்கிறது.
வாசிப்பு செலவுமிக்க பழக்கமா , எதை வாசிப்பது போன்ற பல விஷயங்களை சுருக்கமாக சொல்லியிருக்கும் ஆசிரியர் இறுதியில் படிக்க வேண்டிய புத்தகங்களின் பரிந்துரை பட்டியலையும் இனைத்துள்ளார்.
நீங்கள் இதுவரை 100+ புத்தகங்கள் வாசித்து இருக்கலாம். இருப்பினும் ஒரு வங்கி படிவத்தைப் பூர்த்தி செய்யும்போதோ அல்லது தெரியாத ஒரு நபரிடம் திடீரென பேசும் சூழல் ஏற்படும்போதோ தடுமாறி இருந்திருக்கலாம் (ஆம் எனில் மட்டும் இப்பதிவைத் தொடர்ந்து வாசியுங்கள்)
இப்புத்தகத்தை வாசிக்கையில் புத்தகங்கள் வாசிப்பது மூலம் நான் பெற்றது என்ன என்று யோசித்தேன். 1. கற்பனை உலகங்களில் வாழ முடிந்தது 2. நான் கேட்க/எழுத நினைக்கும் வரிகளை ஏதோ ஒரு எழுத்தாளர் எனக்காக எழுதி இருப்பது போல உணர வைத்தது 3. சில எண்ணங்களை மாற்றியிருப்பது 4. சிந்தனைத் தளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது 5. கற்றது கையளவு என மீண்டும் மீண்டும் உணர வைத்தது (இதன் மூலமே வாசிப்பதன் மூலம் பெரும் அறிவாளி ஆகிவிட முடியும் என்ற எண்ணம் ஏற்படாமல் போனது)
சரி…புத்தகத்திற்கு வருவோம். இப்புத்தகத்தை வாசிக்க வாசிக்கத் தெரிந்துவிட்டது – இது எனக்கான புத்தகம் இல்லை என்று (பதின் பருவத்திற்கானது என ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இருந்தாலும் அப்பருவத்தினருக்குப் பரிந்துரைக்கும் எண்ணம் புத்தகத்தை வாசித்து முடித்த பின்பும் எழவில்லை)
1. வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற புத்தகத்தின் அடிநாதம் 2. நாம் எதனால் வாசிப்பதில்லை, வாசகனின் கடமை என்ற இரண்டு அத்தியாயங்கள் 3. பெரியாரையும் அம்பேத்கரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் எனத்தொடங்கும் பத்தியில் உள்ள பெரும்பாலான வரிகள் 4. கடைசியில் இருந்த புத்தகப் பரிந்துரைப் பட்டியல் இவையே எனக்கு இப்புத்தகத்தில் பிடித்த பகுதிகள்.
இவை தவிர்த்து புத்தகத்தில் முரணான, என்னால் உடன்பட முடியாத நிறைய பகுதிகள் இருந்தன. வாசியுங்கள் என்பதை சொல்லியுள்ள விதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தது. அவற்றுள் ஒரு சில பகுதிகள்/வரிகள் 1. “கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆக வேண்டும் ராஜா” இந்த அறிவுரையை எந்த tone – இல் சொன்னாலும் எந்த டீனேஜரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது என் எண்ணம்.
2. அறிவில் டிரெண்டியாக உள்ளீர்களா எனச் சில கேள்விகள் கேட்டு இருந்தார். அந்த கேள்விகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. கிரிக்கெட் பார்க்காத ஒருவர் டாப் ஸ்பின் பற்றியும் கேரம் பால் பற்றியும் ஏன் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் தேவைப்படும்போது தகவல்களை இணையத்தைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். எனது துறையில் நான் டிரெண்டியாக இருந்தாலே போதும்(அதுவே கடினம்). மற்ற துறை சார்ந்த அறிவு தேவைப்பட்டால் நானே நீச்சல் கற்றுக் கொள்கிறேன் என ஆற்றுக்குள் இறங்காமல் அத்துறை சார்ந்த மனிதருடன் இணைந்து பணியாற்றுவது நல்லது. வெறும் மேம்போக்கான செய்திகளைத் தெரிந்து கொண்டு நான் பொது அறிவில் சிங்கம்/புலி என மார்தட்டிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.
3. “ஒரே ஒரு நூலை வாசித்த பின் நீங்கள் ரசிகக் கும்பலில் ஒருவர் அல்ல” என்னுடைய கேள்வி இதுதான் வாசகராகவும் இருந்துகொண்டு ஒரு நடிகருக்கோ/நடிகைக்கோ/இயக்குனருக்கோ ரசிகராக இருக்க முடியாதா என்ன? சினிமாவும் ஒரு கலை வடிவம் தான். இதற்காக கொடுக்கப்படும் உழைப்பு அபரிமிதமானது. எதிர்மறையான நோக்குடன் இந்த இரண்டு கலை வடிவங்களையும் ஏன் முதலில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்? ஒரு படம் வெளியாகிறது என்றால் திரைப்படங்கள் அதிகம் பார்க்காத நபரிடம் கூட எந்த நடிகர்/நடிகை படம் எப்போது வெளியாகிறது என்ற தகவல் சென்று சேர்கிறது. அப்படி ஒரு புத்தகம் இந்தக் காலகட்டத்திலும் சென்றடைவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வாசகரை குறை சொல்லி என்ன பயன்? சினிமாவை ஆக்கப்பூர்வமாக அணுகி அதன் வெளியீடு மற்றும் சந்தைப்படுத்துதல் உத்திகளை எழுத்தாளர்களும், பதிப்பகத்தாரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். (சில பதிப்பகங்களில் இவ்வாறு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அது பாராட்டுக்குரியது). இந்த 21 – ஆம் நூற்றாண்டில் வாசகன் புத்தகத்தை தேடி வருவதற்கு முன் புத்தகம் வாசகனைப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளாதவர்கள் வாசகர்கள் மீது கடைசி வரை பழி சுமத்திக் கொண்டே இருப்பார்கள்.
4. வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் ஒரு நாளைக் கடந்து செல்வதற்கான எல்லா அறிவையும் பெற்றிருப்பார்கள் என்பது போலவும், (தடுமாற்றங்கள் தவறானவை அல்ல. இயல்பானதுதான். அந்த வங்கி படிவத்தை அங்கிருக்கும் யாரோ ஒருவரிடம் உதவி கேட்டு நிரப்பிக் கொள்ளலாம்) அப்பழக்கம் இல்ல���தவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது போலவும் எழுதியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாததாய் உள்ளது.
சிலருக்கு வாழ்க்கை (இன்பமோ/ துன்பமோ) கற்றுத்தரும் பாடமே அதிகமானதாக/போதுமானதாக இருக்கலாம்.
வெறும் வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை நல்லவனாகவோ, அறிவாளியாகவோ, எல்லாம் தெரிந்தவனாகவோ, உயர் குணங்கள் கொண்டவனாகவோ ஆக்கிவிடுவதில்லை.
புத்தகங்களை வாசிப்போம். புத்தகங்கள் வாசிக்காதவரை தாழ்த்திப் பேசுவதைத் தவிர்ப்போம். (மற்ற கலைப்படைப்புகளைத் தாழ்த்திப் பேசாமல்) பிடித்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மட்டுமே சொல்லி பிறரையும் புத்தகம் வாசிக்கத் தூண்டுவோம்.
Title - How To Read? A Guide To Reading For The Adolescents And Young Adults Author - Selventhiran Translator - Nandhini Ezhil Pages - 51 Genre - Personal Development / Self-Help Publisher - Amazon Asia-Pacific Holdings Private Limited Format - Kindle Edition
QOTD - It is tough to break a habit. But it is easy to create and continue a new habit. By forming a new habit, we can abandon a bad habit - Selventhiran ❤
🔹
How To Read? A Guide To Reading For The Adolescents And Young Adults is a self-help book for the beginners who are new to reading and want to read efficiently also for those who don't. The objective of this book is to guide and make people realize how blissful and important it is to read everyday.
I love to read a lot, so this book was a treasure for me. Why I am saying treasure is because after reading this book I realized reading daily, whether it's a book or newspaper or magazine is not just important but a requirement for self development. It not only increases your knowledge, but it helps in developing your skills. The Author has mentioned his real life experiences were due to reading it helped him get a well paid job. The examples are inspiring, they motivated me and brought a positive impact on me. The purpose of this book is to spread awareness and to say something meaningful and knowledgeable.
There is one part in the beginning were the author asked few questions. To be very honest, i knew only the few, the reason why i am mentioning this part because that part will make many people speechless as it shows how much of the knowledge we have like general knowledge we have and how much we know about the entertainment world.
While reading you will find lots of examples which will motivate you on how much reading can affect a person's life and what changes it can make (positive changes). You will also get an inside about Tamil Nadu and how people think about reading.
This book consists of 23 short chapters explaining why to read, how to read, how to continue reading, why should you read, what to read and lots more. I really loved this book. The book was engaging till the end. It kept me hooked. It is a short read, but meaningful. Recommended to everyone, an inspiring book which everyone should read and understand how much important it is to read daily. I enjoyed reading this book 😊❤️
புத்தகத்தின் தலைப்பே ஒரு வித முன்தீர்மானத்தை ஏற்படுத்தி விட்டதால் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்று முதலில் தோன்றவில்லை. நண்பர் ஒருவர் பரிந்துரைத்த போது வாசிக்க எழாத ஆர்வம் கமலஹாசன் அவர்கள் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் பரிந்துரைத்ததும் ஏற்பட்டுவிட்டது. 'புத்தகம் படிக்குறதுக்கெல்லாம் கைடா? புத்தகம் கிடைச்சா படிக்க வேண்டியது தானே' என யோசித்தபடியே புத்தகத்தை வாசித்தால், ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், புத்தகம் வாசிக்காத இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது, வாசிப்பினை எப்படி தொடங்கலாம், வாசிப்பதனால் உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன என பல விதமான வாசிப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து பேசுகிறது புத்தகம்.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் தமிழ் ஆசிரியர் ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் குறித்து அடிக்கடி வகுப்பறையில் பேசுவார். நாவலை வாசிக்கும் போது உங்கள் கண்முன்னால் ஒரு திரைப்படம் ஓடும் எனக் கூறுவார். அதனால் ராஜேஷ்குமார் அவர்களின் பெயர் மனதில் ஆழமாக பதிந்து, எதேட்சையாக அவரின் பாக்கெட் நாவல் ஒன்று கையில் கிடைக்க உடனே வாசிக்கத் தொடங்கினேன். நாவலின் பெயர் நினைவிலில்லை என்றாலும் அந்நாவல் அப்போது ஏற்படுத்திய மனவெழுச்சி இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கள் தமிழ் ஆசிரியரைப் போல எத்தனை ஆசிரியர்கள் பாட புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு குறித்து மாணவர்களிடம் உரையாடுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் "வாசிப்பது எப்படி?" போன்ற புத்தகங்கள் மிக மிக அவசியம்.
இப்புத்தகத்தை பதின் பருவ பிள்ளைகள் வாசிப்பதற்கு முன்னால் அவர்களின் பெற்றோர்கள் வாசிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். காரணம் பாட புத்தகத்தை தாண்டிய வாசிப்பு எத்தனை முக்கியமென்பதனை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும். "இந்த கத புஸ்தகத்தப் படிச்சி என்னடா வர போகுது.. அதுக்கு TNPSC க்கு படிக்கலாம்ல" போன்ற கேள்விகளை பல முறை எதிர்கொண்டே வாசிப்பினை தொடர வேண்டி இருந்தது எனக்கு. அதனால் பெற்றோர்கள் முதலில் இப்புத்தகத்தை படித்து, பாட புத்தகங்களைத் தாண்டி பிள்ளைகள் வாசிப்பதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்.
பக்கங்கள் குறைவு என்பதும், சொல்ல வந்த விஷயத்தை எளிமையாக சொல்லியிருப்பதும் புத்தகத்தின் பலம்.
எதனால் வாசிக்க வேண்டும்? வாசிப்பதனால் என்னென்ன நன்மை கிடைக்கிறது, வாசிக்காமல் இருப்பதால் என்ன இழந்தோம் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த புத்தகம்.
இந்த புத்தகம், புத்தக வாசிப்பை பற்றி மட்டும் இல்லாமல் செய்தித்தாள் வாசிப்பையும் முன்னுரிமை கொடுத்து விளக்கியிருக்கிறார் செல்வேந்திரன்.
பெரியாரையும், அம்பேத்கரையும் படித்த ஒருவன் சாதியை தூக்கி பிடிக்க மாட்டான், சலீம் அலி படித்தவன் சுற்று சூழலை பாதுகாப்பான். வாசிப்பு ஒருவனை வேறு மனிதனாக மாற்றுகிறது.
இந்நூலின் நோக்கமான வாசிப்பை தூண்டுவதும், தீவிரப்படுத்தும் போன்ற பணியை செம்மையாக செய்துள்ளது என்றே சொல்லலாம். வாசிப்பு ஒரு மனிதனை மேம்படுத்துவது மட்டுமன்றி எவ்வகையில் பொருளாதார வாய்ப்புகளையும் புதிய நட்புக்களையும் பெற்றுத் தருகிறது என்பதை பற்றியும் பேசியுள்ளார். அதுபோல் வாசிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் காரணங்கள், சமூக வலைத் தளங்களால் ஏற்படும் கவனச்சிதறல்கள் போன்றவைகளோடு நம்மை எவ்வாறு வாசிப்பு தளத்தில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதையும் பேசுகிறது.
வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மனிதத்தின் மீது கொண்ட பேரன்பாலும் சிறிது கண்டிப்புடனும் படைத்திருக்கிறார்.திரு.செல்வேந்திரன்...நிச்சயம் இந்த புத்தகம் படித்த பிறகான வாசிப்பும் எழுத்தும் வடிவம் பெறும் என்று உணர்கிறேன்..வணக்கம் 🙏
“வாசிப்பு என்பது ஒற்றைச் செயல்பாடு அல்ல. அது பிற துறைகளையும் கலை வடிவங்களையும் நோக்கி உங்களைத் தள்ளும். உதாரணமாக இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும் ஒருவன், தன்னியல்பாகவே சிற்பங்களை ரசிக்கிறவனாகவும், தூய சங்கீத விரும்பியாகவும் ஆகிவிடுகிறான். வரலாற்று போதமும் தத்துவ ஆர்வமும் உருவாகிவிடுகிறது. எதையும் மிக விரிவான பின்புலத்தில் வைத்து சிந்திக்கிறவன் ஆகிறான். ஆகையால், பிற அறிவுத்துறைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்களையாவது வளர்த்துக்கொள்கிறான். மூளை நரம்பியல், சூழியல், தொல்லியல், காந்தியம், மானுடவியல், உளவியல், புவியியல் என வாசிப்பு உங்களைப் பிற துறைகளை நோக்கி இழுத்துச் செல்லும். நீங்கள் ஒரு அறிஞனாக மாறிவிடுகிறீர்கள்.”
Recommended age group is mentioned as 12-18, but it is for all who are yet to start reading. Inspired to read more - Per ilakiyam. One such book, that I will reread to pump up my motivation, if I feel lazy to read any literature. Thanks for this book and setting an example of reader.
நண்பர் selvandran அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. நல்ல தகவல்.. சில இடங்களில் கொஞ்சம் நெருடல் (தினகரன் தவிர, 700 பக்கம் 7 மணி நேரம் ). ஆனால் படைப்பின் நோக்கமும், உதாரணங்களும், சொந்த வாழ்க்கை அனுபவங்களும் ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை