ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதை விமர்சிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மத, மொழி, இன ரீதியான பல பிரிவினரும் பாரதக் குடையின் கீழ் சேர்ந்து இருப்பதில் நிறைய யோசனையும் தயக்கமும் ஏற்படத் தொடங்கியது. ஒரு கூட்டுக் குடும்பப் பெரியவரின் இறுதித் தருணத்தில் குடும்பத்தின் நாற்பது ஐம்பது உறுப்பினர்களுக்கும் பாகம் பிரிக்கும்போது ஏற்படும் மனக்கசப்புகளைப் போன்றது அது. ஒருவரோ பெரியவர் போய்ச் சேரட்டும் அப்புறம் நம் பிரிவினைகளைப் பார்ப்போம் என்றார். மற்றொருவரோ பெரியவர் இருக்கும்போதே பிரித்துக் கொள்ளலாம் என்கிறார். வெள்ளைக்காரனைக் குடும்பத்தலைவர் என்று உவமித்ததை அப்படியே நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. உதார ணங்கள் நூறு சதவீதம் பொருத்தமானவையாக இருப்பதில்லை. மராட்டியத்தில் ஜோதிராவ் புலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ‘நாட்டின் விடுதலையைவிட சமூக விடுதலை முக்கியமானது.. பிரிட்டாஷார் மட்டும் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியா வுக்கு சாபவிமோசனமே ஏற்பட்டிருக்காது. அவர்கள் இந்தியாவுக்குக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள்’ என்று கூறியிருக்கிறார். பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை அடைவதுதான் முதல் கடமை என்பது அவருடைய வாழ்நாள் பிரசாரமாகக் கொண்டிருந்தார். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதரும் வெள்ளையரை இதே காரணத்துக்காகக் கருணை மிக்கவர்கள் என்று கூறியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயல்பட ஆரம்பித்த ஜஸ்டிஸ் பார்ட்டிக்கும் ஏறத்தாழ அதே போன்ற நோக்கம்தான். பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது போல திராவிட நாடு என்று பிரித்துக் கொள்வதற்கும் சிலர் ஆசைப்பட்டனர். பாகிஸ்தான் பிரிந்து போனது போலவே அதுவும் மோசமான முடிவாக மாறியிருக்கக்கூடும். ஆனால் அந்த யோசனையை தகுந்த நியாயங்களோடு பிரிவதற்கு ஆசைப்பட்டவர்கள் முன் மொழிந்தனர். வழி நடத்த சிலர் நிஜமாகவே ஆசைப்பட்டனர். பலர் சத்தியாவசத்தோடு தியாகம் செய்தனர். “ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவனை இவ்வளவு தாமதமாக எதிர்ப்பது ஏன்” என்ற கேள்வி எழுந்தது.. “இல்லை, புத்தரே பிராமண கருத்துகளுக்கு எதிராக எழுந்தவர்தான். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு புத்த தத்துவத்தைத் தழுவியர்களின் ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றது.” “ஆனாலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லையா?” என்ற இயல்பான இன்னொரு கேள்வி.. “சங்கரரும் ராமாநுஜரும் மீண்டும் இந்து தத்துவங்களைத் தழைக்கச் செய்துவிட்டனர்.” “அட இந்தியா முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த ராஜாங்கத்தை இவர்கள் எப்படி அழிக்க முடியும்..?” - இது அடுத்த சந்தேகம். “சிந்து சமவெளி நாகரிகமே ஆரியர் படையெடுப்பால்தானே அழிந்தது? மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் வசித்தவர்களை தென்னிந்தியா நோக்கி விரட்டி அடித்தவர்கள் அவர்கள்தானே? ஆயிரம் ஆண்டுகளில் எல்லாம் அவர்களை அழித்துவிட முடியாது. அவர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்..”
“அவ்வளவு எதிர்ப்பு சக்தி கொண்டவர்களா அவர்கள்..?” “ஆலகால விஷங்கள்... அழிக்கவே முடியாதவர்கள்...” “இந்திய ஒற்றுமையைக் குலைக்க காலனி ஆதிக்கத்தின் போது கட்டவிழ்த்துவிடப்பட்ட சதிகள் இவையாவும். இந்தியா வேதங்களின் நாடு, உலகத் தத்துவங்களுக்கெல்லாம் உயர்ந்த தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடு. இதன் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கலாமா? அரசியல் ஆதாயத்துக்காக அபாண்டமான கருத்துகளைச் சொல்லும் இந்தப் பாவிகளுக்குக் காலம்தான் பதில் சொல்லும்? வானியல் சூத்திரங்கள், கணிதக் கோட்பாடுகள், ஆழ்ந்த இதிகாசங்கள்... அடடா இதையெல்லாம் இடக்கையால் புறம்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு வால் பிடிக்கும் அக்கிரமக்காரர்களை வருங்காலம் மன்னிக்காது..” “நீ சூத்திரனாகப் பிறந்ததற்கு உன் விதிதான் காரணம்... எல்லாம் அவன் செயல்... என்கிற பிற்போக்குச் சிந்தனைகள்தான் வேதங்கள். இந்த விவாதங்களை ஒரு நாவலுக்குள் கொண்டுவந்துள்ளேன்.
தமிழ்மகன் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
This is one of the best novel I've ever read. Story is tightly wrapped with tamilnadu history after independence starting from periyar to kanimozhi. It is such a pleasure to read authors narration.
I recently discovered writer TamilMagan, and his novel Vettuppuli. Although Dravidian parties, under one guise or another, have ruled Tamil Nadu since the late sixties, there have been few attempts in writing a novel based on the political history of Tamil Nadu. There have been hagiographies of the political leaders that are of little value. TamilMagan has ably filled this void with his novel.
The novel has two main strands. One strand covers the rise (and fall) of the Dravidian movement from 1930s to the new millennium, with the protogonist Lakshamna Reddy and his sons. The other strand covers the rise of the mixing of Tamil cinema culture and Dravidian politics, with the protogonist Arumuga Mudali and his family. Tamilmagan ably spins the political history of TamilNadu from the 30s to the new millenia, with effortless ease. Tamilmagan's writing is deceptively simple, nuanced, and a careful reader who is familiar with Tamilnadu's political history will find a number of hitherto untold stories about the stalwarts of Tamil politics.
It is the story of tamilians: those who were inspired by the idealism of Periyar (Ganesa Mudali/Natesa Mudali), those who were attracted by the fiery populist rhetoric of Annadurai who co-opted the ideals of Periyar to form a populist political movement (Thiyagarajan, Natarajan), those who questioned Periyar's idealogy that also promoted antipathy toward Brahmins (Krishnapriya, Prabash) etc. The intersection of these multiple viewpoints makes the novel a dynamic read. One comes away with a much more nuanced appreciation of the environment in which Dravidian movement was born, and its contributions (both good and bad). The novel portrays the sacrifices made by thousands of 'ideal'ists such as Thiagarajan, by their blind faith in their leaders.
I personally came away with a better appreciation of Periyar (very deftly handled with a light touch without sermons) and the dravidian politics in general. The novel is filled with interesting vignettes of people (self-contained inter-locking short stories) that makes the novel a pleasure to read. I felt that the novel had a slightly sympathetic portrayal of Dravidian politics, but the strength of the novel is that it gives ample room for an unflinching criticisms against Periyar, and the failure of Dravidian leaders. All this is done without sermons with believable characters!
It is a must read novel. It is filled with lively characters, well written, and well researched, and thought provoking.
For those who are interested in more detailed Tamil review, please go to:
பரந்த பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு திராவிட கண் கொண்டு படியுங்கள் என்கிறார் ஆசிரியர். திராவிட பார்வை என்பதன் பொருள் தான் என்ன. சகமனிதனையும் இனம் கொண்டு, மொழி கொண்டு, சாதி கொண்டு பார்ப்பதா ? 1000 ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது அதனால் இப்போது பழி தீர்க்க வேண்டும் என்ற வெறி கொண்ட இனமா ? ஆசிரியர் தான் விளக்க வேண்டும்,
60 ஆண்டு கால திராவிட கழகங்களின் ஆட்சியில் மொழி திணிப்பு, ஆங்கில மோகம், இன வெறி (மலையாளத்தான், பாப்பான், வடக்கன் ) எல்லாம் மேலோங்கி தமிழையும், தமிழனையும் சீரழித்திருக்கிறது என்பதன் சாட்சியமே பிழைகளோடான இந்த புத்தகம்.
திராவிட கழகங்களை நம்பியவனின் வாழ்க்கை நடுரோட்டில் தான் வேறு ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதே இவ்வாசிப்பின் வழியான புரிதல். புத்தகம் முழுவதும் ஏதோ வழியில் பிராமண வெறுப்பு.. ஆம் அப்படித்தான் அவர்கள் (பிராமணர்கள்) மீது கழகஙகள் சுமத்திய பெரும் பொய் பழிகளால் இன்றும் கூட வெறுப்பை உமிழும் சமூகத்தை பார்க்க முடிகிறது.
சமத்துவம், சமூக நீதி என முழங்கி இக்கட்சிகளின் இன்னொரு முகம் கீழ்வெண்மணி படுகொலையை மூன்றே வரியில் முடித்தது ஆறா வடுவாக ... மாஞ்சோலை படுகொலை பற்றி குறிப்பு இல்லை.
எண்ணற்ற கதா பாத்திரங்கள் , கதைகளின் சரடு விடுபடல்கள் பெரும் குறை. ஆசிரியரின் விடாப்பிடியான இட்டு கட்டல்கள் (காந்தி கொலையை சாவர்க்கரோடு ஒப்பிடும் கற்பனை, அம்பேத்கர் இறப்பு (கொலை செய்யப்பட்டார்)
புனையும், நிஜமும் கலந்த கதை என்பதால் இருக்கலாம் அல்லது திராவிட எழுத்தின் வரட்டு பிடிவாதமாக இருக்கலாம்.
சலிப்பான மொழி நடை என்றாலும் கடைசி 100 பக்கங்கள் திராவிட திணிப்பின் விளைவுகளை வெளிக்காட்டி விடுகிறது. ஒரு முறை வாசிக்கலாம்.
தமிழ்மகன் எழுதிய இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, நான் கடந்து வந்த முகப்புத்தகப் பதிவை எழுதியவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்பவர்களுக்கு நன்றிகள் கூறத்தான் வேண்டும். எனவே அந்த நினைவில் இல்லா நண்பர்களுக்கு நன்றிகள்.
திராவிட இயக்கங்களின் வரலாற்றால் இரண்டு குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்று இந்த நூலிற்கான சுருக்கத்தை பார்த்ததும் ஆர்வம் வந்து விட்டது. என்னதான் ஊரிலே அங்காளி பங்காளிகளெல்லாம் திமுக. அதிமுக என்று பிரிந்து கட்சிகளுக்காக திரிந்தாலும் இவர்களுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் தி.க தொண்டர்களுக்கு உண்டு. தி.க என்பது கிட்டத்தட்ட எல்லோரது இனிஷியல் ஆகவே மக்களிடையே பேச்சுவழக்கில் மாறிப்போவதுண்டு. கொஞ்சம் வரலாற்றை தோண்டிப் பார்த்தால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கட்சிக்கு முதலில் ஒருவர் ஈர்க்கப்பட்டு அவரின் தாக்கத்தால் ஊரில் அந்த கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்திருக்கக் கூடும். அது போல ஊரில் முதல் தொண்டர்கள் வருகிறார்கள் இந்த புத்தகத்தில்.
வரலாற்று நிகழ்வுகளையும். கற்பனையையும் பயணம் செய்ய வைத்து, உண்மையான வரலாற்று நிகழ்வுகளால் இந்த கதாபத்திரங்களின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள், நடந்த நிகழ்வுகளுக்கு இவர்களின் பங்களிப்பு, இது போன்று அமைந்தது Kane and Abel எனும் ஆங்கில நாவல். வெட்டுப்புலியிலும் அப்படி கதாப்பதிரங்கள் இருந்தாலும், நிஜ வரலாற்று நிகழ்வுகளே இவர்கள் வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுத்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கதையின் ஆரம்பம் ஒரு தீபெட்டியின் அட்டையிலுள்ள புகைப்படம், அந்த வெட்டுப்புலி ஓவியத்தில் இருப்பவரின் கதையை அறிந்துகொள்ள ஆரம்பிக்கும் தேடல், இரு குடும்பங்களின் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரலாற்றை திருப்பி பார்க்கிறது.
பத்து பத்து வருடங்களாக நகரும் கதை, ஒவ்வொரு மாற்றத���தையும் போகிற போக்கில் கடந்து விட்டு போகிறது. தொலைந்து போன நெடுஞ்சாலை, கிராமங்களை அழித்து நகரத்தாரின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்படும் ஏரி, ட்ராம் வண்டி, ஊமைப்படம், பேசும் படம், மின்சார வசதி, அக்கால கிராமவாசிகள் நகரவாசிகளின் வேறுபாடுகள், எல்லா சாமானும் போடக்கூடிய நெகிழிக் காகிதங்கள்அறிமுகம், ஆற்றுமணல் அள்ளுதல், இப்படி நமக்கு வரலாறு ஆகிப்போன பல விஷயங்களை அந்த காலத்தின் பார்வையில் கால இயந்திர பயணம் போல காட்டுகிறார்.
\ கதையின் ஊடே அந்தந்த காலகட்டத்து கட்சிகளும் அதனதன் கொள்கைகளும் வந்து போகின்றன. சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புலிகள் ஆதரவு என தொடர்கிறது. இந்த கதையின் நடுவே தமிழ்நாட்டின் அரசியல் வரலாறும் ஒளிந்திருக்கிறது.
This is an interesting novel that uses the background story of the image found on the “Cheeta Fight” matchboxes, to present a colourful history of 100 years of TamilNadu from 1910 to 2010. The image of a man fighting a cheetah with a sickle featured on the matchbox is based on a true incident, in which a man – Lakshmana Reddy, the great grandfather of the author – actually fought and killed a cheetah that attacked him. The author uses this incident as a backdrop to narrate the life of Lakshmana Reddy as well as of his other family members, through which he manages to convey broad perspectives of the political and social milieu of the times and how it changed progressively over the years. Dravidian politics (as it emerged in TamilNadu) is a favorite subject for me to read and discuss about, so this novel greatly impressed me with the details and perspectives it provided. However, towards the end, the period of 90s and the first decade of the 21st century were rushed through in the novel and didn’t have an impact.
லட்சுமணன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஊரார் சேர்ந்து அந்த பெண்ணை துரத்தி விடுகின்றனர். பொறுப்பில்லாத ஒருவன் படம் எடுக்க விழைந்து பாழாகிறான். புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட ஒருவன் ஒரு கட்டத்தில் முக்தி நிலை அடைகிறான். இந்த கதைகள் அனைத்தையும் தனி தனி நாவலாகவே 'இலக்கியம்' வடித்திருக்கலாம். ஆனால் எல்லோருடைய பயணங்களும் ஒன்றல்லவே. சிலர் ஒவ்வொரு ஊரிலும் சென்று தங்கி அதை அனுபவிப்பார்கள். சிலர் ஊர்களை கடந்து செல்லும் ரயில் பயணங்களை விரும்புவார்கள். தமிழ்மகன் இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவர்.
நாற்பதுகளில் நடக்கும் கதையின் கதாப்பாத்திரங்கள் சென்னை என்ற பதத்தை பயன்படுத்துவது எப்படி ? எழுபதுகள் வரை விரிவாக விளக்கும் தமிழ்மகன் தொண்ணுறுகளை abrupt ஆக முடித்தது ஏன்
மலையாளத்தான், பொட்டை என்ற ஏக வசனங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் கண்களில் படவே இல்லையா?
தமிழ்மகனுக்கு Point Of View எழுத நன்றாக வருகிறது (ஆண்பால் பெண்பால் மற்றும் இந்த புத்தகம்). இன்னும் ஏன் திரைப்படத்துறை இவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை
திராவிட அரசியலின் பின்னணியில் கதை நடந்தாலும் தமிழகத்தின் சமூக அரசியல் வரலாறு என்று தான் நாம் சொல்ல முடியும். இரண்டும் வெவ்வெறு அல்லவே?