Jump to ratings and reviews
Rate this book

மாவோயிஸ்ட்:: அபாயங்களும் பின்னணிகளும்

Rate this book
நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறைக் கண்முன் நிறுத்தும் பா. ராகவன், மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூலில் அலசுகிறார். அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின்மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் ஆகப் பெரும் முதல் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளை வருணிக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் முதன்மையான விரோதி என்று அரசாங்கத்தை அழைக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். அரசு நிர்வாகம் எங்கெல்லாம் முடங்கியிருக்கிறதோ, எங்கெல்லாம் வளர்ச்சியின்மை பரவியிருக்கிறதோ, எங்கெல்லாம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறதோ அங்கெல்லாம் மாவோயிஸ்டுகள் ஊடுருவி அப்பகுதிகளை விடுவிக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளை அவர்களே ஆள்கிறார்கள். ஆந்திரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பிகார், ஒரிஸ்ஸா என்று பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பெற்றுள்ள மக்கள் ஆதரவு மிகப் பெரிது. அதே சமயம், மாவோயிஸ்டுகள் மேற்கொள்ளும் யுத்தத்தில் சிக்கி உயிர் துறப்பவர்களும் இதே மக்கள்தாம் என்னும் போது அவர்கள் சித்தாந்தமும் நோக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இடது சாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்டு செயலாற்றும் இயக்கம் எனில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இருப்பது ஏன்? அதைவிட விந்தை, மாவோயிஸ்டுகளின் போர், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எதிரானது என்பதுதான்.

157 pages, Kindle Edition

Published March 24, 2020

4 people are currently reading
51 people want to read

About the author

Pa Raghavan

122 books284 followers
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.

Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.

Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (32%)
4 stars
31 (48%)
3 stars
10 (15%)
2 stars
2 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Balaji M.
220 reviews14 followers
December 31, 2022
மாவோயிஸ்ட்:: அபாயங்களும் பின்னணிகளும்

ரஷ்ய, சீன கம்யூனிசம் என தொடங்கி, கம்யூனிச சீனத்தின் இந்தியா மீதான போரால் இந்திய கம்யுனிச கட்சியின் பிளவு காண்கிறது என்பதாக ஆரம்பிக்கிறது.. பின்பு ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிஸா போன்ற பகுதிகளின் வளர்ச்சிக்காக ஆயுதம் ஏந்தி, நிலச்சுவாந்தார்களையும் ஜமீன்தார்களையும் அழித்தொழிப்பதின் மூலம் வளர்கிறது மாவோயிஸ்ட் எனும் தீவிரவாத கும்பல்.

சாரு மஜூம்தார் எனும் நக்சலைட் நபரின் தீவிரவாத முறையே, மாவோயிஸ்ட்கள் ஆதர்சம் எனலாம் என்கிறது இப்புத்தகம்.

மாவோயிஸ்ட்கள் கவிஞர்களையும் பாடகர்களையும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர் என்பது புது தகவல்.
மக்களிடம் ஏற்பட்ட வர்க்க பேதம், சாதி சமனற்ற நிலை, ஆண்டான்-அடிமை முறை போன்ற அடக்குமுறைகளை களைவதர்காக, அரசியல் வழியை விடுத்து, ஆயுதமேந்தி போராடியவர்கள் மாவோயிஸ்ட்கள் என படம்பிடிக்கிறது இப்புத்தகம்.

ஆயுதக் கடத்தல், வெடிபொருட்கள் கடத்தல், ஆள்கடத்தல், ஆயுதப் போராட்டங்கள், சிறைச்சாலை தகர்ப்பு போன்ற கொடுஞ்செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அதற்கான காரணம் ஓரளவிற்கு நியாயமானது என அறியமுடிகிறது. ஆந்திரம், தெலங்கானா முதல் மேற்கு வங்கம் வரை உள்ள பழங்குடி, மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் கதையையும் சேர்த்தேதான் இப்புத்தகம் விவரிக்கிறது.

ஜோதிபாசு, சந்திரபாபு நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற அரசியல் தலைவர்களும் மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பிழைத்தது பற்றியும், எண்ணற்ற காவல்/ராணுவ வீரர்கள் இவ்விதமான தாக்குதலினால் பலியானது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

அரசுகளும் அதன் இயந்திரங்களும்(system) சரியாக வேலை செய்திருந்தால், இப்படி இரண்டு பக்கத்திலும் சேதம் நேர்ந்திருக்காது என வாசிப்பவருக்கு புரிதலை அளிக்கும் விதமாக முடிகிறது, இப்புத்தகம்.

இப்புத்தக வாசிப்பின் மூலம், நாம் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் பற்றி இதுவரை கண்ட, கேட்ட செய்திகளை நன்கு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.

மாவோயிஸ்ட்களின் வரலாற்றை விறுவிறுப்பு நடையில் தெளிவான முறையில் அளித்திருக்கிறார், திரு பா.ராகவன்.
6 reviews
February 13, 2020
A detailed account of Maoism in India!

Everyone should read this book to realize the root cause for Maoism's origin and existence in India. As well, youngsters who are aspiring to become administrative officers in the central government shall read through this book at least once. Also, today's youth shall read it to save them getting trapped into any kind of anti-national activities by understanding the end result of such evil forces. A must read book for tamil Youths at this era.
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
March 21, 2022
இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கங்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இந்திய-சீனப் போரின் பின்னணியில் ஆரம்பித்து சாரு மஜூம்தார், நக்சல்பாரி எழுச்சியும் நக்சலைட்டுகளின் வரலாறும், ஆந்திராவின் மக்கள் யுத்தக் குழு, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்ற பெயரோடு மாவோயிஸம் பேசும் கம்யூனிஸ்ட்கள், தக்ஷின் தேஷ் மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்று பல்வேறுபட்ட அதே நேரம் ஏதோ வகையில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த விடயங்கள் மூலம் சிக்கலான மாவோயிஸ்ட் வரலாற்றை இயன்ற வரை எளிதாகவவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் பா.ரா. இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றை அறிய விரும்புவோருக்கு இந்நூல் நல்லதொரு ஆரம்பம்.
23 reviews2 followers
December 14, 2017
Interesting book

மாவோயிஸ்ட்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, திரைபடங்களில் வருவது போல் தோன்றுகிறது. அரசின் தவறுகளால், ஊக்கம் பெற்று தவறான சித்தாந்தங்களின் உந்துதலால் நடக்கும் செயல்கள் ஆச்சிரியம் தான். அவர்கள் நம்பிக்கை அசர வைக்கிறது.
1 review
February 22, 2019
Awesome book

Excellent details 👌. Learned lot of informations.
If anyone wants to understand political background of Maoists. Please, don't miss this book.
Profile Image for Guru Guru.
38 reviews17 followers
March 19, 2014
இந்திய மாவோயிஸ்ட் பற்றி ஒரு நல்ல இன்சைட்..சாரு மஜும்தாரில் தொடங்கி கணபதி வரை, மற்றும் சிங்கூர்/நந்திகிராம் பற்றியும் தெளிவாக்கியிருக்கிறார் ஆசிரியர். மாவோயிஸ்ட் & அவர்கள் பிரச்சனை பற்றி அறிய ஒரு நல்ல தொடக்கம்.
6 reviews1 follower
November 25, 2020
Excellent

Excellent book! As usual Pa. Ra has given a wonderful informative book. Reading it was a breeze! Wondering how I missed this book earlier.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.