சிறுகதை என்னும் வடிவத்தில் ஒரு கதை சொல்லியாய் நான் கற்றுக்கொண்டவை ஏராளம. ஒவ்வொரு கதையையும் எழுதின நாட்கள் அப்படியே நினைவிலிருக்கின்றன. ஒரு கதை எழுதும்போது நிலவும் மனநிலை, அந்தக் கதைக்குள் பார்வையாளனாய் நானும் அலைந்து வெளியேறும் போது உருவாகும் வெறுமையென ஏராளமான வாழ்வை எதிர்கொள்ளும் சாத்தியங்களை என் கதைகள் எனக்கு உருவாக்கிக் கொடுத்தன. மீளவும் வாசிக்கையில் விடுபடல்கள் மட்டுமே ஒரு எழுத்தாளனுக்கு தன் கதைகளில் முதலில் தெரியக் கூடும், அந்த விடுபடுதல்களையும் மீறி சின்னதொரு நிறைவை என் கதைகள் எனக்குத் தந்துள்ளன. கிழக்குப் பதிப்பகத்தின் வழியாய் வெளியான பத்து வருட கதைகளில் எனது முக்கியமான இரண்டு சிறுகதைகள் கவனக் குறைவாக விடுபட்டுப் போயின.
இரு கதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தை தந்தன. இரண்டு கதைகளும் சற்றே கற்பனாவாதத்தையும், மிகையுணர்வையும் , ஆனால்,அதன் ஊடாக கறாரான தர்க்கத்தையும் முன்வைக்கின்றன. நிச்சயம் வாசிக்கத் தக்கவை. நன்றிகள்