பேரரசிய சீன காலத்தின் வாழ்வியல், அரசியல், சமூக அம்சங்கள் குறித்த விவரங்கள் இந்த நூலின் முக்கியமான அம்சம். பண்டைய தமிழகத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். பிறகு, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், சீனாவில் ஜனநாயகம் தலைதூக்க முயன்று பிறகு தலைகுப்புற விழுந்த சோகம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உதயம்,. மாவோவின் புரட்சிகர மேதைமை, அதே மாவோ சிவப்புச் சீனாவை அலங்கோலப்படுத்திய விதம் என பாதி நூற்றாண்டு கதையை விவரங்களோடும் விமர்சனங்களோடும் எழுதப்பட்டுள்ளன.