ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் முன்பாக வாழ்வைக் குறித்த சுயபரிசோதனைகளை செய்து கொள்வது வழக்கம். இதை இப்போது எழுதத்தான் வேண்டுமா என்கிற தயக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்கள் கிடைக்கும் வரை ஒரு நாவலை நான் எழுதத் துவங்குவதில்லை. நீலப்படம் ஒரு நடிகையின் கதையாக எழுததுவதற்காக துவங்கப்பட்டதல்ல, குழந்தைகளின் மீதான வன்முறைகளை அதன் வலிகளைத்தான் எழுதத் துவங்கினேன். ஆனந்தி, ஜோபி, பாபு எல்லோரும் தற்செயலாக அந்தக் கதையில் வந்து இணைந்து கொண்டவர்கள் அவ்வளவே. சிறுவயதில் பாலியல் வல்லுறுவுகளுக்கு உள்ளாகி குரூரமான பால்யத்தைக் கடந்து வந்த ஆனந்தி அந்த வலிகளிலிருந்து கடந்து வந்த தன்னைப் போலவே இன்னொரு குழந்தையைப் பார்க்கும்போது என்னவாகிறாள் என்கிற கதைக்கு நான் சேர்த்துக்கொண்ட கிளைக்கதைகள்தான் அவள் நடிகையாக பரிணமித்ததும் அதில் வெவ்வேறு மனிதர்கள் வந்துபோனதும். இப்போது நிதானமாக யோசிக்கையில் என் எல்லா நாவல்களிலும் தொந்தரவுக்குள்ளான பால்யத்தின் வலிகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. இதை திட்டமிட்டுத்தான் செய்கிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. தொடர்ந்து அதை எழுதுவதன் வழியாய் கடந்த காலத்தின் துயர்மிக்க நினைவுகளிலிருந்து துண்டித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது மற்றநாவல்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு இந்த நாவல் கொண்டாடப்படவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு. நாவலின் தலைப்பே அனேகருக்கு வாங்குவதற்கு அல்லது வாசிப்பதற்கான ஒரு தயக்கத்தைக் கொடுத்திருக்கலாம். கூடுதலாக ஒரு நீலப்பட நடிகையின் கதை என சிலர் எழுதியதும் அந்தத் தயக்கத்தை அதிகப்படுத்தியதற்கு காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் ஆபூர்வமாக சில தருணங்கள் இந்த நாவலில் இருப்பதை வாசித்த நண்பர்கள் புரிந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. ஆனந்த விகடனில் பெண்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் இந்த நாவலுக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்தது. இப்போது கிண்டிலின் வழியாய் வெளியிடும் போது முற்றிலும் புதிய வாசகர்களுக்கு இந்த நாவல் சென்று சேருமென நம்புகிறேன்.
பி கிரேட் படத்தில் நடிக்கும் கவர்ச்சி நடிகை ஆனந்தி.ஒரு கட்டத்தில் தனது மார்க்கெட் சரிவைநோக்கி செல்ல கைவசம் படம் ஏதும் இல்லாமல் இருக்கிற நேரத்தில் ஆனந்தி ஒரு திரைப்படம் இயக்கப் போவதாக அறிவிக்கிறாள். அவள் படத்தை இயக்கி வெற்றி கனியை சுவைத்தாலா? இல்லையா என்பதே நீலப்படம் நாவலின் கரு.
நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள் தமது சிறு வயதில் இருந்து தான் சந்தித்த பாலியல் வன்கொடுமைகளின் வலியை பேசுகையில் வாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கிறது. இதற்காக ஆசிரியர் லஷ்மி சரணக்குமார் க்கு வாழ்த்துக்கள்.
நீலப்படம் நாவலில் இருந்து சில வரிகள்,
“குடி புகை புணர். நூறு வருடங்கள் உடல் அழுகி வாழ்வதற்கல்ல, கொண்டாடவே வாழ்க்கை.” -ஆனந்தி
ஒரு பெண்ணுடன் முரட்டுத்தனமாய் அத்துமீறி உறவு கொள்ள நினைக்கும் ஒருவனால் எந்த ஒரு பெண்ணுடனும் உறவு கொள்ள முடியாது. உடல் மகத்தான கதவுகளுக்குப் பின்னாலிருக்கும் வனம். அந்த கதவுகளை வன்முறையால் உடைத்துச் செல்ல நினைக்கும் ஒருவன் அந்தக் கதவுகளில் தன் வாழ்க்கை முழுக்கவும் மோதி மோதி சுக்கு நூறாய் நொறுங்கிப் போகிறான்.
எல்லாவற்றிற்கும் தேவை பணம். இத்தனை காலம் சம்பாதித்தும் சேர்க்க தவறிய அந்த வஸ்துவை மீண்டும் சம்பாதித்து கொடுக்க தன்னுடலால் முடியம். இன்னும் அது தன் வனப்பை இழக்கவில்லை என்பதைத் திடமாக நம்பினால்.
பணமில்லாத மனிதர்களுக்குப் பின்னாலோ முன்னாலோ ஆதரவாக நிற்க யாரும் முன்வருவதில்லை. பிராணிகளில் மனிதன் மட்டுந்தான் சுயநலவாதத்தின் அச்சு அசலான முகம்.
வன்மத்தை என்ன செய்தாலும் கொலை செய்யவோ அழிக்கவோ கடக்கவோ முடியாது. அதற்கு உடன்பட வேண்டும்,அல்லது அதைக் கையில் எடுக்க வேண்டும்.
“ஓ... பாவம் ஸார் ஆம்பளைங்க... தூரத்துல இருந்து பாத்து பாத்து அடக்கி வெச்சு, பாதிப் பேர் கை வேலைலயே காலத்த ஓட்டுடறாங்... அசலான பெண் சுகம்னா என்னன்னு கூட தெரியாமயே செத்துப் போயிடறாங்க.ஹம்ம்ம்ம்..”
பொம்பளையக் காசு கொடுத்து அடைய நினைக்கிறான், இல்ல அத்துமீறி வன்முறையா அடஞ்சி.... நினைக்கிறான். அவனால என்னைய இல்ல யாரையும் நேசிக்க முடியாது. அவன் மனுஷனில்ல. வெறும் சதைப்பிண்டம். -ஆனந்தி
உடலின் எந்த மூர்க்த்தையும் அதுவரை எதிர்கொண்டிராத அந்த சின்னஞ் சிறிய பூ மிக விரைவிலேயே தனக்கு நடப்பது என்னவெனத் தெரியாமல் அவனிடம் கசங்கிப் போனாள். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் எழுப்பிய எந்தச் சத்தமும் அந்த அறையை தாண்டி வெளியே எட்டியிருக்கவில்லை. கடவுள் கண்ணை மூடிக்கொண்டுவிட்ட அந்த சில நிமிடங்களில் மனிதர்களோடு மனிதனாய் வாழும் ஏராளமான குரூர மிருகங்களில் ஒன்று தன் வேட்டையை நிகழ்த்தி முடித்திருந்தது.எந்த எதிரப்புகளும்மில்லாமல் கெஞ்சுதல்களை மட்டுமே தன் இறுதி மூச்சு வரையிலும் அந்தச் சிறுமி எழுப்பி அடங்கிப் போயிருந்தாள்.களைப்பேதும் இல்லாமல் தனித்துப் படுத்தவனுக்கு படுக்கையில் கசிந்திருந்த குருதித் தடத்தை பார்த்ததும் வியர்த்துப் போனது.
“தாயோளி! யார்டா லூசு? நீ நெனச்சப்ப எல்லாம் வந்து ஃபோட்டோ எடுக்க, பேட்டி எடுக்க நான் ஸூ ல இருக்க மிருகமா? இல்ல நான் பேட்டி குடுக்காட்டி இந்த வாரம் உன் பத்திரிக்கை வராம்ப் போயிடுமா?”
“எல்லோருக்கும் வணக்கம். இத்தனை வருசமா என்னையப் பத்தி எவ்வளவோ மோசமா எழுதி இருக்கீங்க. நான் எதுக்காகவும் கோவப்பட்டதில்ல. ஏன்னா அப்போல்லாம் எனக்கு அதுக்கு பதில் சொல்றதவிட செய்யறதுக்கு நெறய வேல இருந்துச்சு. ஆனா இப்போ நான் ஒதுக்கப்பட்டு இருக்கேன். நொறுங்கிப்போன ஒருத்தி கிட்ட வந்து அத்துமீறி நடந்த ஒருத்தர அடிச்சுது என்னோட மிகப்பெரிய தப்புதான். அதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கறேன். இங்க யாருக்கெல்லாம் பேட்டி வேணுமோ சொல்லுங்க இருந்து கொடுக்கறன். ஃபோட்டோ எடுக்கனும்னா எடுத்துக்கலாம். துணியோட போஸ் குடுக்கறதுன்னாலும் சரி, அவுத்துட்டு அம்மணமா குடுக்கறதுனாலும் சரி எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்க பத்திரிக்கை நல்லா விக்கனும் அதுதான் எனக்கு முக்கியம். அப்புறம் நேத்து ராத்திரி நான் யார் கூடபடுத்தேன், இன்னைக்கு யார் கூட படுப்பேன்னு இன்வஷ்டிகேசனுக்கு ஆட்கள் வெச்சு சிரம்ப்படாதீங்க. நான் யார் கூடயாச்சும் படுத்தா கண்டிப்பா தகவல் சொல்றேன்.”
“கடைசியா ஒண்ணு சொல்லனும்னு நெனைக்கிறேன். பதினஞ்சு வருசம் சினிமாவுல இருந்திருக்கேன். இனியும் சினிமாவுல தான் இருப்பேன். நடிகையா மட்டும்தான் இருக்கனும்னு எந்தக் கட்டாயமும் இல்ல. சினிமாவுல எல்லா வேலைகளும் தெரியும். கூடிய விரைவில் ஒரு படம் இயக்கப் போறேன். அதுக்கான அறிவிப்பு வரும். எல்லோருக்கும் நன்றி. நான் கடுமையா நடந்துக்கிட்ட அந்த நண்பர்கிட்ட இன்னொரு முறை மன்னிப்புக் கேட்டுக்கறேன்.”
எதிர்ப்படும் எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்லவோ அதன் மீது வலுவாக பாதங்களை ஊன்றி எழுந்து செல்லவோ பழகிக் கொள்வதுதான் வாழ்தலுக்கான முதல்விதியாய் இருக்கிறது.
“அய்யய்யோ! கல்யாணம் அப்பறம் குழந்தைங்க, குடும்பம் இது எதுவும் எனக்கு ஒத்து வராது. இப்பவே நீ நடிக்கிற படத்த உன் குடும்பத்தோட பாப்பியான்னு கேக்கறானுங்க. நாளைக்கு எனக்கு ஒரு புள்ள பொறந்துட்டா அந்தப் புள்ளையோட நெலம என்னாகும்னு யோசிச்சுப் பாரு...”
நீ எப்டி இருக்கியோ அப்படியே இருஞ் உன்னோட இந்த ஆட்டிடியூட் தான் எனக்குப் பிடிச்சிருக்கு.” அவன் இவள் காதலை ஏற்றுக்கொள்ளும் வரை பிடித்துப் போயிருந்த அந்த ஆட்டிடியூட் பிடித்தமானதாக இல்லை. நிழலென அவளை தொடர்ந்தான். படப்பிடிப்பிற்கு செல்லும் அவள் நாள் தவறாமல் தன் யோனியை யாரோ ஒருவனுக்கு ஆள் மாற்றி ஆள் விருந்தளிக்கக் கூடுமென சந்தேகித்தான்.
“உனக்கு எப்போ என்னோட படுக்கனும்னு தோணுதோ படு, சேந்து குடிக்கனும்னா குடிஞ் அதவிட்டுட்டு நான் யாரோட பேசறேன்! பேசற எல்லார் கூடயும் படுக்கறானா? இல்லையானு எல்லாம் எட்டிப்பாத்துட்டு இருக்காத. அப்படித்தான் இருப்பன்னா அதுக்கு நான் இல்ல. இனிமே என்ன பாக்க வராத.”
“உன் ஆட்டிடியூட் தான்டி உன்னோட பிரச்சன. இன்னும் எவ்ளோ நாளைக்கி இப்டி ஆடுவ? படம் எதுவும் கெடைக்காம தனியா வீட்ல இருக்கும் போது தெரியும். த்தா யாரையும் பக்கத்துல சேத்துக்காம தப்புப் பண்ணிட்டோமேன்னு...” “நான் தனியாவே இருந்து நாசமாப் போறேன். நீ உன் பொண்டாட்டி எவன் கூடயும் ஓடிடாமப் பாத்துக்க போ...” விருப்பமில்லாமல் ஒருவனோடு படுக்கும் அவஸ்தை இனி இல்லையென சந்தோசப்பட்டாள்.
ஒரு நடிகையை பொதுவெளியில் நாம் பார்க்கும் பார்வையிலிருந்து, நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம், அது அவர்களை எவ்வாறு எல்லாம் பாதிக்கிறது என்பதை லிஃப்ட் லில் நடக்கும் சம்பவம் உணர்த்துகிறது..
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதனால் பாதிப்படைந்த குழந்தைகள் பற்றி பேசும் நாவல்..
லஷ்மியின் உப்பு நாய்கள் படு சுவாரஸ்யமான நாவல். அதில் வரும் சம்பவங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் ’இப்படியும் நிஜ உலகில் நடக்கிறது’ என நமக்கு உணர்த்திவிடும். நீலப்படம் நிஜத்தின் வெகுதொலைவிலிருந்து எழுதப்பட்டிருக்கும் மசாலா நாவல்.
ஆனந்தியின் பாத்திரத்துடன் ஒன்ற முடியவில்லை. உப்பு நாய்களில் வரும் சம்பத், செல்வி, தவுடு, முத்துலெட்சுமி, ஷிவானி - என அனைவரும் சாம்பல் மனிதர்களே. ஆனால், அவர்கள் தங்களை பற்றி சமூகம் என்ன நினைக்கிறது என கவலைக்கொண்டிருக்கவில்லை. தங்கள் போக்கில் தங்கள் நியாயங்களை வகுத்துக்கொண்டு வாழ்க்கிறார்கள். வாசிக்கும் நாம் அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறோம்.
ஆனால், ஆனந்தி சர்வ நேரமும் பிறர் தன்னைப்பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்கிற பிரக்ஞையில் இருக்கிறாள். தன்னுடைய வாழ்க்கை சோகமானது, அநீதிகள் கொண்டது என வாசகனிடம் பரிவை எதிர்ப்பார்க்கிறாள். அவளது கதாபாத்திரம் உண்மையாக இல்லை.
பாபுவின் பாத்திரம் உண்மையானது. அசாம் மக்களின் மீது வன்முறை செலுத்தி, அதில் சுவை காண்கிறான். இதுப்போன்ற வன்முறைகள் பொதுவாக பாதிக்கப்பட்டவரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கும். முதல்முறை வன்முறை செலுத்துபவனின் நோக்கில் வாசிப்பது புதிதாக இருந்தது.
குழந்தைகள் மேல் செலுத்தப்படும் வன்முறையை பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதற்கு பழிவாங்குகிறேன் பேர்வழியென்று ஆனந்தி களத்தில் இறங்குகிறாள். அதில் வதைக்கப்படுவது பாபுவல்ல. இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் நாம்.
உப்புநாய்கள் சாம்பலான ஒரு உலகத்தை நம்முன் வைக்கும். நியாய-அநியாயங்களை வாசகனிடம் விட்டுச்செல்லும். நீலப்படம் நியாயத்தை நிலைநிறுத்துகிறேன் பேர்வழி என நம்மை சோதித்துவிடுகிறது.
This entire review has been hidden because of spoilers.
ஓரு நீலப்பட நடிகையின் கதை என்பதால் இது நிச்சயம் ஒரு 18+ கதை ஆனால் நிச்சயம் ஆபாசம் மட்டுமே இருக்கும் கதையல்ல title பார்த்து புறம்தல்ல வேண்டியதில்லை. ஆனந்தி வழி ஆண்களால் பாதிக்க பட்ட பெண்களின் புலம்பல்,அழுகை,வன்மம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் சொற்களாக எழுதி இருக்கிறார் லட்சுமி. அவள் வன்மத்தை காட்டும் வகை கொடூரமாக தெரிந்தாலும் அது ஆனந்தியின் பார்வையில் நியாயம் என்றே எனக்கு படுகிறது. ஆனந்திகும் பாப்புவுகும் ஆன உறவு ஒரு நம்பிக்கையை பாய்சுகிறது. இதே போல் அவர் உப்பு நாய்களிலும் எழுதியது வாசிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.
"தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் ஒரு பெண்ணின் மீது நிகழ்த்தப்படுக்ம் வன்முறையை விடவும் கொடூரமானது இவ்வுலகில் வேறெதுவும் இல்லை"
"இலக்குகளில்லாமல் இருப்பதென்பது ஒருவித வதை. இலக்குகள் மறைமுகமாய் வாழ்வின் நித்யமான கணங்களை உணர்த்துகின்றன"
The author tells the story of an adult film actress and her abused childhood. I like the portion in which she's been into the prison and her experiences inside it. Her Hippie mentality and free-spirited soul is a good characterization. I hate the violence in the end chapters (and morally that's not right. A mental condition needs treatment not punishment, and that too out of law!). Suggested for a light read.
Dark and disturbing, as is to be expected in a novel dealing with the life of an adult-film actress. However, towards the end it was filled with light and warmth for at least some of the characters. Good writing style mixing up current events with flashbacks into the past. Gave a good view into the film-making process as the actress tries her hand at directing a film based on her life.
லக்ஷ்மி சரவணகுமார் தேர்ந்தெடுக்கும் கதை களமும் கதை மாந்தர்களும் நாம் வாழும் சமூகத்தில் நாம் வேண்டுமென கவனிக்க கூடாது என்று நினைக்கும் மனிதர்கள். அவர்களது வாழ்வை மீண்டும் ஒரு முறை நம் கண்முன் நிறுத்தி அவர்களை பற்றி சிந்திக்க வைகிறார்.