புதுமைப்பித்தன் வரலாறு
காலச்சுவடு பதிப்பகம்
தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பாசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி
' புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ' இப்படியான இரண்டு வரிகள் கொண்டு தொடங்குகிறார் ரகுநாதன்.
கிட்டதட்ட இருபத்திமூன்று பகுதிகளாக பிரித்து எழுதியிருப்பதில், ஒரு நாவலை படிப்பது போன்ற உயிரோட்டத்தை உணர முடிந்தது. சில அத்தியாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நம்மோடு பொருத்தி கொள்ள முடிகிறது. எழுத முயலும், எழுதிக் கொண்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயமான புத்தகமாக இதனை கூறுவேன்.
புதுமைப்பித்தன் என்ற பிம்பத்தை விட்டு கூட ஒருவர் அக்காலத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளன் ஒருவனாக எண்ணி இதனை முழுவீச்சில் படிக்கமுடியும். ஏனெனில், புதுமைப்பித்தன் யதார்த்தத்தை கண்ணாடி துகள்கள் சிதறிய போதும் எப்படி பிம்பங்களை காட்டுமோ அப்படியே தான் இவரும் இருந்து வந்திருக்கிறார். இதோடு, புதுமைப்பித்தனின் பிறப்பு முதல் இறப்பு வரை மிக தெளிவாக பதிவாகியிருப்பதை விட ' இலக்கியம் நயம் ' என்பது இங்கே பூத்துக் குலுங்குகிறது.
குறிப்பாக, காந்தியை கோட்ஷே புனாவில் சுட்ட சம்பவம் புதுமைப்பித்தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில், காந்தியை சுட்ட சம்பவம் உளவியல் ரீதியாக அனைத்து மக்களையும் பாதித்திருக்கும், புதுமைப்பித்தனுக்கும். இதுவே, உடலளவிலும் புதுமைப்பித்தனுக்கு பெரிய சோகம் என ஒன்று ஆரம்பித்த காலம்.
ஏனென்று தெரியவில்லை, காலங்காலமாக எழுத்தாளர்களுக்கும் காசநோய்க்கும்(TB) அப்படி ஒரு காதல், அப்படி ஒரு பிணைப்பு இருந்து கொண்டே தான் வருகிறது. ஆல்பட் காம்யூ, செகாவ், பக்கோவ்ஸ்கி என நிறை எழுத்தாளர்கள் இதனால் பாதிப்பை அமைந்திருக்கிறார்கள். முக்கிய காரணமாக, புகைப் பழக்கத்தை சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. புதுமைப்பித்தனும் புகை பழக்கத்திற்கு நண்பர் போல தான. கூடவே புகையை விட இவருக்கு வெற்றிலை போடுவது ஒரு தொடரும் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. காலையில் எழுந்ததும் காலை வேலைகளை முடித்த பின்னர் ஒரு வெற்றிலை போட்ட பிறகு தான் அன்றைய தினத்திற்கான சாப்பட்டையே நெருங்குவாராம். இப்படி சின்னச் சின்ன குறித்து கூறியிருப்பதற்கு முக்கிய காரணமாக நான் கூறுவதி இவை அனைத்தும் இவருடைய கதையில் வரும் கதாபாத்திரங்களின் வழியே உணரமுடிகிறது. ரகுநாதன், இவரின் நிறைய சிறுகதைகளுக்கு பின்னர் நிகழ்ந்த்தாக இப்படி சின்ன விஷயங்கள் மற்றும் நீண்ட நிகழ்வுகளை முன் வைப்பது படிக்கும் நம்க்கு ஒரு Shape கிடைப்பதாக சொல்லத் தோன்றுகிறது.
' புதுமைப்பித்தனும், அக்கால பத்திரிக்கைகளும் ' என்ற ஒரு ஆய்வு நூல் எழுதலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு பத்திரிகைக்கு தன்னுடைய முழு பலத்தை கொடுத்திருக்கிறார். இவருக்கு " சோதனை " என ஒரு பத்திரிகை ஆரம்பிக்க ஆசை ஆனால் அதுவும் நிகழாமல் சோதனையில் தான் முடிந்திருக்கிறது. இவர் தினமணி, மணிக்கொடி என நிறைய பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார், ஆனால் எதிலும் நிலைத்து நிற்கவில்லை. இதற்கு காரணம், பத்திரிகை சுதந்திரத்திற்காக அல்ல, தன்னுடைய சுதந்திரத்திற்காக விலகி விட்டார்.
' பட்டால் தான் தெரியும், பட்டு கெட்டால் தான் புரியும் ' என்பவை புதுமைப்பித்தனின் சினிமா பயணத்தின் மூலம் நன்கு தெளிவுபடும். புதுமைப்பித்தனுக்கு எழுத்துக்கள் மட்டுமே ஆகாரம், வாழ்க்கை என சொன்னாலும் கூட பணவசதி என்பது இவருக்கு கைக்கு எட்டா கனியாகத் வாழ்நாள் முழுதும் இருந்து வந்திருக்கிறது. இவர் பணம் கொஞ்சம் தேவைக் கருதி சினிமாவில் வசனம், கதை எழுத போகிறேன் என சினிமாப் பயணத்தை தொடர்ந்தார். அங்கும், விதியா இல்லை சதியா எதுவென தெரியவில்லை ஆனால் இவரை விட்டபாடில்லை. இதிலும் வீழ்ச்சியை காண, சொந்தமாக படநிறுவனம் ஆரம்பித்தார். அதுவும், சோகத்தில் தான் முடிந்தது. அப்போது தான், நமக்கு வருவதை மட்டும் செய்தால் போதுமானதே என புரிந்துக் கொண்டார்.
புதுமைப்பித்தனுக்கு பணப் பற்றாக்குறை இருந்தாலும் இவர் மற்றவர்களை உபசரிப்பதில் வல்லவர். வீடு தேடி வரும் எழுத்தாளர்களை, வாசகர்களை சாப்பிட வைத்து விட்டு தான் அனுப்புவாராம். நிறைய தருணங்களில், இவர் பட்டினி கிடந்து தெரியாதவர்களுக்கு கூட ஓடிச்சென்று உதவியிருக்கிறார்.
புதுமைப்பித்தனை பற்றி சுந்தர ராமசாமி தனது கட்டுரை ஒன்றில் ' எந்த அரசியல் நிலைப்பாடு, கோட்பாடு என எதற்குள்ளும் தன்னை இவர் அடையாளப்படுத்தாமல் தீவிர இலக்கியத்தில் திளைத்து வாழ்ந்தார் ' என கூறியுள்ளார். இது ஏனோ உண்மை தான், ரகுநாதன் இவரின் சிறுகதைகளை ஆராய்ந்து புதுமைப்பித்தனின் மனநிலை மாற்றங்களை பற்றி இவரின் சிறுகதையை வைத்தே பேசியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், ஒரு தத்துவவாதி, இலக்கியவாதி என நிறைய மனிதர்கள் கடைசி காலகட்டத்தில் மாறுதல்களை சந்தித்து இருப்பதால் மாறியிருப்பார்கள். இவரின் சிறுகதைகளை வைத்து, ' Socialism அரம்பித்து இறுதி காலத்தில் Existentialism ' என தனியுடைமை கோட்பாட்டை நோக்கி வந்திருப்பது ஒரு எழுத்தாளனுக்கு நிகழ்ந்த அவலம் என கூறினாலும், சமூகத்துக்கு அது கேடு என ரகுநாதன் குறிப்பிடுகிறார்.
இவரை நாம் சிறுகதை ஆசிரியராக தான் தெரிந்திருப்போம். இதிலே, இவரின் பல திறன்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். புதுமைப்பித்தன் கடிதங்கள், பாடல் வரிகள், கவிதைகள் என நிறைய நமக்கு முன்னால் வைக்கப் பட்டிருக்கிறது. இவரின் வரிகள்,
வட்ட முலை பின்னர்
வசமிழந்த காமத்தால்
நீலமணி மாடத்து
நெடியதொரு சாளரத்தைத்
தொட்டு தடவி வந்து
தோயம் நிலாப் பிழம்பை
எட்டி, எடுத்து
இடை சுற்றி, சேலையென
ஒல்கி நடப்பதாய் உவமை சொல்.,
இது, புதுமைப்பித்தன் ' புதுக்கவிதை முறை ' என அன்றைய காலத்தில் இவரின் கவிதைகள் பெயர் வாங்கியிருந்தது.
தனிப்பட்ட முறையில் இன்னும் அதிகமாய் இருந்திருக்கலாம் என நினைப்பது புதுமைப்பித்தன் அவரது மனைவிக்கு தான் நோய்வாய்ப்பட்ட காலத்திலும், மற்ற நேரங்களில் எழுதிய கடிதங்களே. ஆஹா!! அடடா!! என சொல்லத் தோன்றுகிறது. கடிதங்களில் குழந்தை தனம், சிறு சேட்டைகள், சொஞ்சுவது போலிருக்கும் வசை வார்த்தைகள் என படிக்கும் போதே மனம் காதல் பாஷைகளை உணர்ந்து எழுத தூண்டி விடுகிறது.
புதுமைப்பித்தன் என்ற ஒரு ஆளுமையை பற்றி படிக்க நேர்ந்தது, அதுவும் இச்சமயத்தில் படித்தது ஆழ்மனதை தொட்டுப் பார்த்தது.
" எழுத்துக்கள் பிறப்பது
அவலங்களில் தானே என
முடிக்க நேர்ந்தாலும்,
இப்படி ஒருவர்
எழுத்துக்கள் வைத்து
போரிட்டு, பட்டினியில்
சமூக திண்டாட்டங்களை
முன் வைத்திருப்பது
' உந்துதல் ' கொடுக்கிறது !! "
#சிவசங்கரன்