சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி.
Do NOT merge author profiles in different languages/spelling.
Per GR policy, books published in another language/script should have the name on that book as secondary author, with Perumal Murugan as primary author.
Perumal Murugan is a well-known contemporary Tamil writer and poet. He was written six novels, four collections of short stories and four anthologies of poetry. Three of his novels have been translated into English to wide acclaim: Seasons of the Palm, which was shortlisted for the prestigious Kiriyama Award in 2005, Current Show, and most recently, One Part Woman. He has received awards from the Tamil Nadu government as well as from Katha Books.
தமிழ் இலக்கியம் ஓலைச்சுவடியிலிருந்து காகித அச்சு பிரதியான போது அதில் உள்ள பல சொற்கள்/ பாடல்கள் நீக்கப்பட்டது ஏன்னா அவை காமம், பசலை, பெண்ணுறுப்பு(அல்குல்), புணரச்சி பற்றியது. இப்படி நீக்கப்பட்ட சொற்கள், பாடல்கள் பற்றிய ஆய்வு நூல் கெட்டவார்த்தை பேசுவோம். -கலைச்செல்வன் செல்வராஜ்.
இக்கட்டுரை தொகுப்பில் உள்ள இலக்கியங்களின் உரையை காணொளி பதிவு செய்து வெளியிட்டால் கருப்பர் கூட்டத்தின் பி டீம் ஆகிவிடுவோம் போலும்.
கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் மட்டும் அல்லாது இலக்கிய வரலாறுச் சான்றுகள் உள்ளதையும் பெருமாள்முருகன் அழகாக எடுத்துரைக்கிறார். பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் ஆகியோர் போலி கலாச்சாரத்தை காப்பாற்ற சொற்க்களையும் உரையையும் மாற்றுவது, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 என்னும் புத்தகத்தில் வரும் தி டிஸ்டிரேக்சன் ஆப் லாங்குவேஜை நினைவூட்டுகிறது.
தற்போது புழக்கத்தில் உள்ள இழி சொற்களை கம்பர் முதல் தொல்காப்பியர், காளமேகம் புலவர்கள் வரை அவர்கள் பாடல்களில் சாதாரணமாக உபயோகித்ததையும், அச்சொற்களை பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் இப்போது எவ்வாறு மாற்றியுள்ளனர் என்பதையும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெட்ட வார்த்தை பற்றி பேசுவோம் என்பதே இந்நூலுக்கு பொருத்தமானதாக இருக்கும். கெட்ட வார்த்தை என்று கருதப்பட்ட கருதப்படுகிற வார்த்தைகள் பற்றியும் அவற்றிற்குண்டான இலக்கிய ஆதாரங்களையும் சுட்டி நிறுவுகிறார். அதன் வழியே எவ்வாறு இவ்வார்த்தைகள் நாகரிகம் என்ற அடிப்படையில் இலக்கியத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கூறுகிறார். (பி.கு) கண்டிப்பாக இது கெட்ட வார்த்தை பேசுவதை ஊக்குவிக்கும் புத்தகமல்ல.
I have always used swear words without understanding what it actually means. I felt that, force of my anger got communicated to the opponent on using these words. I got to know on this book around 2012, the name of the book made me think on understanding swear words from then on. I was trying to buy a copy of this book but it was always sold out. There came the kindle version of this and I picked this up.
If you are interested in knowing tamil swear words, understand a bit on their origin and root word from which swear words branched out, then the book will be a right read. Though it seems completely concentrated on one word "algul" meaning vulva (external reproductive organ of women), book talks on how it has been used in different times, poems, stories and manuscripts. On explaining it you get to know other words surrounding it which is mainly being as swear words now. What was astonishing more for me was, even in past or now it has always being based on female organs and through unethical sexual actions of female that the words are coined. As the author says may be because all writers being predominantly male, they didnt concentrate much on male. But it looks male chauvinistic.
Other set of thought the book talks on is how recently in name of culture people are hiding use of these words in history, or certain section of people use these examples only on views that support them (in one sided manner). Though one can sense imbalance of author in these section. Explanation of author too felt more sided to authors likings. Since they come in very few occasions one can ignore and move on just taking the crux out of it.
If you are open and would not feel bad on reading and understanding on swear words then this book can help you a lot - go for it. If your taste does not fall in line dont even think of reading the preface of the book.
இந்த புத்தகம் வாராந்திர / மாத அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்த புத்தகம் நமது ஆரம்பகால தமிழ் கையெழுத்துப் பிரதிகளில் சத்தியம் / கெட்ட வார்த்தைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விவரிக்கிறது மற்றும் அந்த கையெழுத்துப் பிரதிகளின் விளக்கத்தின் போது இந்த வார்த்தைகள் எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பதை விளக்குகிறது. இது தவிர அவர் அந்த கையெழுத்துப் பிரதிகளை குறிப்பிட்டு அதன் மாற்றங்களை விளக்குகிறார்
இந்த நாட்களில் பாலியல் கல்வி மிகவும் முக்கியமானது. இந்த அடிப்படையில் அவர் ஆசிரியர்கள் சத்தியம் / கெட்ட வார்த்தைகளின் அர்த்தத்தை எப்படி கற்பிக்கவில்லை மற்றும் அவர்கள் இதை எப்படி தவிர்க்கிறார்கள் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
பாலியல் கல்வியை மேம்படுத்த வேண்டிய பாடத்திட்டங்களை அவர்கள் தவிர்த்துவிட்டதால், கல்வித் திட்டங்களை வகுக்கும் அரசுத் துறையை அவர் குற்றம் சாட்டுகிறார்.
இன்று கெட்டவார்த்தையாக மாறிப்போன பல சொற்கள் தமிழ் இலக்கியங்களில் இயல்பாக இருந்ததையும் காலப்போக்கில் காணாமல் போனதையும் மிகவும் அற்புதமான நூலக தந்துள்ளார். இத்தகைய சொற்களே அக்காலத்தில் சமூகம் எப்படி இருந்தது அச்சமூக ஒழுக்க விதிகளும் புரிந்துகொள்ள முடிகிறது. நாடார் விடுகதைகள், பழமொழிகள் இன்னும் இணைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 18+
சில சமயம் நாம் ஒரு எதிர்பார்ப்போடு ஒரு நூலை வாசிக்கத் துவங்கிய பிறகு அது நம்மை வேறொரு திசையில் இழுத்துச் செல்வது நிகழும். பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய 'கெட்ட வார்த்தை பேசுவோம்' எனும் கட்டுரைத் தொகுதியின் வாசிப்பனுபவம் அப்படியானதாக இருந்தது.
வசவுச் சொற்களை புழங்காதவர்கள் இருக்கலாம். ஆனால் அறியாதவர் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தால் அவர் சமூகத்தில் இருந்து முற்றிலும் விலகி வாழ்கிற தனியராக மட்டுமே இருக்க முடியும். நூலின் தலைப்பைக் கேட்டதும் இது கெட்ட வார்த்தைகளின் அர்த்தம் சொல்கிற, அவற்றின் வேர் சொற்களை ஆராய்கிற விதத்தில் இருக்கக்கூடும் என்ற நினைப்பே மேலோங்கி இருந்தது. ஒரு வேளை கெட்டவார்த்தைகளின் வரலாற்றுப் பின்னணி குறித்த ஒரு ஆய்வாகவும் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
இந்தத் தொகுதியில் இருக்கின்ற கட்டுரைகள் சங்க இலக்கிய காலந்தொட்டு தமிழ் இலக்கியத்தில் பாலுறுப்புகள் குறித்தும், பாலியல் சார்ந்தும் பேசிய பல செய்யுள்களை ஆராய்கிறது. அதன்வழியாக சங்ககாலத் தமிழ்ச் சமூக வாழ்வியல் குறித்த ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. போலவே ஆசிரியர் கல்விப்புலத்தில் செயல்படுபவராகவும் இருப்பதால், இது போன்ற செய்யு���்கள் பாடப்பகுதிக்குள் நுழைகையில் எப்படி தீவிர தணிக்கைக்குள்ளாகின்றன என்று விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் அலசுகிறார். அறப்பார்வை என்ற பெயரில் மாணாக்கர் தெரிந்து கொள்ளவே கூடாது என்று வகுப்பறைகளில் நாம் பேசத் தயங்கி ஒளித்து வைக்கிற விசயங்களை அவர்கள் தவறான வழியிலேயே தேடிக் கண்டடைகிறார்கள் என்பது இப்பார்வை கவனப்படுத்துகிற மிக முக்கியமான செய்தி.
முலை, அல்குல் போன்ற உடலுறுப்புகளின் பெயர்களை புழங்கி சாதாரணமாக்காமல் அவற்றை பாலுறுப்புப் பெயர்கள் என்று ஒளித்து மறைத்து வைப்பதன் அபத்தத்தை கவனப்படுத்துகிறார் ஆசிரியர். பல இடங்களில் விளக்க உரைகள், பாடநூல்கள் போன்றவற்றில் நாகரிகப்படுத்துவதாக, நல்வழிப்படுத்துவதாக சொல்லிக் கொண்டு எப்படியெல்லாம் பாடல்கள் அவற்றில் அசலான வடிவத்திலிருந்து மாற்றப்பட்டு, விளக்கங்கள் திரிக்கப்பட்டு பாடாய் படுத்தப்பட்டுள்ளன என்பதை பற்பல எடுத்துக்காட்டுகளுடன் பதிவு செய்கின்றன பல கட்டுரைகள்.
முதலில் சங்க இலக்கியத்தில் துளியும் பயிற்சியற்ற நான் எவ்வாறு வாசிப்பது என்று தான், துவங்கி சில பக்கங்கள் கடந்நதிருந்த போது, நினைத்தேன். ஆனால் அதனை மனதில் கொண்டே எளிமையான விளக்கங்களால் இலகுவாக்கி இருக்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில் சில இடங்களில் வருகிற ஆழமான இலக்கண விளக்கங்களை தமிழ்த் துறை மாணாக்கர் மட்டுமே முழுமையாக புரிந்து கொண்டு பின்தொடர முடியும் என்பதையும் சொல்ல வேண்டும்.
‘நாம் தான் சொற்களுக்குப் பண்புகளைக் கொடுக்கிறோம்’ என்று முன்னுரையில் சொல்கிற ஆசிரியர் சொற்களை ஆய்வதன் நீட்சியாக அதனை பல இடங்களில் சமூக-பண்பாடு சார்ந்த ஆய்வாகவும் வளர்த்தெடுக்கிறார்.
தொ.ப அவர்களின் அறியப்படாத தமிழகம் நூலை இரு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது மிகப் பெரிய ஒரு திறப்பாக (பலரையும் போல எனக்கும்) இருந்தது. ஒரு வேளை இந்த நூலும் அப்படியான ஒரு புரிதலுக்கு இட்டுச் செல்லக்கூடுமோ எனும் எதிர்பார்ப்பிலேயே துவங்கிவிட்டேன். ஒருவேளை இவ்விதமான முன் அனுமானத்தோடு பிரதியை அணுகாமல் இருந்திருந்தால் இன்னும் இதனை நெருக்கமானதாக உணர்ந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. இருப்பினும் இத்தொகுதி வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தந்து இது வரையிலும் சிந்தனை விரியாத திசைகளில் பயணிக்க உதவியது என்பது மறுக்க இயலாதது.
பக்கங்கள்: 203 வகை: கட்டுரைகள் முதற்பதிப்பு: 2014 பதிப்பகம்: காலச்சுவடு
பெருமாள் முருகனின் "கெட்ட வார்த்தை பேசுவோம்" புத்தகம் தமிழ் இலக்கிய உலகில் யாரும் பேசத் துணியாத பேசுபொருளைப் பற்றி பேசுகிறது. பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் ஆகியோரின் போலி ஒழுக்க அளவுகோல்கள் எவ்விதம் நம் மொழியின் உடல் உறுப்புகளையும் புணர்ச்சியையும் குறிக்கும் வேர்ச்சொற்கள் அழிவிற்கும், அச்சொற்கள் இடம்பெறும் தனிப்பாடல் / செய்யுள்களை பதிப்பில் புறக்கணித்து அவைகளை அழித்தொழிக்கும் வேலைக்கும் அடிப்படையாக அமைகின்றன எனவும் விரிவாக விளக்குகிறது.
சங்கப்பாடல் தொடங்கி, காளமேகத்தின், கம்பரின் தனிப்பாடல்கள் வரை ஒரு சில குறிப்பிட்ட சொல்லுக்காக அல்லது பொருளுக்காக அவை புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை விரிவாக அதே சமயம் மிகுந்த எள்ளலான சுவாரசியமான நடையில் பதிவு செய்கிறது.
நூலின் பின்னிணைப்பு மிக நேர்த்தியாக மொத்த உள்ளடக்கத்தையும் தொகுத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக பின்வரும் பத்தி:
// சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. --ஆ.இரா. வேங்கடாசலபதி //
தமிழ் மேலும், நாட்டார் வழக்கியல் மேலும் நிபந்தனையற்ற பற்று கொண்ட எவரும் படிக்க வேண்டிய புத்தகம்!
சில வார்த்தைகள் தமிழில் சகஜமாக பயன்படுத்தபட்டு பின்பு நாகரிகம் கருதி புறக்கணிக்கப்பட்டு கெட்ட வார்த்தையாக, நாகரீகமற்ற வார்த்தைகளாக மாறிவிடுகிறது அல்லது மாற்றப்படுகிறது.
இதற்கு உடனடி உதாரணமாக எழுத்தாளர் சோறு என்ற வார்த்தையை கூறுகிறார் , ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த சோறு இப்போது நாகரீகமற்ற வார்த்தையாக கருதபட்டு குறைவாகவே உபயோகபடுத்தபடுகிறது அதற்கு மாற்றாக சாப்பாடு என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தபடுகிறது.
இதுபோல் உடல் உறுப்புகள் , ஆண் பெண் உறவு, காமம் சார்ந்த செய்கைகள் தொடர்பான வார்த்தைகள் குறுந்தொகை, கலித்தொகை, புறநானூறு, தொல்காப்பியம், ஐங்குறுநூறு, சீவகசிந்தாமணி, மணிமேகலை, கம்பராமாயணம் , கம்பரின் பிற செயுள்கள் , காளமேக புலவரின் செய்யுள்கள், நாட்டார் பாடல்கள் மற்றும் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், புலவர்களின் தனிப்பாட்டு திரட்டுகள் போன்றவைகளில் நிறையவே பயன்படுத்தபட்டுள்ளது.
அச்சு இயந்திரம் புழக்கத்தில் வந்து மேற்கூறியவற்றை ஓலை சுவடியிலிருந்து அச்சுக்கு ஏற்றி நூலாக வெளியிட்டபோதும் பின்னாளிலும் இவற்றிற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் நாகரீகம் கருதி அது போன்ற வார்த்தைகளை தவிர்த்து, மாற்றி, தவறான பொருள் எழுதி , இடைச்சொருகல் செய்து அல்லது அந்த வார்த்தை/வரிகளுக்கு பதிலாக வெற்று புள்ளிகளை நிரப்பி புத்தகமாக வெளியிட்டனர் , கம்பராமயணத்தை விளக்கி பேரறிஞர் அண்ணா எழுதிய கம்பரசம் என்ற நூல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
மேற்கண்ட நூல்களை ஆராய்ந்து எந்தெந்த செய்யுள்களில் , பாடல்களில் சொற்கள், வரிகள் மாற்றப்பட்டு, திரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது அந்த வார்த்தைகளின் உண்மை அர்த்தம் என்ன என்பதை இலக்கண விளக்கத்தோடு கூறியுள்ளார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.
இது எல்லோருக்குமான புத்தகமாக எனக்கு தோன்றவில்லை , விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்கலாம்.
பெருமாள் முருகன் அவர்களின் இந்த 'கெட்ட வார்த்தை பேசுவோம்' கட்டுரைத் தொகுப்பு, இனிய தமிழ் படித்து புரிந்துக்கொள்ளும் அனைவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய தொகுப்பு. இதில் நிறைய செய்யுள்களை அவர் கையாண���டமையால், இதனை படிக்க தமிழார்வத்தையும் தாண்டிய இலக்கணப் புரிதல் மிக அவசியம். அதே அவசியம்தான் அழகையும் சேர்க்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் நான் கற்றுக்கொண்டது ஏராளம். இந்த நூல் மூலம்; நம் சமூகத்தில் நிலவும் சாதிய பாலிய வகுப்பிய அடக்குணர்வுகளை அவரால் இயன்ற சிறுவெளியில் காண்பிக்கிறார். முத்தான இந்த கருத்துகள் அனைத்தும், மொழி அடுக்கைத்தாண்டி வெளிக்கொணரப்பட வேண்டுபவை. இத்தொகுப்பின் இறுதியில் ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய பின்னுரை போற்றத்தக்க ஒன்று!
Very important collection of essays on swear words. Author explains the usage of swear words in ancient culture and literature and those swear words got removed by publishers and authors considering them as inappropriate. Some essays may not be acceptable by readers. But this book is a must read to get a new perspective on swear words as their usage in Tamil culture.
I just got intrigued by the title and started reading since the book was available in kindle unlimited.. In short the book is about redacted poems, words in Tamil.. In the view of censoring unwanted things/preserving culture, people were modifying and removing lines from poems.. Mostly because of sexual descriptions, caste references and all that .. I'm adding one interesting poem which has been removed from revised books in recent times.. If you like the excerpt, go for the book..
"மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன் கூடிமிக மண்பிசைவான் கொல்லனே – தேடி இருமப்டிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான் பரும்புடவை தப்பும் பறை." ஒவ்வொரு சாதிக்கும் உரிய தொழில்கள் என இச்சமூகம் விதித்து வைத்திருக்கும் முறையை அப்படியே மாற்றிப் பார்ப்பதுதான் காளமேகம் செய்திருக்கும் குறும்பு. ‘மாடு தின்பான் பார்ப்பான்’ என்றிருந்தால் எப்படியிருக்கும்? குயவன் மறையோதவும் கொல்லன் மண் பிசையவும் செக்கான் இரும்படிக்கவும் வண்ணான் எண்ணெய் விற்கவும் பறையன் துணி துவைக்கவும் இருப்பின் இந்தச் சமூகம் என்னவாகிவிடும்? தொழிலை மாற்றிக் கற்பனை செய்ய வாகான பாடல் இது. எந்த சூழ்லில் இந்தப் பாடலைக் காளமேகம் எழுதினார் என்பது தெரியவில்லை. ஆனால் எழுதப்பட்ட காலத்திலேயே இப்பாடல் பெரும் அதிர்வை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. சாதிக்குரிய தொழில் மாற்றத்தை இன்றைக்கும்கூட நம் சமூகம் அங்கீகரிக்கத் தயாரில்லை. பார்ப்பனர்கள் மந்திர ஓதுவதை இன்றைக்கும் காண்கிறோம். வேறு யாராவது அதற்குள் நுழைந்துவிட முடியுமா? நீதிமன்றம், வழக்கு என்று போனாலும் ஒன்றும் நடக்கவில்லை. வேளாண்மை வேளாளர்களிடமும் சிரைத்தல் நாவிதர்களிடமும் வெளுத்தல் வண்ணார்களிடமும்தான் இன்னமும் இருக்கின்றன. ஆனால் அதை மாற்றிப் பார்க்கும் காளமேகத்தின் விருப்பம் இப்பாடலின் வெளிப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்குமான அடையாளம் அச்சாதியினர் செய்யும் தொழிலில் இருக்கிறது. ஆனால் பறையர் சாதிக்கு மட்டும் தொழிலில் இல்லாமல் உணவுப் பழக்கத்தில் இருக்கிறது. மாடு தின்னல் என்னும் அடையாளம் தொழில் சார்ந்ததல்ல. உணவுப் பழக்கம் சார்ந்தது. மறையோதுதல், மண்பிசைதல், இரும்படித்தல், எண்னெய் விற்றல், துணி துவைத்தல் ஆகியவை அடையாளத்தைத் தராமல் ‘மாடு தின்னல்’ என்னும் உணவுப் பழக்கத்தை ஒரு சாதிக்கு மட்டும் அடையாளமாக்குதலின் காரணம் என்ன? மாட்டைத் தெய்வமாக வழிபடும் பார்ப்பனருக்கு எதிராக மாடு தின்னும் பறையரை நிறுத்தி ‘மாடுதின்பான் பார்ப்பான்’ என்று சொல்வதன் மூலம் அதிர்ச்சியை உண்டாக்குதல் காளமேகத்தின் நோக்கமா? ‘ பறையடிப்பான் பார்ப்பான்’ என்பதை விடவும் ‘மாடு தின்பான் பார்ப்பான்’ என்பது அதிர்ச்சி தரும் விஷயமாகவே இருந்திருக்கும். இந்தப் பாடல் இத்தனை காலம் தொடர்ந்து வந்தது எப்ப்டி? இப்படிப்பட்ட பாடல்களை அழித்துவிடுதல், மறைத்துவிடுதல் என எல்லாம் நடக்கும். ஆனால் இப்பாடலைக் காப்பாற்றி வந்திருப்பது தமிழ் இலக்கணமரபுதான். இலக்கணத்தில் பொருள்கோள் என்றொரு பகுதி உண்டு. செய்யுளைப் பொருள்கொள்ளும் முறை பற்றியது. செய்யுளில் எதுகை மோனை உள்ளிட்ட தொடை நயங்களுக்காகச் சொற்கள் முறை மாறி அமைவது இயல்பு. முறை மாறிய சொற்களை இயைத்துப் பொருள் கொள்ள வேண்டும். திருக்குறளில் முதல் குறளாகிய ‘அகர முதல எழுத்தெல்லாமாதி பகவன் முதற்றே உலகு’ என்பதில் ‘எழுத்தெல்லாம் அகர முதல’ என்று முதல் தொடரை மாற்றினால் பொருள் கொள்வது எளிது. அகர, பகவன் எனமுதற் சீருக்கும் நான்காம் சீருக்கும் எதுகை அமைய வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் ‘அகர முதல் எழுத்தெல்லாம்’ என மாற்றியுள்ளார். இத்தகைய மாற்றங்களை வகைப்படுத்தி விளக்குவதுதான் பொருள்கோள். பொருள்கோளின் ஒருவகை ‘பூட்டுவில் பொருள்கோள்’ என்பதாகும். வில்லின் முதலையும் முடிவையும் இணைத்து நிற்கும் நாணின் இயல்பைக் கொண்டது இப்பொருள்கோள். செய்யுளின் முதற் சொல்லையும் கடைசிச் சொல்லையும் இணைத்தால் பொருள் பொருந்திவரும். இதற்கு வழக்கமாகக் காட்டப்படும் உதாரணம் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்று : திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு. சோழமன்னன் உலாப் போகும்போது அவனைப் பார்ப்பதற்காகப் பருவப் பெண்கள் ஆவலாக இருக்கிறார்கள். அவனைப் பார்க்கக்கூடாது என்று தாய்மார்கள் கதவைத் தாழிட்டு வைத்திருக்கிறார்கள். அவனைக் காண முடியாவிட்டால் அந்தப் பெண் ஏக்கம் மீறி இறந்துபோகப் பெரிதும் வாய்ப்பிருகிறது. அப்படிப் பல பெண்கள் இறந்துபோனால் பெரும் பிரச்சினை ஆகிவிடும். ஆகவே தாய்மார்களே சோழ மன்னனைக் கண்ணாரக் காணக் கதவைத் திறவுங்கள் என்று சொல்வது இப்பாடல். இச்செய்யுளின் கடைசிச் சொல்லை முதலில் கொண்டு வந்து ‘கதவு திறந்திடுமின்’ என்று இணைத்தால் பொருள் பொருத்தம் வந்துவிடும். இவ்வகப் பொருள்கோள் உத்தியைத்தான் காளமேகம் ‘மாடு தின்பான் பார்ப்பான்’ என்னும் செய்யுளுக்குப் பயன்படுத்துகின்றார். செய்யுளின் கடைசிச் சொல்லாகிய ‘பறை’ என்பதைத் தொடக்கத்திற்குக் கொண்டு வந்து இணைத்தால் ‘பறை மாடுதின்பான், பார்ப்பான் மறை யோதுவான், குயவன் கூடிமிக மண்பிசைவான், கொல்லன் தேடி இரும்படிப்பான், செக்கான் எண்ணெய் விற்பான், வண்ணான் பரும்புடவை தப்பும் என்று பொருள் வரும். அதாவது அந்தந்தச் சாதிக்குரிய தொழில்கள் பொருந்திவிடும்."
This entire review has been hidden because of spoilers.