பதுக்கை - பாலை நிலத்துக் கற்குவியல். என்றோ எழுதத்தொடங்கி, வளராமல் நின்றுவிட்ட கள்ளிச்செடி இக்கதை. கொரோனா வைரஸ் குவாரண்டைன் நாட்களில் கண்ணகப்பட்டதால் ஒரு உந்துதலில் எழுதி முடித்திருக்கிறேன். இதில் நான் என்பது முழுக்கவும் நானல்ல. கதை என்பது முழுக்கவும் கதையல்ல.