"ஆர் எஸ் எஸ் - வரலாறும் அரசியலும்" - பா ராகவன்
******************************************
2020இல் எழுதப்பட்ட இந்த புத்தகம்,
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராகவும், ஜின்னாவின் பிரிவினை கோரிக்கையினால் ஏற்பட்ட வன்முறைகளிளினால் பாதிப்புள்ளாகக்கூடிய இந்துக்களாகாக்கவும் சாதிபேதமற்ற தேர்தல் அரசியலில் பங்கேற்காத இயக்கமாக 'கேசவ பலிராம் ஹெட்கோவர்' என்பவரால் , 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் நாக்பூரில் தொடங்கப்படுகிறது, ஆர்.எஸ்.எஸ் எனும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக். 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பபெற்றதினாலும், காந்தியின் மிதவாத கொள்கையை வெறுத்தவர்களும் காங்கிரசை விட்டு, வந்து சேர்ந்த இடம் 'இந்து மகா சபை'. அங்கே திலகர், சாவர்க்கருடன், ஹெட்கோவரும் ஒன்றாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புத்தகத்தினை வாசிக்கும் முன்பு, திரு பா. ராகவன் என்ற இந்து எழுத்தாளர் எழுதியதாலேயே சற்றே ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து சார்பு புத்தகமோ? என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் அந்த அளவிற்கு ஒன்றும் நடுநிலை வழுவி எழுதப்படவில்லை. வரலாற்றில் நடந்தவற்றை பாகுபாடு இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்.
பல இந்து அமைப்புகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ஐ தனித்து காட்டவும், அது இந்திய குடிமக்களாகிய அனைத்து மதத்தினருக்கானதாகவும் ஒரு சமூக இயக்கமாக உருவாக்கப்பட்டதுதான். சாதி பாகுபாடல்லாத, அதே நேரத்தில் இந்து அல்லாத தேசபக்தி மட்டும் கொண்ட பிற மதத்தினரையும் வரவேற்கிறது ஆர்.எஸ்.எஸ் என கூறப்பட்டுள்ளது. அதிலும், அவர்கள் ஏற்படுத்தியுள்ள "ஷாகா" எனும் கூட்டு பயிற்சி அல்லது கூடி கற்றல் எனும் முறை, பிற இந்து அமைப்பிகளிலும் காணப்படாததாக தெரிவிக்கப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கு ஆதரவனவார்களும் இதில் இணையலாம் எனவும் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களின் பக்கம் நின்று போராடியது, ஆர்.எஸ்.எஸ் . அதாவது பாகிஸ்தானிலிருந்து பிணங்கள் இந்திய எல்லைக்குள் ரயில்கள் மூலம் அனுப்பபட்டதை, அகிம்சை வழியில் அல்லாது ஈடு செய்வோம் என களத்தில் தாமாக குதித்திருக்கிறது, ஆர் எஸ் எஸ்! அதே போல உள்நாட்டு மதக்கலவரத்திலும் பங்கேற்றது, பாதிக்கப்பட்ட இந்து மக்களின் சார்பாக!
சுதந்திரம் பெற்ற பின், நடந்த பாகிஸ்தான், சீன, கிழக்கு பாகிஸ்தான் போர்கள், இயற்கை பேரிடர்கள் என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். சேவகர்களின் தேசப்பணி அளப்பரியது என்கின்றனர்.
அதே வேளையில், காந்தி படுகொலை நாதுராம் கோட்ஸே, ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்(அதாவது கொலை நடந்தபோது அவர் ஆர்.எஸ்.எஸ்'ஐ சேர்ந்தவரல்ல), பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பை அடுத்து ஏற்பட்ட குஜராத் கலவரம் என ஆர்.எஸ்.எஸ்-இன் மறுபக்கத்தையும் கூறுகிறது இப்புத்தகம்.
மேலும், ஆர்.எஸ்.எஸ்., தேர்தல் அரசியலை தவிர்த்ததனால், ஆங்கிலேயர் முதல் காங்கிரஸ் ஆட்சி வரை, பல முறை தேசம் முழுக்க தடை செய்யப்படுகிறது. அதனால், அதன் அரசியல் முகமாக 'பாரதிய ஜன சங்" உருவாக்கப்படுகிறது.(அது பின்னர், "ஜனதா" கட்சியுடன் கலந்து, பின் அவர்களது கொள்கை ஒத்துவராததால் 1980ல் 'பாரதிய ஜனதா கட்சி' உருவானது என்பது தனி கதை.)
காந்தியும் நேருவும் பல சமயம் இவ்வியக்கத்தை பாராட்டியதாக தெரிவிக்கின்றனர்.
"குமரியில், பல வேற்று மதத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி, விவேகானந்தர் பாறையில் நினைவாலயம் அமைத்தது. மீனாட்சிபுரம் கிராம மக்களின் மதமாற்றத்தை எதிர்த்து போராடியது, மண்டைக்காடு போராட்டம்" என அவர்களின் கரங்கள் தென்னகம் வரை வளர்ந்துள்ளது.
சிறும்பான்மை மத மக்களுக்கு மதசார்பற்ற என்ற பெயரிலும் அந்தந்த மதத்தின் பெயரிலும், கட்சிகளும் இயக்கங்களும் உள்ள போது., பெரும்பான்மை மக்களுக்கென ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டு, அது மதமாற்றங்களை எதிர்ப்பதனால், இடதுசாரிகளும், பிற மத கட்சிகளும், போலி மதசார்பற்ற கட்சிகளும்
பல்வேறு விதமான எதிர் குரலுக்கு மத்தியில் 2025இல் நூற்றாண்டு காணப்போகிறது, ஆர்.எஸ்.எஸ்!
எந்த இயக்கமானாலும், கட்சியானாலும் போலி அரசியல் செய்யாமல், மதநல்லிணக்கத்துடன் தேசிய நீரோட்டத்தில் கலந்து, பிறர் நம்பிக்கைகளை மதித்து, தொண்டு புரிந்தால், இந்தியா எனும் தேசம் மேலும் பல உயரங்களை எட்டலாம் என்பது நம் கருத்து .
பல்வேறு தரவுகளை கொண்டு பா.ராகவன் அவர்கள் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பற்றிய முதன்மை புரிதலுக்கு ஏற்ற நூல்.!