என்னுடைய முதல் புத்தகமாக, 1999இல் ரகசியவேட்கை' என்ற சிறுகதைத் தொகுப்பு அகரம்' வெளியீடாக வெளிவந்தது. அதில் அடங்கியிருந்த 8 கதைகளோடு, அதற்குப் பின்னர் எழுதப்பட்ட 5 கதைகளும் சேர்க்கப்பட்டு இரண்டாவது தொகுப்பாகக் கடல் மனிதனின் வருகை 'அன்னம்' வெளியீடாக 2016-ல் வெளிவந்தது. இப்போது மேலும் ஒரு புதுக் கதையாக மஞ்சள் வெயில் சேர்க்கப்பட்டு 14 கதைகள் அடங்கிய தொகுப்பாக இந்த இ-புத்தகம் வெளிவருகிறது. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு, கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாவல் எனப் பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எனினும், என் சிறுகதைகள்மீது எனக்குத் தனியான ஒரு அபிமானம் இருந்துகொண்டிருந்தது. இத்தொகுப்புக்காக, மீண்டும் ஒருமுறை 14
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.