பால் ஹெய்ஸேயினுடைய சிறந்த கதை இதுதான் என்பது பற்றி அபிப்பிராய பேதத்திற்கு இடமே கிடையாது. மேல் நாட்டவர்களின் காதல் கதைகளிலே சிறந்ததொன்றாக இது போற்றப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் 'ரோமியோவும் ஜூலியட்டும்' என்னும் நாடகத்துடன் இக்கதை பல விமர்சகர்களால் ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதை எழுதும்போது பால் ஹெய்ஸேக்கு வயது இருபத்து மூன்று தான். அவருடைய முதல் கதைத் தொகுப்பிலே (1855இல் வெளிவந்தது) இக்கதை இடம்பெற்றிருக்கிறது.
தான் இதை எழுத நேர்ந்தது பற்றி ஆசிரியர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். ஹெய்ஸேயும், இன்னொரு இலக்கிய நண்பரும் இத்தாலியில் ஸொரெண்டோவில் தங்கியிருக்கும்போது, ஒவ்வொரு இரவும் ஒரு கதையோ, காவியமோ, நாடகமோ எழுதுவது என்று சபதம் செய்துகொண்டார் - களாம் முதல் நாள் இரவு நண்பர் ஒரு காவியம் எழுதி வாசித்தார். ஹெய்ஸே 'காளி' என்ற இக்கதையை எழுதி வாசித்தாராம்.
ஸொரெண்டோவில் காலடி எடுத்து வைத்தபோது அதன் தெருவில் ஹெய்ஸே ஒரு பெண்ணைப் பார்த்தாராம் அவள் உருவமும், முகபாவமும் அவரை மிகவும் கவர்ந்தன. அவளைக் கதாநாயகியாக வைத்தே இக்கதையை எழுதினார் ஹெய்ஸே.
கதை இத்தாலியில் நடக்கிறது, எழுதியவர் ஒரு ஜெர்மானியன். இதன் தலைப்பு (மூலத்தில்) பிரெஞ்சுப் பாஷையில் அமைந்திருந்தது. ஆனால் இது வெளிவந்தபோதும் அதற்கப்புறமும் கதைகளில் ஈடுபாடுள்ளவர்களின் உள்ளங்களை எல்லாம் கவர்ந்துவிட்டது.
Paul Johann Ludwig von Heyse (15 March 1830 – 2 April 1914) was a distinguished German writer and translator. A member of two important literary societies, the Tunnel über der Spree in Berlin and Die Krokodile in Munich, he wrote novels, poetry, 177 short stories, and about sixty dramas. The sum of Heyse's many and varied productions made him a dominant figure among German men of letters.
Awarded the Nobel Prize in Literature in 1910 "as a tribute to the consummate artistry, permeated with idealism, which he has demonstrated during his long productive career as a lyric poet, dramatist, novelist and writer of world-renowned short stories."
மிகவும் வித்தியாசமான தமிழ் வார்த்தையை தலைப்புக்குக்காக க.நா .சு தேர்ந்தேடுத்து இருக்கிறார். "காளி" பால் ஹய்ஸ் ஜெர்மனிய மொழியில் எழுதிய ஒரு சிறுகதை . Original Title in German : L'Arrabbiata: das Mädchen von Treppi L'Arrabbiata என்பது இத்தாலிய மொழி சொல் .அதன் முதன்மையான அர்த்தம் "கோபம்கொண்டவர் ". ஆகவே ஆங்கிலத்தில் இச்சிறுகதைக்கு" The Fury " என்ற சொல்லை தேர்ந்தெடுத்தார்கள் .ஆனால் க.நா.சுவின் "காளி" மிக பொருத்தமான வார்த்தை தேர்வு என்று நான் நினைக்கிறன் . கதையை படித்தவர்கள் அதை ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். Another interesting trivia . L'Arrabbiata is a very spicy italian pasta sauce .So it is slang for an ever angry woman !!!!
கதை, இத்தாலியில் நேபிள்ஸ் அருகில் உள்ள வெசுவிஸ் மலை அடிவாரத்திலும் ,கேப்ரி தீவிலும் நடக்கிறது . ஒரு படகோட்டிக்கும் , கோபக்கார ஏழை யுவதிக்கு நடுவில் பிரசவிக்கும் காதலை சொல்லுகிற ரம்மியமான சிறு கதை . க.நா.சுவின் மொழி பெயர்ப்பு அருமை.
அன்பு தான் இன்றைக்கு ஆகப்பெரிய வன்முறையாக இருக்கிறது. லாரெல்லா வின் தாயின் உடல்நிலை சரியில்லை. காரணம் அவளின் தந்தை, தினமும் தாயை அடித்து உதைத்து கொடுமை படுத்துகிறார் சில நேரங்களில் கீழே தள்ளி வெறி கொண்டவர் போல மிதிக்கிறார். பிறகு இறுதியில் அன்பு செலுத்துகிறார். இதைக்கண்ட லாரெல்லா இனி தன் வாழ்வில் எந்த ஆணுக்கும் இடமில்லை , அன்பின் பெயரில் நடக்கும் இதை போன்ற வன்முறையை அனுமதித்து ஒரு ஆணுக்கு நான் அடிமையாய் இருக்க விரும்பவில்லை என்று முடிவு செய்கிறாள். ல்ரெல்லாவை அன்பு துரத்துகிறது இரண்டு பேர் அவளை காதலிப்பதாக வருகிறார்கள் ஒருவன் ஓவியன் இன்னொருவன் படகோட்டி. படகோட்டி அவளை நடுக்கடலில் வைத்து மிரட்டுகிறான் தன் அன்பை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் தன்னை நேசிக்கும் படியாகும் வற்புறுத்துகிறான். ( எப்போதும் ஆண்கள் தேர்வு செய்யும் வழி ) இறுதியில் அன்பின் பொருட்டு தான் காதலின் பொருட்டு தான் அவன் என்னிடம் சண்டை பிடித்தால் என்று புரிந்து கொண்டு அவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். இந்த சிறுகதையின் முக்கியமான இடம் இது எதன் பொருட்டு ஆண்களின் துணையும் ஆண்களின் அன்பும் தனக்கு தேவையில்லை என்று நினைத்தாலோ அவளே அந்த படகோட்டி இடம் என்னை அடிமைப்படுத்து, என்னை அடி ,உதை, மிதி, என்ன வேணும் என்றாலும் செய் ஆனால் உன்னுடைய அன்பு என்கின்ற காதல் எனக்கு தேவை என்று சரணடைகிறாள். உண்மையில் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் இவ்வாறு தான் இருக்கிறது ஆண்கள் தங்களின் போலி பாவனையில் மூலமாக போலியான அன்பின் மூலமாக பெண்களை வசியப்படுத்துகிறார்கள் . பின்பு அதையே காரணம் காட்டி அன்பின் பொருட்டு அவளை சித்ரவதை செய்கிறார்கள் ஒரு ஸ்டேடிஸ்ட் ஆக மாறுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இந்த எழுத்தாளர் நோபல் பரிசு முதல் பல பரிசுகளை பெற்றிருக்கிறார் அந்த காலகட்டத்தில் ஆகச்சிறந்த கதையான இந்த கதை உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. அப்போதே இதை க நா சு தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆண்கள் தங்களின் வேடங்களால் பெண்களை வசியப்படுத்துவதை அவர்கள் ஏமாறுவதையும் நல்ல நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இதன் எழுத்தாளர் உண்மையிலேயே இது ஒரு ஆகச் சிறந்த கதை தான். காளி காளி என்றால் அடங்காப்பிடாரி யாருக்கும் அடங்கி போகாதவள். ஆண்களிடம் சிரித்து குலாவி,கொஞ்சிக் கொண்டு அவர்களுடன் ஒத்துழைப்பு தராதவள் என்று பொருள். தங்களை மதிக்காத தங்களுக்கு கீழ்ப்பணிந்து போகாத பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் பட்டப்பெயர். ஒரு பெண் தனித்திருந்தாள் அது ஏன் ஆண்களை அவ்வாறு உறுத்துகிறது ஏன் அந்த பெண்ணை வீழ்த்தி வசியப்படுத்த வேண்டும் என்று ஆண்கள் நினைக்கிறார்கள் ? ஏன் ஒரு பெண் எப்போதும் ஆணுக்கு அடிமைப்பட்டவளாகவே இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் ? என்ன ஒரு அற்புதமான சிறுகதை.
Historical tales. Inspired Hemingway? In these stories written with great narrative skill and lyricism by the prince of letters, Goethe's successor, Love and Appearances are presented to us as the central theme. The atmosphere, descriptions and dramas are so enveloping and precise that they could be defined as "historical tales" just as we speak of historical novels. Furthermore, as we mentioned in the video by Barry Lyndon de Thackeray (https://youtu.be/0Dw527cOYnI), or "When life begins" by Bunin (https://youtu.be/SU-tQx46Cc8), It doesn't matter if they are real or not, the author's magnificent stories endow them with existence. Be sure to see my comments on each story, where I highlight the relationship with movies, other books, the inspiration of Hemingway, a beautiful metaphor similar to Kierkegaard's, and even a very innovative archetype of atonement for guilt. I await your comments
Cuentos históricos. Inspiró a Hemingway? En estos cuentos escritos con gran habilidad narrativa y lirismo del príncipe de las letras, sucesor de Goethe, se nos presenta el Amor y las Apariencias como tema central. El ambiente, descripciones y dramas son tan envolventes y precisos que podrían definirse como "cuentos históricos" así como hablamos de novelas históricas. Más aún, así como lo mencionábamos en el video de Barry Lyndon de Thackeray (https://youtu.be/0Dw527cOYnI), o "Cuando la vida empieza" de Bunin (https://youtu.be/SU-tQx46Cc8), no importa si son reales o no, los magníficos relatos del autor los dota de existencia. No dejen de ver mis comentarios de cada cuento, donde destaco relación con películas, otros líbros, la inspiración de Hemingway, una hermosa metáfora similar a la de Kierkegaard, y hasta un arquetipo de expiación de la culpa muy innovador. Espero sus comentarios
தன் வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையோட ஒப்பீட்டு முடிவுகளை எடுக்கத் தயங்குவதும் மறுப்பதும் அறீவனத்தில் சேர்த்தியென்றாலும் அதில் மாறுதல் ஏற்படலாம் என்பது போலத் தன் பெற்றவர்களின் குடும்ப வாழ்வை பார்த்தே திருமணத்தை வெறுப்பவளுக்குத் தேடிவருபவரையும் ஏற்க மனமில்லை.
அதே ஊரிலே அவளைக் காதலித்திருப்பவன் என்றாவது ஒருநாள் தனக்குக் கிட்டுவாள் என்று காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் புத்திமழுங்கி தவறாக நடக்க முற்படும் போது அவனுக்குத் தண்டனை கொடுத்தவள், அவன்பால் இவ்வளவு நாட்களாக மனதில் மறைத்து வைத்து இருந்த காதலை வெளிப்படுத்துகிறாள்.
Considering this story is written in the late half of 19th century it is quite hard to understand the impact of this novel. The author and his legacy (nobel prize) is also mentioned very clearly but in retrospect the novel or its setting didn't offer me anything new. Maybe my lack of knowledge with the literary scene during those times could also be a reason. I wish I could de-age the story and look back at what kind of impact this would have made back then.
Ka.Na.Su 's translation work looks seamless as always
Die Liebe, ach die Liebe! Eine kurze Geschichte des Nobelpreisträgers Paul Heyse über ein armes aber stolzes Mädchen aus Sorrent in der Umgebung Neapels, dem die anderen neckend ihren Eigensinn nachrufen und die dann doch noch die Liebe entdeckt. Und wieder einmal Tränen als Willensbrecher. Die Waffen der Frau...
ஜெர்மனியில் பிறந்த பால் வான் ஹெய்சேயும் அவரது நண்பரும் இத்தாலி சென்றிருந்த போது ஒரு இரவில் எழுதிய .கதையாம் இது. சோரெண்டோ நகரில் இறங்கியவுடன் அவர் எதிர்கொண்ட ஒரு அழகிய இளம் பெண்ணின் உடல் மொழியிலிருந்து 1855 ல் பிறந்த கதை.
காப்ரி தீவிற்கு நானும் ஒரு நாள் படகு பயணம் செய்ய ஆசை.
காளி ******* வெளிகாட்டி கொண்டிருக்கும் காதலுக்கும், வெளிப்பட்டுவிடுமோ என்ற காதலுக்குமான போராட்டம்! "அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்", இதுவே இப்பெருங்கதையின் அடிநாதம்!
புத்தகம் : காளி ஆசிரியர் : பால் வான் ஹெய்ஸே தமிழில் : க. நா. சுப்ரமண்யம் பக்கங்கள் : 59 வாசிப்பு : Kindle
ஒரு காதல் மலர்வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். அதே போல அந்தக் காதலை மறைத்து வைக்கவும், முறித்துக் கொள்ளவும் பல காரணங்கள் இருக்கும். இவை உணர்வு ரீதியானதாகவோ அல்லது அறிவு ரீதியானதாகவோ இருக்கலாம். வயதோ மோசமான அனுபவமோ சூழ்நிலையோ நமது உணர்வையும் அறிவையும் மங்கச் செய்யலாம்.
இக்கதையில் வரும் கதாநாயகி அவளது காதலை மறைக்கிறாளா இல்லையா, எந்த மாதிரியான தருணத்தில் கதாநாயகன் தனது காதலை வெளிப்படுத்துகிறான், இருவரும் கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை.
நல்ல உயிரோட்டமான எழுத்து. ஓரிரு மணி நேரத்தில் வாசித்து விடலாம். ஒரு அழகான காதல் கதையை வாசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.