Jump to ratings and reviews
Rate this book

தீர்க்கதரிசி

Rate this book

135 pages, Paperback

4 people are currently reading
18 people want to read

About the author

Kahlil Gibran

1,329 books15.1k followers
Kahlil Gibran (Arabic: جبران خليل جبران ) was a Lebanese-American artist, poet, and writer.
Born in the town of Bsharri in modern-day Lebanon (then part of Ottoman Mount Lebanon), as a young man he emigrated with his family to the United States where he studied art and began his literary career. In the Arab world, Gibran is regarded as a literary and political rebel. His romantic style was at the heart of a renaissance in modern Arabic literature, especially prose poetry, breaking away from the classical school. In Lebanon, he is still celebrated as a literary hero.
He is chiefly known in the English-speaking world for his 1923 book The Prophet, an early example of inspirational fiction including a series of philosophical essays written in poetic English prose. The book sold well despite a cool critical reception, gaining popularity in the 1930s and again, especially in the 1960s counterculture.
Gibran is the third best-selling poet of all time, behind Shakespeare and Lao-Tzu.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (36%)
4 stars
6 (27%)
3 stars
6 (27%)
2 stars
1 (4%)
1 star
1 (4%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for MJV.
92 reviews39 followers
September 17, 2020
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் புத்தகங்களை வாசிக்கையில் எப்போதும் ஒரு கலக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது போல ஒரு கலக்கத்தின் வாயிலில் நின்று நிதானித்தே, கலீல் ஜிப்ரான் என்ற உலகப் புகழ் பெற்ற லெபனீஸ்-அமெரிக்க எழுத்தாளர் அவர்களின் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்தேன்.

கவித்துவமாக, வாழ்வின் அங்கமாக உள்ள அனைத்தைக் குறித்தும் அலமுஸ்தாபா என்ற தீர்க்கதரிசி, ஆர்பலீஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையே இந்த நூல். இதை மத நூலாகவும், உலகின் சிறந்த தத்துவ நூலாகவும், கொண்டு மிகப்பெரிய விவாதங்கள் இன்றளவும் நிகழ்ந்து வருகின்றன. இந்த புத்தகம் வெளிவந்து கிட்டத்தட்ட நூறாண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும் பேசு பொருளாய் இருக்கிறது என்றால், இந்த புத்தகம் வெறும் மதம் சார்ந்த புத்தகமாய் இருந்திட இயலாது என்பது என் எண்ணம்.

12 ஆண்டுகள் ஆர்பலீஸ் நாட்டு மக்களோடு வாழ்ந்து வழி காட்டி விட்டு, தன் சொந்த நாட்டுக்கு பயணப்படுகையில், ஞான திருஷ்டி நிறைந்த அல்மித்திரா என்ற பெண், இவருடைய ஞானத்தை தங்கள் நாட்டு மக்களுக்காக பகிந்து கொள்ளும் படி கேட்க, அவர் இப்படி தொடங்குகிறார்.

"ஆர்பலீஸ் மக்களே, நான் என்ன பேசப் போகிறேன், உங்கள் ஆன்மாவில் இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும் விஷயங்களைத் தவிர?"

அன்பு, திருமணம், குழந்தைகள், கொடுத்தல், உண்ணுவதும் குடிப்பதும், வேலை, இன்பமும் துன்பமும், வீடுகள், ஆடைகள், வாங்குவது விற்பது, குற்றமும் தண்டனையும், சட்டங்கள், சுதந்திரம், அறிவு மற்றும் உணர்ச்சி, வலி, சுய அறிவு, போதனை, நட்பு பேசுதல், நேரம், நன்மை தீமை, பிரார்த்தனை, ஆனந்தம், அழகு, சமயம், இறப்பு ஆகியவற்றைப் பற்றி ஆர்பலீஸ் மக்களோடு பேசியதின் தொகுப்பே (அல்லது கவிதையா?) இந்த புத்தகம்.

"இவருடைய கோப்பையையும் நிரப்புங்கள். ஆனால் ஒருவருடைய கோப்பையிலிருந்து மற்றவர் அருந்தாதீர்கள்".

"ஒவ்வொருவருடைய ரொட்டியையும் பகிருங்கள். ஆனால் ஒரே ரொட்டித் துண்டை இருவரும் உண்ணாதீர்கள்".

ஆடிப்பாடி மகிழ்வாகச் சேர்ந்து கொண்டாடுங்கள். ஆனாலும் இருவரும் தனியாக இருங்கள்.

வீணைத் தந்திகள் தனித்திருந்தாலும் ஒரே இசையை மீட்டுவது போல இருங்கள்"

இருவருக்குமான வாழ்க்கை, அதன் சுதந்திரம், எல்லைக்கோடுகள் என்ற விவரணைகள் அடங்கிய நூல்.
எத்தனை முறை நமக்கு சொல்லப்பட்டாலும் நாம் மறந்து விடும் எண்ணங்கள். பல வருடங்களாக, பல தலைமுறைகளாக பெற்றோர்களுக்கு புரிய வைக்க முயன்று தோற்ற எண்ண ஓட்டங்கள்.

"வாழ்க்கையின் பெரும் ஆசையின் மகன்களும், மகள்களும் தான் அவர்கள்.

உங்கள் மூலமாக, வழியாக வருகிறார்களே தவிர உங்களிடமிருந்து அல்ல.

அவர்கள் உங்களுடன் இருந்தாலும், உங்களுக்கு சொந்தமானவர்கள் கிடையாது.

உங்கள் அன்பைக் கொடுங்கள் ஆனால் உங்கள் எண்ணங்களைத் திணிக்காதீர்கள்.
அவர்களுக்கு சொந்தமான எண்ணங்கள் உள்ளன."

இப்படி முன்னர் குறிப்பிட்ட எல்லா விஷயங்களைப் பற்றியும் நீண்ட விளக்கங்களோடு, கவித்துவ நடையில் இன்றும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்துக்களின் அணிவகுப்பைக் கொண்ட நூல் தீர்க்கதரிசி. அதிக முறை மீள் வாசிப்பு செய்யப்பட வேண்டிய நன்னூல். நானும் மீண்டும் சில முறைகள் படிக்கத் திட்டமிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்...


Profile Image for MANU  NEETHI  CHOLAN.
15 reviews1 follower
September 24, 2021
Good one to Read. Some of the translation parts doesn't work for me. Yet u should definitely read it ❤️.

Y because ;
"உங்கள் எண்ண ஓட்டங்களில் உங்களுக்கே தெரிந்த விஷயங்களைத் தான் நான் வார்த்தைகளால் சொல்கிறேன்."
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Venkatesh Prasath.
18 reviews
April 12, 2025
ஒரு முறை அல்ல, பல முறை வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நமது மன நிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்ல அர்த்தங்களை கற்பிக்கிறது இந்நூல்.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.