What do you think?

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
112 pages, Paperback
Published December 1, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
March 18, 2021
இந்த ஆண்டு அம்பேத்கரை வாசிக்க விரும்பிய பொழுது இந்நூல் சிறப்பான திறவாக அமைந்தது.
மேலும் அம்பேத்கரை வாசிக்க விரும்பும் ஆரம்ப வாசகர்களுக்கு விசாவுக்காக காத்திருத்தல்(Waiting For A Visa) மற்றும் இந்நூலையும் பரிந்துரை செய்கிறேன்.
இதில் அம்பேத்கர் எழுதிய அவர் நூல்களின் முன்னுரைகள் உள்ளன. முன்னுரைகளே நம்மை அவரின் நூல்களை வாசிப்பதற்கு நம்மை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இறுதியாக இந்நூலை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு மிக்க நன்றி.
#Ambedkarism

May 29, 2021
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
தொகுப்பு- வாசுகி பாஸ்கர்
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகங்களில் அவர் எழுதிய முன்னுரைகளின் தமிழாக்கத்தின் தொகுப்பு தான் இப்புத்தகம். இப்புத்தகத்தை வாசிப்பதனால் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிய முழுமையான அறிவு கிடைக்காவிட்டாலும் மேலோட்டமான ஒரு அறிமுகம் கிடைக்கும்.

May 9, 2022
சில சினிமா காட்சிகளை பார்த்தால் புல்லரிப்பது போல் நிஜத்தில் சிலரின் பெயரை கேட்டாலே புல்லரிக்கும், அப்படிப்பட்ட பெயர் தான் டாக்டர் அம்பேத்கர். அவர் ஏற்படுத்திய புரட்சியும் தாக்கமும் இன்றளவிலும் மக்களிடம் இருக்கிறது. பல தலைப்புகளை பல நாட்கள் செலவழித்து நிறைய பொத்தகங்கள் வாசித்து, ஆய்வு செய்து அடித்தட்டு மக்களுக்காக பொத்தகங்களாக வழங்கியுள்ளார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இந்த பொத்தகம் அனேகமாக 'நீலம்' பதிப்பகத்தின் மூலம் வெளியானவற்றில் நான் வாசித்த முதல் பொத்தகம் என்று நினைக்கிறேன். இந்த பொத்தகம் டாக்டர் அம்பேத்கர் எழுதிய ஒரு சில குறிப்பிட்ட பொத்தகங்களில் இடம்பெற்றுள்ள முன்னுரையை மட்டும் தொகுத்து வழங்குகிறது. இந்த பொத்தகத்தை தொகுத்து வழங்கிய வாசுகி பாஸ்கர் குறிப்பிட்டது போலவே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதும் பொத்தகங்களில் மூன்று விடயங்கள் தெளிவாக இருக்கும்:
1.அந்த பொத்தகத்தை எழுதுவதற்கான காரணம்.
2. அதன் வரலாற்றுப் பின்புலம்
3. அவை எதிர்க்கொள்ள போகும் விமர்சனங்கள்.
இதில் கூடுதல் சிறப்பு இந்த மூன்றையுமே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவரது பொத்தகங்களின் முன்னுரையிலே விளக்கி விடுகிறார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எவ்வளவு சிறந்த ஆய்வாளர் என்பதையும் இந்த பொத்தகத்தில் நான் புரிந்துக்கொண்டேன். இந்த பொத்தகம் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பொத்தகங்களை மேலும் வாசிக்க தூண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. டாக்டர் அம்பேத்கரை யாருக்காவது அறிமுகப்படுத்தக் கூட இந்த பொத்தகத்தை வழங்கலாம்.
ஜெய் பீம்💙
வாசிப்போம் வாழ்வோம்!