1890இல் பதிப்பிக்கப் பட்ட இந்தப் புத்தகம் மொத்தம் 26 கதைகளை உடையது. ஆசிரியர் இந்தக் கதைகளை தான் சேகரித்தது பற்றி முன்னுரையில் கூறுகிறார். இவற்றைப் பற்றிய பல விஷயங்களை அறிமுகத்திலும் கூறுகிறார். பல கதைகளின் பின் குறிப்புகளாக , அந்தக் கதைகள் பற்றிய பல சுவாரசியமான சங்கதிகளைக் கூறுகிறார். நடேச சாஸ்திரி இந்தக் கதைகளின் பலவற்றை Indian Antiquary பத்திரிகையில் பதிப்பித்திருக்கிறார். கதைகள் இன்னமும் புதியதாகவும் , வேடிக்கையாகவும் இருக்கின்றன.
தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் அல்லது சூரியனைப் பற்றிய கதைகள். (ஜார்ஜியானா ஹோவர்ட் கிங்ஸ்கோட் மற்றும் நடேச சாஸ்திரி. தமிழில், வானதி.)
1890இல் பதிப்பிக்கப்பட்ட இந்த புத்தகத்தில் மொத்தம் 26 கதைகளை உள்ளது. என் சிறு வயதில் எனது அம்மம்மா கூரும் கதைகள் போல் இருக்கும் என்றெண்ணி ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். இந்தக் கதைகள் பெரும்பாலும் பிராமணர் வீடுகளில் கூறப்படுபவை என்பது மொழிபெயர்ப்பாளரின் கூடுதல் தகவல். அவர்களே கதையின் கதாநாயகர்களாக திகழ்கின்றனர்.
26 கதைகளில் பாதிக்கும் மேற்பட்ட கதைகளில் பல முரணான கருத்துக்களே கூறப்படுகின்றன.
பெண் ஒழுக்கம் கெட்டவள் போலும், கணவன் இறந்தால் மனைவியும் அவனுடன் தீயில் இறங்குவது போலும், மனைவி இறந்தால் கணவன் தங்கள் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வது போலும், நாத்திகர்கள் என்றால் தீய எண்ணம் கொண்டார்கள் போலும், அரசனின் உயிரை காக்க பணியாளை தெரிந்தே காவு கொடுப்பது போலும், இளவரசியை வன்புணர்வில் இருந்து காப்பாற்ற பணிப்பெண்ணை இளவரசி போல் அலங்கரித்து அனுப்புவது போலும் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்/மொழிபெயர்ப்பாளர் தந்துள்ள பின்குறிப்பின் மூலம் இக்கதைகளுக்கும் வேற்றுமொழி கதைகளுக்கும் உள்ள ஒற்றுமையையும் வேறுபாடுகளையும் நம்மால் கண்டறிய முடிகிறது. அரேபிய மொழிகள், பாரசீகம், சைபீரியா, வேல்ஸ், பிரெஞ்சு, கிரேக்கம் , சிரியன் , எபிரேயம் போன்ற மொழியில் இருந்து இக்கதைகள் தழுவப்பட்டிருந்தாலும் தமிழில் மட்டுமே மேற்குறிப்பிட்ட முரண்ப்பாடுகள் திணிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.