விஞ்ஞானக் கதை ஒன்றில் நிசத்தன்மையை கொண்டுவருவது ஆசிரியருக்கு சவாலான விசயம். இப்படியும் நடக்குமா என்று வாசகர் மனதில் சந்தேகம் எழுந்த வண்ணமே இருக்கும். எத்தனை லாவகமாகவும் நிசத்தன்மையுடனும் ஆசிரியரின் வர்ணனை இருக்கிறது என்பதற்கு கீழே வரும் பத்தி சான்று. ’ரோபோ இருவரையும் கடந்து முன்னே நடந்தது. தலையை மட்டும் 180 டிகிரிக்குப் பின்பக்கமாகத் திருப்பி, ‘என் பின்னால் வாருங்கள்’ என்றபோது பின்னால் என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டதை இருவரும் காட்டிக்கொள்ளாமல் பின் தொடர்ந்தனர். அது மேலே செல்கிறதா கீழே இறங்கிச் செல்கிறதா என்பதை மூளையின் மேல் கீழ் அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலா, கீழா, இடமா, வலமா என்பதைச் சார்பு படுத்திப் பார்க்க முடியா
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.