Jump to ratings and reviews

ஐரிஸ் [IRIS]

காதலிக்காத மனிதனும் காதலிக்கப்படாத மனிதனும் சபிக்கப்பட்டவர்களென நம்புகிறேன். இந்தப் பிரபஞ்சம் காதலிப்பவர்களுக்காகவே உருவானது, அவர்களுக்காகவே இயங்குகிறது. கதைகள் உருவானபோது அவை சாகசத்தையும் காதலையுமே பிரதானமாய்ப் பேசின, இப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றன. சாகசத்தை விடவும் காதல் ஏன் மேனையானதென்றால், காதல் தான் ஆகப்பெரும் சாகசம். வரலாற்றின் தனித்துவமான கலைஞர்கள் ஏராளமானோருக்கு ஆற்றலாய் இருந்தது காதல் தான். துர்கனவ், காஃப்கா, வான்கா, ஃப்ரைடா காலோ என இந்த வரிசை மிகப்பெரியது. ஹோமரின் இலியட்டில் ஹெலனின் மீதுள்ள காதல் ட்ராய் நகர் எரிந்தபோதும் பாரிஸுக்கு குறைந்திருக்கவில்லை என்பதை வாசிக்கையில் ஹெலனின் மீது வரும் மயக்கத்தை விடவும் காதலென்னும் உணர்வின் மீது எழும் மயக்கம் அபரிமிதமானது. சரித்திரத்தின் குரூரமான பக்கங்களை போர்களும், படுகொலைகளும் மட்டுமே நிரப்பியிருந்தால் மனிதர்களுக்கு உலகின் மீது நம்பிக்கை இல்லாமல் போயிருந்திருக்கும். காதலென்னும் மகத்தான உணர்வுதான் குரூரங்களையும் தாண்டி மனிதனை இன்னும் உலகின் மீதான பிடிப்போடு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

46 pages, Kindle Edition

Published July 9, 2020

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (33%)
4 stars
9 (23%)
3 stars
13 (33%)
2 stars
2 (5%)
1 star
2 (5%)
Displaying 1 - 5 of 5 reviews
7 reviews1 follower
July 14, 2020
ஐரிஸ் : காதலும் அதன் மறுமொழியும்

உணர்வுகளை சுமந்து வெடித்திறக்கி வெளிவந்து, மீண்டும் உணர்வு வயப்படும் வாழ்க்கையே நமக்கு வாய்த்திருக்கிறது என்பதை அழுந்த சொல்கிறது ஐரிஸ்.
வெவ்வேறு பெயர்களை தாங்கியபடி வாழ்க்கையைக் கடந்த, கடக்கின்ற மனிதர்களுக்குள் நிலவிய காதல்களுக்கும் கொண்ட உறவுகளுக்கும் சாட்சியாய் இந்நாவல் இருக்கக்கூடும்.
Profile Image for Balaji M.
229 reviews14 followers
August 14, 2020
ஐரிஸ்
******

சிறு காமமும் பெருங்காதலும் பொதிந்த கவித்துவ குறுநாவல்.

பிறழ்காதல் புனைவாக இருப்பினும்., காதலின் அடிநாதம் வரை சென்றதாகவே கருதக்கூடிய அளவுக்கு இரசித்து கவிதை நடையில் எழுதப்பட்ட நாவல்.

மனோ, ப்ரியா என இவர்களின் ஊடலும் கூடலும், பிரிவும் சேர்தலும், கோபங்களும் தாபங்களும், கொண்ட இவர்களது வாழ்நாட்கள் எதையும் எதிர்பார்க்கா பரஸ்பர அன்பிலானது., ஆனால் அனைத்தும் பூர்த்தியாகி போகிவிடக்கூடிய, கற்பனைக்கும் எட்டாத அவர்களது வாழ்வின் ஒரு பகுதி நமக்கு சிலிர்ப்பினை தரக்கூடியாதாக இருக்கிறது.

ஒரு சோறு பதமாக பின்வரும் வர்ணனை போதும். ஆனால் இப்படி பல இடங்களில் வரும் ஆழ்நுட்ப காதல் மொழிகள், திரும்ப திரும்ப படிக்க தூண்டும் வரிகள்.

/"இதுவரை யாரும் உன்னிடம் கூறியிராத சொற்களைத் தேடியெடுத்து உன்னிடம் கூறிவிட வேண்டுமென்ற பிரயத்தனத்திலேயே என் எல்லா சொற்களையும் இழந்து விடுகிறேன்.”/


/"அவளில்லாத வெறுமையில் மரணித்து, அவளை நினைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மீண்டும் பிறப்பெடுத்தான்."/

இந்நாவலை வாசிக்கையில், நிச்சயம் இப்படியான கூடா காதலை கடந்து வந்தவர்களுக்கு, தங்களுக்குள் ஒருவித இரசாயன கலவை புகைத்தெழுந்து அடங்கும், அல்லது அடங்கலாம்!

ஐரிஸ் எனும் வானவில் தேவதையின் பெயர், இந்த கதைக்கு சாலப் பொருந்தும்.
Profile Image for Marudhamuthu.
68 reviews14 followers
September 25, 2022
தமிழ் Contemporary எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக நான் பார்பவராக மாறி போனார் லக்ஷ்மி சரவணக்குமார். இந்த நாவல் பேசிருக்கும் விஷயம் தமிழ் சூழலில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடம் அந்த உறவில் இருந்த அழகியலை சிந்திக்க வைத்து விடுகிறது. லதாவின் toilet seat படித்தவர்கள் கண்டிப்பாக வாசித்து பார்க்கவேண்டிய நாவல்.
2 reviews
September 3, 2020
Love in a relationship

This is the first work of this author which I picked. Story is really gripping and conversations are simply poetry.
Displaying 1 - 5 of 5 reviews