Gopinath Mohanty, winner of the Jnanpith award, and the first winner of the National Sahitya Akademi Award in 1955 - for his novel, Amrutara Santana - was a prolific Odia writer of the mid-twentieth century.
💥 13 ஒரியக் கதைகளின் தமிழாக்கம் இந்த புத்தகம். ஒரு புதிய கலாச்சாரம் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
💥 மேலும் இந்த புத்தகம் நமது குழுவில் இருந்து பரிசாக கிடைக்க பெற்றது. அந்த புத்தகம் மூலமாக இந்த வருடத்தின் வாசிப்பு ஆரம்பமாகிறது.
💥 அம்புப் படுக்கை- கமலா , நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவளது கணவனும், அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். தோழியாக அறிமுகமாகிய சங்கமித்ரா அவனின் வாழ்க்கையில் முக்கிய அம்சம் ஆனாள். இதை தெரிந்து கொண்ட போது, கமலா ஏதோ சொல்ல வந்து சொல்லாமலே போனாள்.
💥 வீடு - சதாசிவம் தன் குடும்பத்துடன் அந்த ஊருக்கு வந்தான். அந்த ஊரில் அவங்களுக்கு என்ன ஒரு வீடு தேடுவதை பற்றிய கதை.
💥அடையாளம் - ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் தங்களின் சொத்துகளை இழந்த ஒரு குடும்பம். தேர்தலில் வாக்களிக்க செலும் போது எதிர்கொண்ட நிகழ்வுகளை சொல்லும் கதை.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி