பொய் சொல்வதையும் அதைப் பரப்புரை செய்வதையும் எப்படி பாஜக ஒரு கலையாக முன்னெடுக்கிறது. அதில் எப்படி தொடர்ச்சியாக வெற்றிபெறுகிறது. இதற்கு பின்னால் இருக்கிற உளவியல் என்ன... எப்படி தொடர்ச்சியாக பல்வேறு விதமான பொய்களை சொல்லிக்கொண்டே செல்ல முடிகிறது. பாஜக சொல்லும் பொய்களில் என்னென்ன வகைகள் உண்டு, அவர்கள் பொய் சொல்வதில் பின்பற்றும் வழி முறைகள் என்ன? என்னமாதிரியான பொய்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்... எதிர்ப்புகளை எப்படி கையாளுகிறார்கள். ஏன் மக்கள் பாஜகவின் பொய்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இப்பொய்களின் எதிர்காலமும் பின்விளைவுகளும் என்ன என்பதையெல்லாம் ஆராய முயற்சி செய்கிறது இந்த சிறிய நூல்.
பொய்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை மக்களை நோக்கி பெரிய அளவில் எவ்வாறு வெள்ளப்பெருக்கு போல அனுப்பப்படுகின்றன. பொய்களை தேர்தலில் வெல்லும் ஆயுதமாக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாகவும் தரவுகளுடனும் நூலாசிரியர் முன் வைக்கிறார். அரசியல் தாண்டி மக்களின் உளவியல், தொழில்நுட்பங்களின் பங்கு என பல தளங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
The book talks about the skilled lying technique of the BJP. How they spend man and money power in organising a Troll army. However the book only has an overview which we are already aware thru social medias and non godi media or popularly referred as "Khan market Gang" and stops without giving detail view except some hyperlinks
குறைந்த நேரத்தில் பாஜகவின் பிரம்மாண்ட பொய்களை அறிய உதவியது. பெரிய கட்டுரைகளை கண்டு மலைப்பவர்கள் சுவாரஸ்யமாக படிக்கலாம். பெரிய விஷயங்களை சொல்லும் சிறிய புத்தகம். பொய்யை தோலுரிக்கிறது.
Arumaya pathivu, our bad fate , even educated people's also tied In this mess, mind less people, I felt venthathai thindru vaalnthu vithi vanthaaal pooi seranum
ஒரே மூச்சில் முழுப் புத்தகத்தையும் படிக்கத் தூண்டும் எழுத்து. எழுதிய விஷயங்களில் அத்தனை உண்மை இருப்பதாலேயே எழுத்து, சிறப்பாக மிளிர்கிறது. இதுபோன்ற சிறு நூல்களை இன்னும் நிறைய எழுதுங்கள், அதிஷா💐