கட்டுரை என்றாலே வறட்சியான சப்ஜெக்ட்டில் தேய்வழக்கான வார்த்தைகளைக் கொண்டு பக்கம் பக்கமாக எழுதுவது என்று ஒரு மரபு இருக்கிறது. அப்படியில்லாமல் சுவாரஸ்யமான புனைவுக்கான நடையில் நேரடியாக பேசுகின்ற மொழியில் அன்றாட அனுபவங்களை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியபோது, எழுதியவை இவை. இவற்றில் கடைசிப் பத்தி கருத்துகள் என்று எதுவும் இருக்காது என்ற உறுதிமொழியோடு ஜாலியாக கதை பேசுவது போல கட்டுரைகள் படிக்கலாம் வாங்க.