"குழந்தைகள்" - அவர்கள் வளர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல. நம்முடன் சேர்ந்து வளர்பவர்கள். பலசமயம் நம்மையே வளர்ப்பவர்கள். நாம் போகும் பாதையை காட்டக் கூடியவர்கள். அவர்கள் காட்டும் பாதையில் தான் நம் வாழ்க்கைப் பயணமே நகரும். எனவே அவர்கள் சரியான பாதையினை காட்ட பல்வேறு நல்லொழுக்கங்களை அவர்கள் அறிந்திருத்தல் வேண்டும். அறிவுரைகளை அப்படியே சொன்னால் அவை கசக்க செய்யும் அல்லது மனதில் பதியாமல் போகும். கதைகளுடன் சேர்த்து சொல்லப்படும்போது அவ்வறிவுரைகள் கதைகளாக, அக்கதையின் மானுடர்களாகவே அவர்களுடன் வாழும். இக்கதைகளை இவ்வுலக குழந்தைகளுக்கும், என் உலகமான குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன்.