நிச்சயமாக வித்தியாசமான ஒரு கதைகளம் தான்... நம்மில் பலர் திருநங்கைகளை பற்றி அறிந்தாவது இருக்கிறோம்... அவர்களை ஏற்றுக் கொள்ளவும் பழகுகிறோம்... அரசும் அவர்களுக்கான உரிமையை கொடுக்க முயல்கிறது... ஆனால் அதே சமயம் நம்மில் எத்தனை பேர் அவர்களில் மற்றோரு சாரரான திருநம்பிகளை பற்றி அறிவோம்... ஒரு ஆண் திருநங்கையாய் மாறுவதில் உள்ளதை விட அதிக எதிர்புகளை ஒரு பெண் திருநம்பியாய் மாறுவதில் எதிர் கொள்கிறார்கள்... பெண்ணின் உடலமைப்போடு பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் விருப்பம் மறுக்கபடிகிறதா... இன்னும் மேலும் பல கேள்விகள்... இந்த குறுநாவலின் ஊடே....