உலகையே வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா எனக்கும் பத்து நாள் விடுமுறையைக் கொடுத்தது. அந்த பத்து நாட்களில் சில புத்தகங்கள் வாசித்தேன், கொஞ்சம் எழுதினேன், நண்பர்களுடன் அரட்டை அடித்தேன், படங்கள் பார்த்தேன், குழந்தைகளுக்குக் கதைகள் சொன்னேன், கொஞ்சம் அதிக நேரம் வீட்டிற்குப் பேசினேன். இப்படி விரும்பியபடி பொழுதை போக்கிக்கொண்டிருந்தேன். இந்த கொரோனா காலத்து விடுமுறையைப் பயனுள்ளதாக, மறக்க முடியாதபடி செய்தால் என்ன என்ற எண்ணம் வந்தபோது நாம் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடலாம் என்று தோன்றிற்று அதன் வெளிப்பாடே இந்த "சில முத்துக்கள்." நான் வாசித்த புத்தகங்கள் தான் எழுத வேண்டும் எனும் ஆசையை என்னுள் விதைத்தது, அது பட்டுப்போ