அவளருகே சென்று நின்றவன், "இதுக்கு முன்னாடி காபி போட்டிருக்கியா மீரா?" என கேலியாய் கேட்க
"ஹலோ, எங்க வீட்டுல பில்ட்டர் காபியே நான் போடுவேன், இதென்ன பெரிய விஷயம். அது சரி, உன்கிட்ட காபி மேக்கர் இல்லையா? காலைல அவசரத்துக்கு கஷ்டமில்ல?" என கேட்டாள்
"ஏன் அது இருக்குங்கற தைரியத்துல தான் காபி போட ஒத்துகிட்டயா?" என மேலும் சீண்டினான்
அவன் சீண்டியதும் அனிச்சை செயலாய், அருகிலிருந்த கரண்டி போன்ற ஒன்றை எடுத்துகொண்டு அவள் மிரட்டுவது போல் மீரா முறைக்க, அவளின் உரிமையான அந்த செய்கையில் தன்னை மறந்து, அவளை விட்டு பார்வையை விலக்க இயலாதவனாய் நின்றான் ஸ்டீவ்
அன்று சினிமா பார்த்த தினம் பார்த்த அதே பார்வை போல் அது மீராவை உறுத்தியது. என்ன விதமான கண்கள் இவனுக்கு, ஊடுருவி எதையோ தேடுவது போல் என்ன பார்வையோ என நினைத்த மீரா, தானும் ஏன் எதுவும் கூறாமல் அவனை பார்க்கிறோம் என்பதை உணரவில்லை
அவள் தன்னை ஆராய்வது போல் பார்ப்பதை உணர்ந்ததும், மனம் சிறகடிக்க "என்ன? உங்க தமிழ் சினிமா ஜோக்கர் ரோலுக்காவது தேறுவேனா?" என அவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து விட்டதை உணர்த்தும் விதமாய் கேலி செய்ய
அதை புரிந்துகொண்டு மீரா சமாளிப்பதாய் நினைத்து வேறு பக்கம் பார்த்த படி, "நீ தான் என்ன கண் அசைக்காம பாத்த ஸ்டீவ், நான் ஒண்ணும் உன்ன பாக்கல" என உளறினாள்
அதையும் அவன் தனக்கு சாதகமாக்கி கொண்டான், "அப்படியா, அழகா இருக்கறதை ரசிக்கறது தப்பா? It’s not a sin in my religion" என எப்படி மடக்கினேன் பார் என்பது போல் சிரித்தான்
"சொன்னஒரு பொய்யில் சொர்கத்தை கண்டேன் நமக்கானரகசியம் இதுவென நயமாய் உரைத்தாயோ…" To read more, get book from Amazon
- “அபூர்வ ராகம்” என்ற சஹானாவின் நாவல், பிரபல வார இதழான கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகை வென்றது. அதோடு, செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட கண்மணி இதழில் அந்த நாவல் வெளியானது
- 2018 செப்டம்பரில், Newstn.in என்ற இணைய இதழில், சஹானாவின் ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை வெளியானது
- 2016ம் ஆண்டு மங்கையர் மலர் நடத்திய "ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி"யில், சஹானாவின் "இரண்டாவது அத்தியாயம்" என்ற சிறுகதை பரிசு பெற்றது
- அதே ஆண்டு "தமிழ் வலைப்பதிவர் குழுமம்" நடத்திய சிறுகதை போட்டியில் சஹானாவின் சிறுகதை பரிசு பெற்றது
- 2013ம் வருடம், மார்ச் மாதம் தினகரன் நாளிதழின் இணைப்பு இதழான "வசந்தம்" இதழில், "இணையத்தில் கலக்கிய இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில், சஹானாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது
- 2011ல் "நேசம் பவுண்டேசன்” நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் சஹானாவின் சிறுகதை முதல் பரிசு பெற்றது
- அது மட்டுமின்றி, சஹானாவின் சிறுகதைகள் பல "வல்லமை", "அதீதம்", "திண்ணை" போன்ற இணைய பத்திரிக்கைகளின் புத்தாண்டு / பொங்கல் / தீபாவளி சிறப்பிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
- யூத் விகடன் இணைய இதழில், சஹானாவின் கவிதைகள் சில வெளியாகியுள்ளன
- இரண்டரை லட்சத்திற்கு மேல் ஹிட்கள் பெற்றுள்ள சஹானாவின் “அப்பாவி தங்கமணி” என்ற பெயர் கொண்ட எனது வலைப்பூவில் (BLOG - not available to public view now), சஹானா எழுதிய தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை பதிவுகள், கட்டுரைகள் என 200க்கும் மேற்பட்ட பதிவுகள், பலரால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு, சஹானாவிற்கென ஒரு வாசகர் வட்டத்தையும், எழுத்துலக நட்புகளையும் பெற்றுத் தந்தது