Jump to ratings and reviews
Rate this book

Huntsman

Rate this book
புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடிந்தாலும் இந்த நாவல் உரத்துப் பேடுவது வேட்டையைப் பற்றி மட்டுமல்ல, அகமலைக் காட்டின் பளியக்குடி மக்களின் வாழ்வையும் இடப்பெயர்வையும் நுட்பமாக பேசுகிறது. 2016 ம் ஆண்டு சாகித்திய அகதெமியின் யுவபுரஸ்கார் விருதையும் நற்றிணை பதிப்பகத்தின் பா. சிங்காரம் நாவல் விருதையும் பெற்ற இந்த நாவல் வெளியானது முதல் இப்போது வரையிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

254 pages, Paperback

First published January 1, 2014

32 people are currently reading
214 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
61 (32%)
4 stars
90 (47%)
3 stars
29 (15%)
2 stars
7 (3%)
1 star
3 (1%)
Displaying 1 - 30 of 50 reviews
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
June 25, 2021
மனிதன் ஒரு சமூக விலங்கு. நமக்குள் இருக்கும் பேராசை என்னும் மிருக்கத்தனம் மேலோங்கும் போதெல்லாம் இயற்கையை சூறையாடுகிறோம். இந்த உலகத்தில் மனிதனுக்குள்ள உரிமை எல்லா சக உயிரினங்களுக்கும் உள்ளது. மிருகத்தனத்தை விட்டொழித்து மனிதத்தை போற்றுவோம்! பிற உயிரினங்களை நேசிப்போம்!

இந்த நாவலில் வரும் தங்கப்பனின் கதாபாத்திரம் யானையைக்கொல்லும் பகுதி மிகுந்த பதைப்பதை உண்டுபண்ணியது. புலியை வேட்டையாடும் பகுதியும் புலி வேட்டையாடும் பகுதியும் பரபரப்பாக இருந்தது.

ஜமீன்தாரின் கதாபாத்திரம் நகரத்தில் வாழும் நம்மைப்போன்ற காட்டைப்பற்றி அறியாதவர்களின் பாத்திரம். அது ஒரு சம்பவத்திற்கு பிறகு நடந்து கொள்வது, நம்மைப்போன்றோர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதிர்கொள்ள முடியாமல் ஓடிப்போவதை போல ஓடிவிடும்.

நாவலின் முடிவு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.
ஒரு தேர்ந்த வேட்டைக்காரனுக்கு புலி செத்துவிட்டது தெரியாமல் பக்கத்தில் சென்று பலியாவது, புலி செத்தது மாதிரி நடித்து ஏமாற்றுவது கொஞ்சம் சினிமாத்தனம் போல இருந்தது. மற்றபடி காட்டையும் காட்டில் வாழும் பழங்குடியினரையும் அவர்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றி விரிவாக பதிவுசெய்துள்ளார்.
அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
October 22, 2019

சாயாவனமும் கானகனும்:

“எந்தவொன்றையும் முற்றாக இந்த மனிதர்களால் அழித்துவிடமுடியாது, எல்லா முடிவுகளும் சில எச்சங்களை விட்டுச் செல்கிறதென்பதை இவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்தக் காட்டின் ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம்தான்.”

சாயாவனம் மற்றும் கானகன் நாவல்களைப் பற்றிய ஒருங்கிணைந்த YouTube பதிவு:

👇🏼

https://youtu.be/5HY5BY6aKcE
22 reviews2 followers
May 2, 2021
கானகன்-லட்சுமி சரவணகுமார்! சுவாரசியம் விறுவிறுப்பு குறையாமல் நாவல் நெடுங்கிலும் தொடர்கிறது. ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் தருகிறது.நாவலை வாசிக்க வாசிக்க வாசிப்பு மட்டுமின்றி காடுகளையும் மலைகளையும் நேசிக்க செய்தேன். சில தினங்களுக்கு மலை கிராம மகனாகவே உணர்ந்தேன். ❤
Profile Image for Premanand Velu.
241 reviews42 followers
November 30, 2022
நாம் காணாத கதைக்களங்கள் பல நூறு ஒளிந்திருக்கிறன, நமது பரப்பில். குரலற்றவர்களின், முகமற்றவர்களின் குரல் வழியே பல நூறு சுவாரசியமான கதைகள் கொடுக்க முடியும் என்று லட்சுமி சரவணகுமார் இங்கு உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு வேட்டையின் நூலிழையின் வழியே, ஒரு காட்டின் உள்ளே நம்மை உள்ளிழுத்து ஒரு வனத்தை நம் மனதினுள் விதைத்து, நீரூற்றி, உயிர் பெற வைத்தது, அதனோடு நம்மை வாழவே வைத்திருக்கிறார்.
கதை நடக்கும் காலம் 1980 களின் ஆரம்பகாலம்... அதன் பரவலான நிகழ்வுகளை சுட்டியிருந்தாலும், அவை கதைக்குள் எந்த முக்கியமான அடிப்படையையும் பாதிக்கவில்லை. அவரின் காடு காலம் கடந்த ஒன்றாகவே இருக்கிறது, பளிச்சியைப் போல், பாட்டாவைப் போல், அவர்கள் வணங்கும் பளியர்களைப் போல்...
அதன் மனிதர்கள் அதிக குழப்பமின்றி மிகவும் எளிமையானவர்கள். அவர்களின் வாழ்வியல் மட்டும் அல்ல, மனதாலும். அவர்களின் கோபங்கள், தாபங்கள், கவலைகள், வன்மங்கள் எல்லாமே எளிமையாக, வெளிப்படையாக, உக்கிரமாக வெளிப்படுகிறது. வெகு ஜன வாழ்வில் நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் உறவுகளின் உறுதியும், திண்மையும் இந்த மனிதர்களிடையே இல்லையென்றாலும், அந்த நெகிழ்ந்த உறவுகளிடையே ஏற்படும் அடிப்படை உணர்வுகளை, அதன் தன்மைகளை இழக்காமல் காட்டுவது, பல இடங்களில் நெகிழ வைக்கின்றது.


"தன் தாய்மையை அங்கீகரிக்கும் எல்லோரையும் ஒரு பெண் அதீதமாய் நேசிக்கத்தான் செய்வாள்."


அந்த காலகட்டத்தில் காட்டுக்கு ஏற்பட்ட மாற்றங்கள், அதன் விளைவு ஆகியவற்றை பின்புலமாகக் கொண்டு, பளியர்கள், கருமாண்டி, ஜமீன்தார் என்று ஒவ்வொருவரின் உருவகமும், அவர்களின் சிந்தனைகளும், அவர்களின் வாழ்வோட்டமும் ஒரு நவீன பாணி ஓவியம்போல் ஒவ்வொரு வண்ணமாக, ஒன்றின் மீது ஒன்று எனப் பிண்ணிப் பிணைந்து, நம்மையும் அதனுள் இழுத்துக்கொள்கிறது.
சில இடங்களில், குறிப்பாக வேட்டை நடவடிக்கைகள், வன விலங்குகளைப்பற்றி நாம் முன்பே படித்து வரைந்துள்ள சித்திரங்களுடன் ஒத்துப்போகாமல் இருந்தாலும், கதையோட்டத்தின் வழியே நம்மால் எளிதாக அதைக் கடந்து கதைக்குள் ஆழ்ந்து போக முடிகிறது.

நிற்க.

ஒரு கதை என்ற தளத்தில் இருந்து, குறியீட்டுகளின் வழியே வேறு ஒரு சரித்திர நிகழ்வை குறிப்பிடுகிறாரோ என்ற எண்ணம் இடையே உறுதியாக எழுவதைத் தடுக்கமுடியவில்லை. நகர நாகரீகத்தை விடுத்து, காட்டோடு ஒன்றி வாழும் பளியர்கள், அவர்களுக்கு காப்பாக இருக்கும் பாட்டா என்னும் புலி, அதை வேட்டையாட, அந்தக்காட்டுக்குள்ளேயே வாழும் தங்கப்பன், அந்தக் காட்டைக் கவர்ந்து, அதன் வளங்களை சூறையாட நினைக்கும் பல்வேறு வெளியூர் தரப்பு, அந்தக் காட்டையும், விலங்குகளையும் அழிக்கின்றவர்களை திரும்ப வேட்டையாடி அழிக்கும் விலங்குகள், இறுதியில் தங்கப்பனை வெல்லும் புலி என்று விரியும் சம்பவங்களும் அதன் காரணிகளும் மட்டும் அல்ல, கதையின் ஊடே கதையில் வருபவர்களின் வழியே, பொதுவான விவரணைகள் இடையே வரும் வரிகளின் வழியே தொக்கி நிற்கும் உணர்வுகள் நமக்கு அப்படி ஒரு அனுபவத்தை அளிக்கின்றது.


"ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்."

"எல்லா தத்துவங்களுக்கும் அடிப்படை வாழ்க்கை தானேயன்றி, புத்தகங்கள் அல்ல."

"யுத்தம் ஒருவகையான வேட்டை. ஆனால் எதிரியைத் தாக்க அனுமதிக்காது நடக்கும் யுத்தங்கள் யுத்தங்களே அல்ல, அது சூது. நல்ல வீரன் மிருங்களை ஓடவிட்டுக் கொல்ல மாட்டான். இப்போது வேட்டைக்குப் போகப்போகிறவர்கள் வேட்டையாடத் தகுதியற்றவர்கள். எந்த மிருகத்தையும் அதன் கண்களை எதிர்கொண்டு அதனோடு யுத்தமிடத் தவறுகிறவன் தன்னைத் தானே கொலை செய்து கொள்கிறான்."


இப்படி இடையே வரும் வரிகள், இது கதையல்ல, வேறு எதோ சம்பவத்தின் குறியீடு என்ற எண்ணத்தை வெகு ஆழமாக விதைக்கிறது. அதனால் கதையைத் தாண்டிய வேறு ஒரு அனுபவத்தை, அந்தப் பரப்பை, கதை மூலமாகவே, அது நமக்குள் விதைத்துச் செல்கிறது. அதுவே இதன் வெற்றி என்று தோன்றுகிறது.
Profile Image for MJV.
92 reviews39 followers
November 7, 2020
லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் எழுத்தில் இது எனக்கு இரண்டாவது நாவல். முதல் நாவல் உப்பு நாய்கள். அந்த நாவலுடைய களம், சென்னையின் இருட்டான யாரும் தொடத் தயங்குகிற விஷயங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட விறுவிறுப்பான கதை. பொதுவாக என் புத்தக வாசிப்புக்கான தேர்ந்தெடுப்புகள், ஒற்றை வரியை வைத்தோ, எங்காவது காதில் கேட்ட அறிமுகங்கள் வைத்தே அமையும். அந்தப் புத்தகத்த��ப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் படிக்கவே பிடிக்கும். அந்த வரிசையில் எப்படியோ கானகன் பற்றித் தெரிய வந்தது. வெகு சில புத்தங்கள் மட்டுமே முழுவதும் தெரிந்து கொண்டு படிப்பேன்.

முதல் பக்கத்தைப் புரட்டிய போதுதான் விருது பெற்ற புத்தகமென்றே தெரிய வந்தது. சரி ஒரு புத்தகம் அவருடையது வாசித்தோம், இந்த புத்தகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பெரிதும் யோசிக்காமல், புத்தகத்தை மெதுவாக வாசிக்கத் தொடங்கினேன். முதல் இரண்டு பக்கங்கள் தாண்டும் முன்னர், இந்த புத்தகம் என்னை வாசிக்க வைக்கப் போகிறது, நான் அதன் பின்னே பயணிக்கப் போகிறேன் என்பது விளங்கிவிட்டது. தங்கப்பன் என்ற ஆளுமையின் வேட்டைக்களமும், அன்சாரி அமைத்த பரணும், அங்கே இருந்த சுனையும், தங்கப்பனின் உயிரின் மூச்சாய் தோளில் கிடந்து பல உயிர்களின் மூச்சை நிறுத்திய துப்பாக்கியும் போதும் இந்த புத்தகம் எப்படியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள.

விடுமுறை என்பதால் ஒரே நாளில் படித்துத் தீர்த்தேன். வேகமாய் இழுத்து சென்றது புத்தகம், பின்னே சென்றேன் அவ்வளவுதான். புரியவில்லை, மெதுவாக ரசித்து படிப்பது ஒரு வகை வாசிப்பு போதை என்றால், வேகமாய் படித்து தீர்ப்பது இன்னுமொரு வகையான போதை என்றே நினைக்கிறேன். காட்டின் ஆன்மாவை விரும்பி, அங்கே உள்ள அனைத்து உயிர்களையும் பேருயிராய் மதித்து, காட்டை பாதுகாக்க நினைக்கும் அந்த பளிச்சியம்மாவின் பிள்ளையாய் திரிந்து அலைகிறான் கானகன். புனைவு என்பதைத் தாண்டி, இந்த புத்தகம் பேசும் காட்டின் நீதி, காட்டின் அநீதி, காட்டின் ஆன்மாக்கள், பளியர் குடி மக்களின் வழக்கங்கள், அவர்களைக் காக்கும் பளிச்சி என்ற அனைத்துமே காட்டின் மிகப்பெரும் அம்சங்களாகவே எனக்குத் தோன்றுகிறது. மிகுந்த உழைப்பு இந்த புத்தகத்துக்கு பின் இருப்பது புரிகிறது. 256 ஆவது பக்கத்தை முடித்து புத்தகத்தை மூடி வைத்து, அந்த அகமலைக் காட்டைத் தாண்டி வர சில மணி நேரங்கள் எடுத்துக் கொண்டேன்.

வேகமாகவும், பேராசையுடனும் காடுகள் அழிக்கப்படும் நிலையில், காட்டையும் அதன் உயிர்களாகிய அனைத்தையும் காத்து நிற்கின்ற மக்களையே, காட்டையும் அதன் உயிர்களையும் அளிப்பவர்களாய் சித்தரித்து எப்படி கொஞ்சம் கொஞ்சமாய், சுரண்டி எடுக்கப்படுகிறது என்பதையும் உச்சந்தலை ஆணி அறைதல் போல் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். இந்த பக்கங்களின் மூலம் சூழலியல் சார்ந்த மிக முக்கியமான தர்க்கங்களையும், அதில் உள்ள நியாயங்களையும் சற்று உரக்கவே கூறியுள்ளார். இந்த கதையின் கரு என்று சொன்னால் அது புலி வேட்டையில் தொடங்கி, புலியின் வேட்டையில் முடியும் என்பதாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அது இல்லை கதை. புலி வேட்டைக்கு, புலியின் வேட்டைக்கும் இடையே நடக்கும் காட்டின் கதறல்களும், மனிதர்களின் பேராசையும், பளிச்சியின் உக்கிரமும், யார் அந்த காட்டின் உண்மையான கருமாண்டி, காட்டாளன், யார் அந்த காட்டின் காவலன், உயிர்களின் காதலன், மரங்களையும் சருகுகளையும் கூட நேசிக்கத் தெரிந்த உயிர் யார் போன்ற கேள்விகளின் விடைகளே இந்தப் புத்தகத்தின் உயிர் நாடி.

ஒரு புத்தகத்தைப் பற்றி, எழுதும் போதான சிக்கல், எதை விடுவது என்பதும், எதை விடமால் எழுதிட வேண்டும் என்பதே. ஆனால் இந்த புத்தகத்தைப் பற்றி மட்டும், முடிந்த அளவுக்கு கதையை சொல்லிடாமல் அனைத்தையும் எழுதி விடத்தான் நினைக்கிறேன். பார்ப்போம் எந்த அளவுக்கு அந்த பாதையில் பயணிக்க முடிவெடுத்ததைக் காப்பாற்றி செல்ல முடியுமென்று!
மிகப் பெரிய வேட்டைக்காரன் என்று சுற்றுப்பட்ட, 30 பளியக் குடிக்கான காடுகள் இருந்த இடத்தில் பெயரெடுத்தவன் தங்கப்பன். பொதுவாக பளியர் இன மக்கள் உணவுக்கு வேட்டையாடுவதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களின் வாழ்வும், காட்டின் விலங்குகள் போலவே இருந்தது. தேவைக்கு அதிகமாக அவர்கள் எடுத்துக் கொள்வதுமில்லை, கொன்று குவிப்பதுமில்லை. தங்கப்பன் பளியர்குடியின் அங்கமானவன் அல்ல. ஆனால் அவன் மிகச் சிறந்த வேட்டைக்காரன். காட்டை அங்குலம் அங்குலமாக அளந்து, தெரிந்து வைத்திருந்த கருமாண்டி.

"எல்லாக் காட்டுக்கும் ஒரு ஒடம்பு இருக்கு, மனுஷ உடம்புக்கு இருக்கற எல்லா உறுப்பையும் மாதிரி அதுக்கும் உடலுறுப்பு இருக்கு... மனுஷனுக்குனு ஆதாரமா ஒரு உசுரு இருக்கிற மாதிரி அதுக்கும் இரு உசுரு இருக்கு... காட்டுக்குள்ள காலு வெச்சு நடக்கறப்போ எல்லாம் யாரோ ஒருத்தரோட ஒடம்புல கால வெச்சு நடக்கறோங்கற கவனத்தோட நட... காடு செலசமயம் தேவத... செலசமயம் மோகினி, செலசமயம் பிசாசு... எப்ப என்னவா இருக்கும்னு தெரியாது".

தங்கப்பனுக்கு அவனுடைய அப்பன் சொன்ன அறிவுரை இது. தங்கப்பனும் என்றைக்கும் தேவையில்லாத வேட்டைகளை செய்ததில்லை. காட்டுக் கோழிகளையும், கருங்குரங்குகளையும் மட்டும் உணவிற்கு வேட்டையாடுவான். அவன் வைக்கின்ற குறி, துப்பாக்கி பிடிக்கின்ற லாவகம், அவனது வாழ்க்கை முறை, சுற்று வட்டார மக்களின் நாயகனாய் தெரிவது போன்ற விஷயங்களில் ஈர்க்கப்பட்டு, மூன்று மனைவிகள் இருந்தனர். மாரி, சகாயராணி மற்றும் செல்லாயி. செல்லாயி பளியர்குடியின் ஒரு பளிச்சி. மணமாகி ஒரு பிள்ளை. அவன் தான் வாசி, இந்த கதையின் இன்னுமொரு மிகப் பெரிய ஆளுமை. அவனைக் கையில் பிடித்துக் கொண்டு தங்கப்பனோடு வந்து விட்டாள். வேட்டையின் பாலிருந்த ஆர்வத்திலும், தங்கப்பனின் முரட்டு செய்கைகளாலும் மனதைப் பறி கொடுத்திருந்த பளிச்சி மகள். ஆனாலும் மூத்தார்களிடம் இணக்கமாகவே இருந்தால் செல்லாயி.
அப்படி தான் மாரியும், சகாயராணியும் கூட.

இதைத் தாண்டி இந்த காட்டின் அதிகாரத்தில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்கப்பனின் நெருங்கிய நண்பன் போன்ற அன்சாரி, அவன் தம்பி தமீம், பளியக்குடியின் மூத்தப் பெரியவர் பூசணி, செல்லாயி பளியக்குடியில் விட்டு சென்ற அவள் கணவன் சடையன், காடே அதிரும் படி முதல் சில பக்கங்களின் வர்ணிப்பில் இறந்து போன மஞ்சள் பிசாசு பாட்டா (பெண் புலி), வேட்டையாட வந்த ஜமீன், அவரின் குடும்பம், வாசியின் தம்பி கட்டையன், குயிலம்மாள், இரண்டாவது மாபெரும் வேட்டையில் காடதிற வரும் களிறுகளின் கூட்டம், காடாய் - காட்டை காக்கும் தேவதையாய் பளிச்சி என்று இந்த புத்தகத்தின் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் அப்படியே மனதில் நின்று விட்டது.

இப்படி இருக்கும் காட்டில் தான், அன்சாரியின் மாட்டுக்கிடையை காக்க வேண்டி தங்கப்பன் பெரும் வேட்டையை நிகழ்த்திக் காட்டியிருந்தான். அதில் மிகப்பெரிய வேட்டை விதி ஒன்றையும் மீறியிருந்தான். பெண் மிருகங்களை எப்போதும் வேட்டையாடக் கூடாது என்ற எழுதா விதி அன்றைய இரவின் இருளின் காற்றாய் அழிக்கப்பட்டிருந்தது. தாய் இல்லாத குட்டி விலங்குகளின் மொத்த வாழ்வும் மாறி, தேவைக்கு வேட்டை ஆடாமல், எப்போதும் அழிக்க வேண்டும் என்ற குரூரம் குட்டிகளிடம் ஒட்டிக் கொள்ளும். இப்போது ஒன்றும் செய்ய முடியாது, காரியங்கள் எல்லை மீறி நிகழ்ந்து விட்ட இருளின் விநாடிகள் அவை.

"இத்தன காலமா பாட்டா இந்தக் காட்டுக்குள்ளதான் இருந்திருக்கு. நம்மள ஒரு நாளும் ஒன்னு... செஞ்சதில்லயே. பளிச்சி வாக்க மீறியா நம்ம கூடிய கெடுக்கப் போகுது?. தைர்யமா இருங்கப்பா..."
பூசணிக்கும் அப்படித்தான் பட்டது. இந்தக் காடு இவர்களை வஞ்சிக்குமளவுக்கு வன்மங்கொண்டதல்ல. தனது ஒவ்வொரு நரம்பையும், எலும்பையும் இந்தக் காட்டோடு பிணைத்திருப்பவன் பளிகன். இந்தக் காடு அவனுக்கு செய்யும் துரோகம், தனக்குத் தானே செய்து கொள்ளும் துரோகத்தைப் போன்றது".

இது அந்த புலிக் கொல்லப்படுவதற்கு முன்னர் இப்படி பளியர் குடி மக்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
தங்கப்பன் எப்போதும் இரண்டு பேராகவே இருந்தான். வேட்டையின் பொது இரத்த வெறி கொண்டு, விலங்குகளை எதிருக்கெதிர் நின்று வேட்டையாடும் தங்கப்பன். வேட்டையாடாமல் தன் மனைவியருடன் இருக்கும் தங்கப்பனுக்கு காதல் பெருகி வழியு��். முக்கியமாக தனது மூன்றாம் மனைவி செல்லாயி மீது. செல்லாயிக்கு புலி வேட்டை மீது அலாதிப்பிரியம். பளிச்சியாக இருந்தும், புலியை வேட்டையாட வேண்டுமென்ற வினோத ஆசை தங்கப்பன் என்ற வேட்டை உலகின் முழுவதும் முங்கி எழுந்த அந்த மனிதனுக்கே புதிராகவே இருந்தது.

"ஏண்டி பாட்டான்னு சொல்லி கும்பிட வேண்டியத வேட்டையாடனும்னு சொல்றியே நீ என்னடி பளிச்சி ?..."

"ஆமா பளிச்சியா இருந்தா பாட்டாவ வேட்டையாடக் கூடாத?... அதும் காட்டுல ஒரு மிருகந்தானா... ஒவ்வொருத்தனும் அவனவன் சத்துக்கு உடும்பையும், பணியையும் வேட்டையாடறான்... நீ உன் சத்துக்கு புலிய வேட்டையாடினாத்தான் உனக்கு சரியா இருக்கும்..."

தங்கப்பன் சிரித்துக் கொள்வான்.
"புலி இல்லைன்னா என்னாகும்னு தெரியுமா? மான், ஆடு, மாடு எல்லாம் பெருத்துப் போயி காட்டுல பச்சையே இல்லாமப் போகும். புலி, சிங்கம், சிறுத்தை, யானை எல்லாம் இருந்தாத்தான் நல்ல காடு. இது ஏதும் இல்லாத காடு வெறும் தோப்பு தான். கொஞ்ச காலத்துல வெறும் பொதர்க்காடத்தான் இருக்கும்".

இவ்வாறு காட்டின் சமநிலையைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்த தங்கப்பன் தான் அந்த காட்டின் ஆன்மாக்கள் அனைத்துமே அதிர்ந்து அடங்காத நிலைக்கு தள்ளப்படும்படியான வேட்டையை செய்து முடித்திருந்தான். இதை ஒட்டியே இனி கதை வேகமெடுத்து காட்டின் மேடுகளிலும், பள்ளங்களிலும், சுனைகளிலும், பாறைகளிலும், சருகைகளிலும் பயணிக்கிறது. இதன் பிறகே சடையனின் அதிரும் மாற்றங்களும், அபூர்வமான தருணங்களில் காட்டோடு ஒன்று சடையன் மீது பளிச்சி அருள் இருப்பதாய் பூசணி உணர்வதும், மற்ற அனைவரும் சடையனுக்கு பைத்தியம் என்று நினைப்பதும், வாசி மெல்ல மெல்ல தங்கப்பனின் நிழலில் இருந்து விலகி காட்டின் நிழலுக்கு அருகிலும், தன் அப்பன் சடையனை நெருங்க நினைப்பதும் நடக்கிறது.

காட்டின் தெய்வமான பளிச்சியோடு சடையன் பேசுகிறான் என்பதை உணர்ந்த பூசணி, அவனைப் பற்றி கவலைப்படும் நிலைப்பாட்டினை வெகுவாய் மாற்றிக் கொண்டிருந்தார். சடையன் அடிக்கடி எல்லோரிடமும், அந்த கடு மாறிக் கொண்டிருக்கிறது என்றும், காட்டின் உக்கிரத்தையும், காட்டை ஆக்கிரமத்த மனிதர்கள் காட்டிற்கான வரைமுறைகளை மதிக்கத் தவறும் ஒவ்வொரு தருணமும் பளிச்சியின் கோபம் காட்டிற்குள் இறங்குகிறது என்பதை எப்போதும் பளியக் குடியின் நினைவுக்கு கொண்டு வந்த படி, காட்டின் ஆன்மாக்களுக்கு மத்தியில் திரிந்த படியிருந்தான்.

எப்போதுமே தனக்கு இணையான அல்லது தனக்கும் மேலான திறமைக் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை வேண்டுமென்று நினைப்பதில் தங்கப்பனும் விதிவிலக்கல்ல. ஆனால் மாரிக்கும், சகாயராணிக்கும் குழந்தைகள் இல்லை என்பதால், செல்லாயி மகன் வாசியை அந்தக் காட்டின், அடுத்த மிகப்பெரிய வேட்டைக்காரனென மாற்ற வேண்டும் என்று நினைத்தான் தங்கப்பன். ஆனால் வாசி, வளர வளர, சடையனை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தான். காட்டை முழுவதுமாய் நேசிக்கவும் தொடங்கினான். இது தங்கப்பனை வாசியிடமிருந்து மெல்ல மெல்லப் பிரிக்கத் தொடங்கியது.

தங்கப்பன் கதை நகர நகர மிகப்பெரும் வெறியின் உச்சத்தில் வேட்டையை நிகழ்த்துகிறான். காட்டை ஆக்கிரமித்தும், அங்கே கஞ்சா தோட்டங்கள் அமைத்துக் கொழுத்த முதலாளிமார்களிடம், இப்போதெல்லாம் பளியர் குடி மக்களே வேலைக்கு செல்லத் தொடங்கியிருந்தனர். அதனால் மெல்ல மெல்ல விலங்குகளின் தடங்களும், அவைகளின் தண்ணீர் சுனைகளிலும் மக்கள் ஆக்கிரமிப்பு தொடங்கியிருந்தது. உணவும், நீரும் கிடைக்காத விலங்குகள், காட்டின் மற்ற விலங்குகளும், மனிதர்களும் பயந்து முடங்கும்படி காட்டையே அதிர செய்து கொண்டிருந்தன. இக்கதையினைப் படிக்கையில் பல சமீபத்திய நிகழ்வுகள் கண் முன் நிழலாடிச் சென்றது.

அப்போதுதான் இந்தக் கதையின் இரண்டாவது பெரிய வேட்டையை தங்கப்பன் முறுக்கு மீசையின் தோரணையில் முடித்திருந்தான். ஒரு சில தருணங்களில் அவனை மற்றவர்கள், மனிதனாக பார்க்கவே அஞ்சினர்.

"ரத்தம் சிதற ஒரு மிருகத்தை சுட்டு வீழ்த்தும் போது, தான் கடவுளாலும் சாத்தனாலும் ஒரு சேர ஆசீர்வதிக்கப்பட்டவன் என்கிற கர்வத்தை உணர்ந்தான். அந்த கர்வம் மென்மேலும் கொல்லச் சொன்னது. இந்த கர்வத்தை விரும்பினான். அவனோடு வந்தவர்கள் எல்லோருக்கும் அவனைத் தொடர்ந்து செல்லவே அச்சமாய் இருந்தது".

தங்கப்பன் மிகப்பெரிய வேட்டைக்காரன். காட்டை மிக நன்றாக அறிந்தவன். ஆனால் வாசி காட்டை ஒரு பளிகனாக நேசிக்கத் தெரிந்தவன். தன் உயிருள்ள வரை எந்த காட்டின் உயிருக்கும் தீங்கு நேர கூடாது என்று பதறும் காட்டாளன். வாசிக்கு தான் காட்டாளனாக, கருமாண்டியாக, கானகனாக மாறும் இடமெல்லாம் மெய் சிலிர்க்கும் இடங்கள். இப்படி செல்லுகின்ற கதையில் காமத்தின் இச்சைக்கும், காதலுக்கும், காதல் தொலைந்த நிலையில் மனித மனதின் உருக்கமும், இரண்டு வேட்டைகளுக்கு நடுவில் நடத்தப்பட்ட ராட்சச வேட்டைகளைத் தாண்டி தான் கதை முடிவுக்கு வரும்.

லஷ்மி சரவணக்குமார் அவர்கள் மிக நேர்த்தியாக கதையினை இந்த இடங்களில் நகர்த்தியிருப்பார். எந்த அளவுக்கு தங்கப்பனின் வேட்டை வெறி ஏறிக் கொண்டிருக்கறதோ அந்த அளவுக்கு மறுபுறம் வாசிப் பக்குவப்பட்டுக் கொண்டிருந்தான். வழக்கம் போல வேட்டையின் முடிவில் அரசாங்க அதிகாரிகள் பளியர் குடி மக்களை, கைது செய்ய முனையும் ஒரு காட்சியினை விவரித்திருப்பார். காட்டைக் காக்கும் மக்களை, காட்டை அழிப்பவர்கள் எனக் குற்றம் சாட்டி கைது செய்ய முனைவர். இந்த கதை ஒரு புனைவு என்று புத்தகம் முடிந்த பின்னரும் நினைத்தால் அது பெரும் பிழை என்று தான் சொல்ல முடியுமென நினைக்கிறேன். பின் வரும் வரிகளைப் படித்ததும் நினைவுக்கு வந்த வரி "சாது மிரண்டால் காடு கொள்ளாது".

பளியர் குடியின் மூத்தவர் பூசணியை ரேஞ்சர் அடிக்க ஓடி வந்த பொழுது:

"ஆத்திரத்தோடு அவரை அடிக்க ஓடி வந்தான். அவ்வளவு நேரமும் அவர்கள் அடித்ததை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த ஆட்கள் பூசணியை அடிக்க அவன் கையை ஓங்கியதும் திருப்பி அடிக்கத் துவங்கி விட்டார்கள். காரணமில்லாமல் தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என்கிற கோவம் இப்போது இன்னும் அதிகமாகி விட சுற்றியிருந்த எல்லோருக்குமே வெறி கொண்டுவிட்டது. வந்திருந்த பாரஸ்ட் ஆட்களிடம் துப்பாக்கி இருந்தாலும் அதனை எடுத்து அவர்கள் பயன்படுத்துவதற்கான அவகாசத்தை பளியர்கள் கொடுத்திருக்கவில்லை. கட்டையன் உரக்கக் கத்தினான்.

"ஒரு அவுசாரி மகனையும் விடக்கூடாது...
மொத்த வண்டியோட வெச்சுக் கொளுத்திருவோம் பாட்டா..."
....
"அய்யா எங்கள விட்றச் சொல்லுங்க... எங்களுக்கு வேற வழியில்லாமத்தான் இப்பிடி செஞ்சோம்.. இனிமே இந்தப்பக்கமே வரமாட்டோம். விட்றச் சொல்லுங்க..."

பூசணி அவன் மூஞ்சியைப் பார்க்கவே இல்லை, "டே கட்டையா.. இங்க வாடா..."
கட்டையனும் அவனோடு இன்னும் சிலரும் அவரின் முன்னால் வந்து நின்றனர்.
"இவய்ங்கள நம்ம பளிச்சி மரத்துல கட்டிப் போடுங்கடா... தாயோளி மேலதிகாரிக தேடி வரட்டும். அதுக்குப் பெறகு பேசிக்கிருவோம்..."

மிகப்பெரிய அதிகார யுத்தத்தின் துவக்கத்தை செய்து வைத்து விட்டதாய் பளியர்குடி மக்கள் அனைவரும் சற்று பயந்தே, நாட்களைக் கடத்தினர். சரி இப்போது நான் முன்னர் சொன்னது போல இந்தக் கதையின் அனைத்து அம்சங்களையும் முழுக்கதையினை சொல்லாமல், இந்தப் பதிவினை கொண்டு செல்ல முடியாது என்பதைப் பூரணமாய் உணர்ந்து கொண்டேன்.

இந்தக் கதையைக் காடதிகாரமாகவே பார்���்கிறேன். காடையும், காட்டை சார்ந்து வாழும் மனிதர்களையும், அவர்களின் சூழலையும், எவ்வாறெல்லாம் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதும், காட்டின் உயிராய் வாழ்ந்த ஒவ்வொன்றும் - ஒவ்வொரு உயிரும் இறந்த பின், காட்டின் ஆன்மாவாய் உலவுகின்றன என்பதை ஓர் அழகியப் பின்னலாய் சொல்கிறது இந்தப் புத்தகம். கண்டிப்பாய் அடுத்த முறை காட்டின் பயணம், காட்டைப் பார்க்கிற பார்வையும் வேறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பாய் படித்துப் பாருங்கள்...
Profile Image for Premanand Velu.
241 reviews42 followers
November 30, 2022
நாம் காணாத கதைக்களங்கள் பல நூறு ஒளிந்திருக்கிறன, நமது பரப்பில். குரலற்றவர்களின், முகமற்றவர்களின் குரல் வழியே பல நூறு சுவாரசியமான கதைகள் கொடுக்க முடியும் என்று லட்சுமி சரவணகுமார் இங்கு உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு வேட்டையின் நூலிழையின் வழியே, ஒரு காட்டின் உள்ளே நம்மை உள்ளிழுத்து ஒரு வனத்தை நம் மனதினுள் விதைத்து, நீரூற்றி, உயிர் பெற வைத்தது, அதனோடு நம்மை வாழவே வைத்திருக்கிறார்.
கதை நடக்கும் காலம் 1980 களின் ஆரம்பகாலம்... அதன் பரவலான நிகழ்வுகளை சுட்டியிருந்தாலும், அவை கதைக்குள் எந்த முக்கியமான அடிப்படையையும் பாதிக்கவில்லை. அவரின் காடு காலம் கடந்த ஒன்றாகவே இருக்கிறது, பளிச்சியைப் போல், பாட்டாவைப் போல், அவர்கள் வணங்கும் பளியர்களைப் போல்...
அதன் மனிதர்கள் அதிக குழப்பமின்றி மிகவும் எளிமையானவர்கள். அவர்களின் வாழ்வியல் மட்டும் அல்ல, மனதாலும். அவர்களின் கோபங்கள், தாபங்கள், கவலைகள், வன்மங்கள் எல்லாமே எளிமையாக, வெளிப்படையாக, உக்கிரமாக வெளிப்படுகிறது. வெகு ஜன வாழ்வில் நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் உறவுகளின் உறுதியும், திண்மையும் இந்த மனிதர்களிடையே இல்லையென்றாலும், அந்த நெகிழ்ந்த உறவுகளிடையே ஏற்படும் அடிப்படை உணர்வுகளை, அதன் தன்மைகளை இழக்காமல் காட்டுவது, பல இடங்களில் நெகிழ வைக்கின்றது.


"தன் தாய்மையை அங்கீகரிக்கும் எல்லோரையும் ஒரு பெண் அதீதமாய் நேசிக்கத்தான் செய்வாள்."


அந்த காலகட்டத்தில் காட்டுக்கு ஏற்பட்ட மாற்றங்கள், அதன் விளைவு ஆகியவற்றை பின்புலமாகக் கொண்டு, பளியர்கள், கருமாண்டி, ஜமீன்தார் என்று ஒவ்வொருவரின் உருவகமும், அவர்களின் சிந்தனைகளும், அவர்களின் வாழ்வோட்டமும் ஒரு நவீன பாணி ஓவியம்போல் ஒவ்வொரு வண்ணமாக, ஒன்றின் மீது ஒன்று எனப் பிண்ணிப் பிணைந்து, நம்மையும் அதனுள் இழுத்துக்கொள்கிறது.
சில இடங்களில், குறிப்பாக வேட்டை நடவடிக்கைகள், வன விலங்குகளைப்பற்றி நாம் முன்பே படித்து வரைந்துள்ள சித்திரங்களுடன் ஒத்துப்போகாமல் இருந்தாலும், கதையோட்டத்தின் வழியே நம்மால் எளிதாக அதைக் கடந்து கதைக்குள் ஆழ்ந்து போக முடிகிறது.

நிற்க.

ஒரு கதை என்ற தளத்தில் இருந்து, குறியீட்டுகளின் வழியே வேறு ஒரு சரித்திர நிகழ்வை குறிப்பிடுகிறாரோ என்ற எண்ணம் இடையே உறுதியாக எழுவதைத் தடுக்கமுடியவில்லை. நகர நாகரீகத்தை விடுத்து, காட்டோடு ஒன்றி வாழும் பளியர்கள், அவர்களுக்கு காப்பாக இருக்கும் பாட்டா என்னும் புலி, அதை வேட்டையாட, அந்தக்காட்டுக்குள்ளேயே வாழும் தங்கப்பன், அந்தக் காட்டைக் கவர்ந்து, அதன் வளங்களை சூறையாட நினைக்கும் பல்வேறு வெளியூர் தரப்பு, அந்தக் காட்டையும், விலங்குகளையும் அழிக்கின்றவர்களை திரும்ப வேட்டையாடி அழிக்கும் விலங்குகள், இறுதியில் தங்கப்பனை வெல்லும் புலி என்று விரியும் சம்பவங்களும் அதன் காரணிகளும் மட்டும் அல்ல, கதையின் ஊடே கதையில் வருபவர்களின் வழியே, பொதுவான விவரணைகள் இடையே வரும் வரிகளின் வழியே தொக்கி நிற்கும் உணர்வுகள் நமக்கு அப்படி ஒரு அனுபவத்தை அளிக்கின்றது.


"ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்."

"எல்லா தத்துவங்களுக்கும் அடிப்படை வாழ்க்கை தானேயன்றி, புத்தகங்கள் அல்ல."

"யுத்தம் ஒருவகையான வேட்டை. ஆனால் எதிரியைத் தாக்க அனுமதிக்காது நடக்கும் யுத்தங்கள் யுத்தங்களே அல்ல, அது சூது. நல்ல வீரன் மிருங்களை ஓடவிட்டுக் கொல்ல மாட்டான். இப்போது வேட்டைக்குப் போகப்போகிறவர்கள் வேட்டையாடத் தகுதியற்றவர்கள். எந்த மிருகத்தையும் அதன் கண்களை எதிர்கொண்டு அதனோடு யுத்தமிடத் தவறுகிறவன் தன்னைத் தானே கொலை செய்து கொள்கிறான்."


இப்படி இடையே வரும் வரிகள், இது கதையல்ல, வேறு எதோ சம்பவத்தின் குறியீடு என்ற எண்ணத்தை வெகு ஆழமாக விதைக்கிறது. அதனால் கதையைத் தாண்டிய வேறு ஒரு அனுபவத்தை, அந்தப் பரப்பை, கதை மூலமாகவே, அது நமக்குள் விதைத்துச் செல்கிறது. அதுவே இதன் வெற்றி என்று தோன்றுகிறது.
Profile Image for Godwin.
36 reviews6 followers
October 22, 2021
இந்தியாவில் சூழலியல், கானுயிர் பாதுகாப்பு பற்றிய சட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படும் போது அந்தந்த நிலத்தை நம்பி வாழ்கிற பழங்குடிகளின் நலன் புறக்கணிக்கப்படுவதே பொதுவான அணுகுமுறையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு இலக்கியவாதி இயற்கையின் அழகை வெறும் கேளிக்கையாக மட்டும் அவதானித்து விட்டு கடந்து விட முடியாது என நம்புகிறவன் நான்‌. வனங்கள் அழிக்கப்பட்டு, பழங்குடிகள் துரத்தப்படும் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையை புனைவின் வழியே வாசகனிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் பளியர்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இந்த கானகன். இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட அவர்களை காட்டிலிருந்து அகற்றுவதன் பின்னுள்ள நுட்பமான அரசியலை தெளிவாக முன்வைத்திருக்கிறார்.
அதிகாரத்தின் கொடுங்கரங்கள் அந்த மக்களை நோக்கி நீளும் போது பளிச்சியாத்தா வடிவில் அவர்களுக்காக களத்தில் நிற்பவர்களாக கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள், உண்மைக்கு வெகு நெருக்கமாக புனைவு பயணிக்கும் இந்த நிகழ்வை வெளிப்படையாக எழுதியதற்காக அவரை வெகுவாக பாராட்டலாம்.

தங்கப்பன், வாசி என இரு பிரதான கதாபாத்திரங்கள். ஒருவருக்கு வேட்டை என்பது ஈவிரக்கமின்றி கொன்றழிப்பது, இன்னொருவருக்கு அது தேவை சார்ந்த ஒன்றாக மட்டுமே இருக்கிறது‌. இருவரிடையே நிலவும் முரண்பாடும், இவரும் வேட்டையை அணுகும் விதமும் ஆதி பழங்குடி மனம் இயற்கையை எவ்வாறு விளக்கி கொண்டுள்ளது என்பதை புரிய வைக்கிறது.

புலி வேட்டையில் தொடங்கி புலி வேட்டையில் முடியும் இந்த நாவலில் சில இடங்களில் எழுத்து நடையைச் சற்றே செழுமைப்படுத்தி, பளியர்களின் வாழ்வியலைப் பற்றி கூடுதல் தகவல்களை இணைந்திருந்தால், வாசகனும் தன்னை பளிச்சியாத்தாவின் ஒரு குழந்தையாக உணர்ந்திருக்கக் கூடும்.
Profile Image for Kalyanakannan padivasu.
9 reviews
August 28, 2018
கானகன் நல்ல நாவல். படிக்கலாம். ஆனால் எல்லோரும் சொல்லிய அளவிற்கு எனக்கு இது பிடிக்கவில்லை. காடுகளை பற்றிய புரிதலை அதிகம் இது தரவில்லை. உறவு நிலை சிக்கல்கள் உள்ள அளவு காடுகளை பற்றியும் வேட்டைகளின் பாதிப்பு பற்றியம் அதிகம் உணரமுடியவில்லை. பெண் கதாபாத்திரம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் உடலுறவுக்கு பின்னர் உதவுவார்கள் என்கின்ற விதமாக படைக்கப்பட்டுள்ளனர். வாசியின் முதல் மனைவியை தவிர. ஒருவேளை ஓநாய் குலச்சின்னம் படித்துவிட்டு படித்தது கூட காரணமாக இருக்கலாம். உங்கள் நேரம் அனுமதிப்பின் படிக்கவும்.
Profile Image for Meenakshisankar M.
272 reviews10 followers
June 5, 2023
Superbly crafted and well-written. The plot is populated with a set of well-defined characters at the intersection of nature, human and wild animals in the forest, which makes for a fulfilling and enriching reading experience. The novel is filled with several scintillating and poetic scenes, shedding a deeper light into the politics and philosophy behind the events and characters. The ending was beautiful, poignant, satisfying, all at once.
Profile Image for Remy Moses.
35 reviews4 followers
May 14, 2024
எழுத்தாளர் சரவணகுமார் எளிமையான நடையில் விறுவிறுப்பான சொற்தொடர்களால் எழுதுபவர். அவரது கொமோரா போன்று இந்த நாவலும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. காடுகளும் அவற்றை சார்ந்த அரசியலும் இங்கு வெட்டவெளிச்சமாக கூறப்பட்டுள்ளது. இறுதியில் கொஞ்சம் சினிமா நடையில் முடிந்துவிட்டதோ என்று தோன்றியது எனக்கு. கண்டிப்பாக வாசிக்கலாம்.
Profile Image for Aarur Baskar.
34 reviews3 followers
March 19, 2018
எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் எழுதி 2016ல் சாகித்ய அகாடமியின் 'யுவா புரஷ்கார்' விருது பெற்ற கானகனை சமீபத்தில் வாசித்தேன்.



****

வனம் ஒரு பெரும் புதையல். அதில் பல்லாண்டுகளாக புதைந்துகிடக்கும் இயற்கை வளங்கள்,விலங்குகள், அங்கு வாழும் பழங்குடியினர் அவர்களுடைய நம்பிக்கைகள், வாழ்க்கை , வேட்டை என பல விசயங்களைக்

கானகன் பேசுகிறது. குறிப்பாக பளிங்கர் எனும்

பழங்குடியினர் வாழ்க்கை அருமையாக பதிவு செய்யப்படுள்ளது.



உப்பு நாய்கள் மூலமாக அறிமுகமாகியிருந்த சரவணக்குமாரின் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தில், எழுத்தில் இன்னுமொரு படைப்பு. நல்ல வாசிப்பனுபவம் தந்தாலும் உப்புநாய்களின் மொழி முற்றிலும் வேறானது.



இடப்பற்றாக்குறை, வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தனது சொந்தத் தேவைகளுக்காக காடுகளை தொடர்ந்து அழித்து பயன்படுத்துவதுமில்லாமல் விளைநிலமாகவும் ஆக்குகிறான். கூடவே வர்த்தக , ஆடம்பர நோக்கிற்காக செல்வந்தர்கள், அரசியல் புள்ளிகளின் கைகளில் காட்டுச் செல்வங்கள் நீண்டகாலமாக நமக்குத் தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது கதையின் அடிநாதம்.



நாட்டில் நடக்கும் பல ஊழல்களுக்கு ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவம் ஏனோ சாமானியர்களின் கண்களுக்குத் தெரியாமல்

காடுகளில் நடக்கும் சுரண்டல்களுக்குக் கிடைப்பதில்லை. உண்மையில்

சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்தவரை காடுகளுக்கு கிடைத்த முக்கியத்துவம் இன்று இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.



மோக்ஸி வெளியீடாக மூன்றாவது பதிப்பாக ஜூலை 2017ல் வந்திருந்தாலும்

புத்தகத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் கண்களில் தென்படுகிறன.

அடுத்துவரும் பதிப்புகளில் சரிசெய்வார்கள் என நம்புவோம். வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.
Profile Image for Murugaraj.
11 reviews7 followers
February 14, 2023
Good one.

I wanted to take a moment to recommend that the Kaanagan is captivating, the characters are well-developed, and the writing is beautiful. The author has done an excellent job of creating a world that draws you in and keeps you engaged from beginning to end.

Without giving away any spoilers, I can tell you that the novel explores themes of nature, wild life, love, loss, and self-discovery in a way that is both poignant and uplifting.

Happy reading!
Profile Image for Saran Saru.
Author 2 books4 followers
July 13, 2022
‘விருது வாங்கிய புத்தகம் என்பதால் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டியது அவசியமா என்ன! என் ரசனைக்கேற்ப இந்த புத்தகம் இல்லை! வாசிப்பதற்கான அவசியமும் இல்லை.!’ அநேக வாசிப்பாளர்களின் நிலை இந்த எண்ணங்களில் தான். இதனால் நல்ல புத்தகங்களை தவறவிடுபவர்கள் பலர்.
'வாசிப்பு', நம்மை மற்றொரு வாழ்வியலை புரிந்துகொள்ள உதவும். சக உயிர்களின் உணர்வை உள்வாங்க கற்றுக் கொடுக்கும். நம் அறியாமையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும். நம் பொறுப்புகளை அதிகரிக்கும். இப்படி பல காரணங்களுடன், நம்மையும் அறியாமல் பல அழிவுகளுக்கு நாம் எவ்வாறு பொறுப்பாகின்றோம் என உணர இந்த வாசிப்பு உதவும். வாசித்தலின் ஊடே காட்டில் நன்கு அலைந்து திரியும் அனுபவமும் பெறுவோம்.
‘தங்கப்பன்’ - ஆகச் சிறந்த வில்லன்… எந்த நிலையிலும் வாசிப்பவர்கள் மீது எழுத்தாளர் கருணை காட்ட தயாராகயில்லை என உணர முடிந்த ரத்த வெறி கொண்ட ராட்சசனாக படைக்கப் பட்டிருக்கின்றான்.
‘வாசிமலையான்’ - தடுமாறும் சிறுவனாக அறிமுகமாகி முழு மனிதனாக, பளிச்சியம்மனின் அருள் பெற்ற காவலனாக, விலங்குகளுடன் உறவாடும் கானகனாக மாறுகின்றான்.
இவர்களை மையப்படுத்தி சொல்லப்படும் கதை. ஒரு குட்டியின் பழிவாங்கல், 4 கால நிலை காட்டு வாழ்க்கை என அனைத்தையும் நம் மனக்கண்ணில் பார்க்க வைத்த எழுத்து. ஒவ்வொரு விலங்கும் வேட்டையாடப் படும் பொழுதும், வேட்டையாடுபவனின் நிலையுடன், உயிர் பிரியும் விலங்கின் ஆன்மாவையும் கண்முன்னே காண முடிந்தது.
பத்து மணி நேர காட்டு வாழ்க்கையின் அறிதலில் என் குறிப்புகளில் சில:
”எல்லாக் காட்டுக்கும் ஒரு ஒடம்பு இருக்கு, மனுஷ உடம்புக்கு இருக்கற எல்லா உறுப்பையும் மாதிரி அதுக்கும் உடலுறுப்பு இருக்கு… மனுஷனுக்குனு ஆதாரமா ஒரு உசுரு இருக்கற மாதிரி அதுக்கும் ஒரு உசுரு இருக்கு… காட்டுக்குள்ள காலு வெச்சு நடக்கறப்போ எல்லாம் யாரோ ஒருத்தரோட உடம்புல கால வெச்சு நடக்கறோங்கற கவனத்தோட நட… காடு செலசமயம் தேவத…செலசமயம் மோகினி, செலசமயம் பிசாசு… எப்ப என்னவா இருக்கும்னு தெரியாது…”.
------ ஒரு வேட்டையனுக்கு காட்டின் உணர்வை புரியவைக்க கற்றுக்கொடுக்கும் பாடம். எத்தனை விளக்கம் கொடுத்தாலும் சாமானியருக்கு காடு எப்பொழுதும் பிரமிப்பே.
"வேட்டையாடற மிருகத்துக்கும் உனக்கும் ஒரு அந்நியோன்யமான உறவு இருக்குடா… நீ அதையும் அது உன்னையும் எதிர் கொண்ட பின்னாலதான் எந்த மிருகத்தையும் சுடனும். நல்ல வேட்டக்காரன் ஒளிஞ்சிருந்து சுடக்கூடாது….”
----- வேட்டையாடும் பொழுது தங்கப்பன் தவறிய அந்நியோன்யம் இதுதான் என்றாலும் இறுதியில் அந்த பிணைப்பை அனுபவித்து தன்னை ஒப்புக்கொடுத்ததும் நிறைவே.
"காட்டிலிருப்பவனுக்கு வேட்டை தவிர்க்கமுடியாதது, அத்யாவசியமானதும் கூட."
---- காட்டிலிருப்பவனையும் சூறையாடும் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் நாம்.
"வட்டமென்பது எல்லா இனத்திலுமே ஒரு ஆன்மீகக் குறியீடுதான்."
------- பிரபஞ்ச நியதி.
"எல்லா தத்துவங்களுக்கும் அடிப்படை வாழ்க்கை தானேயன்றி, புத்தகங்கள் அல்ல."
------ புத்தகங்கள் அறியாமையை தவிர்க்க மட்டுமே.
"மோகம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு மாயக்காற்றுதான்."
------- காட்டு வாழ்க்கையில் எந்த உணர்வுகளுக்கும் கட்டுப்பாடு இல்லை.
"எந்த மிருகமும் அத்தனை எளிதில் தன் துயரை மறந்து கடந்து போவதில்லை. மனிதர்களைப் போன்ற அசட்டை இல்லை அதனிடம்."
------ இதைக் காட்டிலும் பல அசட்டுத்தனம் மனிதனிடம் உண்டு.
*******
'நாடு வளர்ச்சி பெற பெற காடு வளம் இழக்கும்', எல்லோரும் உணர்ந்ததே என்றாலும் மனிதன் தன் சொகுசுகளை அதிகரிக்க அதிகரிக்க பிற உயிர்களின் அடிப்படை தேவைகள் தொலைந்து போகின்றன, என்ற பெரும் உண்மை இந்த புத்தகத்திலும் சுட்��ிகாட்டப் படுகின்றது.
நிச்சயம் நம் வளர்ச்சியிலிருந்து நாமே பின் செல்ல முடியாது. ஆனாலும், அழிக்கப்பட்டதிற்கான காரணமும், அழிக்கப்பட்ட பொக்கிஷத்தின் அருமையும் நாம் தெரிந்துகொள்ள இந்த வாசிப்பு நிச்சயம் உதவும்.
25 reviews2 followers
August 17, 2025
புலி வேட்டையில் தொடங்கும் கதையை, புலி வேட்டையாடி முடித்து வைக்கும்....

புலி வேட்டை நடக்கும் பொழுதே நாம் கானகத்தில் பிரவேசிக்க தொடங்கி விடுவோம். திரு. லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் எழுத்துகளை நாம் உணரும் போது, காடும் அதில் வசிக்கும் மரங்கள், செடிகள், மிருகங்கள் (குறிப்பாக புலி, யானை, கருமந்தி, மான்) அங்கு வாழும் பழங்குடி மக்களான பளிச்சி மக்கள், வேட்டைக்காரன், நம் மன கண்ணோட்டத்தில் வாழ ஆரம்பித்துவிடுவர்...

தங்கப்பன் ஒரு வேட்டைக்காரன், கருமாண்டி, காட்டின் வழித்தடங்களை நன்கு அறிந்த ஒருவன், விழுங்குகளை வேட்டையாடுவதில் பல யுக்திகளை அறிந்தவன், இவனது மூன்றாவது மனைவி பளிச்சி குடியை சேர்ந்தவள், தனது கணவன் சடையணை விட்டுவிட்டு தன் மகன் வாசியுடன் தங்கப்பனிடம் வந்து சேர்கிறாள்..

இவர்களை சுற்றியும், இந்த பளிச்சி குடியை சுற்றியும் அமையும் கதை, முன்னால் முதல்வர் திரு.M.G.R அவர்கள் வாழ்ந்த காலத்தை சார்ந்தது என்று ஆசிரியர் இடையில் பதிவு செய்கிறார்.

காடு மற்றும் அதில் வாழும் மரங்கள்,மிருகங்கள், பூர்வகுடிகள் இவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கதையை கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

காட்டுக்குள் சமநிலத்தை சார்ந்த மனிதர்கள் ஊடுருவும் போதும், சில செல்வந்தர்கள் காட்டுக்குள் வேட்டையாட வரும் போதும், அந்த காட்டின் சொந்தங்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று உணர முடியும். மரங்கள், மிருகங்கள் எவ்வகை மனவேதனைக்கு ஆளாகின்றன என்று நம் மனம் நமக்கு உணர செய்யும்.

காட்டை காப்பாற்ற யானைகளின் பங்களிப்பு, வாசி வேட்டைக்கரணை அழிக்க செய்யும் சூழ்ச்சி, பளிச்சி குடியை அதிகார துஷ்பிரியகோம் செய்வோர்களிடம் இருந்து காப்பாற்ற வரும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் என்று அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப கதை நகர்கிறது. முடிவில் புலி எப்படி கதையை முடித்து வைக்கிறது என்பது புனைவு.

* (கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் பல பழங்குடி மக்களை அதிகாரவர்க்கம் மற்றும் கார்பரேட்களிடம் இருந்தும் இது நாள் வரை காப்பாற்றி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை)

இந்த கதையின் கதாபாத்திரங்களை வடிவமைக்கையில் சிறு சிறு முரண்கள் இருந்தாலும், இந்த கதை நமக்கு எதை உணர்த்த வருகின்றது என்பதே முக்கியம்.

***காடு, யானை, புலி லாம் இல்லனா, நம்பலும் சீக்ரம் மரஞ்சிருவோம்*** அதான் நிஜம்...
20 reviews9 followers
September 10, 2014
This is definitely not a review because right now Im so overwhelmed by the book. This book set in similar milieu as Wolf Totem succeeds majestically in areas where the later failed a bit. It is tightly paced to an extent I felt even a 100 pages more would have been OK. Easily one of my favourite books of all time and probably the most important book released in 2014. I hope this classic gets translated and wins several awards , which it thoroughly deserves.
Profile Image for Sriram Mangaleswaran.
175 reviews3 followers
February 19, 2020
A good novel and a different kind. This guys all previous books doesnt have any destination about story and it will revolve around the characters as the page. But here we had a nice revenge story and the way the story about the forest, the tribe and everything was fantastic.

Im not sure I will not read a novel like this again.
Profile Image for Manigandan B.
11 reviews2 followers
April 24, 2020
படித்து முடித்துவிட்டு ஒரு வாரம் கழித்து வேறொரு புத்தகம் படிக்க தொடங்கிய பின்னும் கானகன் நினைவுகளே மனதில் ஓடுகின்றது...
250 பக்கங்களில் ஒரு பெரு வாழ்வு வாழ்ந்தது போல ஒரு நிறைவு...
சுயநலத்திற்கு இயற்கையை அழித்தால் இயற்கையே வஞ்சம் தீர்க்கும்.
புலி வேட்டையில் தொடங்கி புலி வேட்டையில் முடியும் ஒரு நல்ல புத்தகம்
Profile Image for Haran Prasanna.
28 reviews11 followers
June 19, 2016
கம்யூனிஸ விதந்தோதல் மட்டுமே திருஷ்டி. மற்றபடி நல்ல நாவலே. முக்கியமான நாவல்.
October 31, 2021
காடு அதை சார்ந்து வாழும் மக்கள் மற்றும் வன விலங்குகள் மனிதன் எனும் பேராசை பிடித்த மிருகத்தால் எவ்வாறு வஞ்சிக்க பட்டு கொண்டிருக்கின்றன என்பதை சொல்ல முயன்றுள்ளார் ஆசிரியர்..
4 reviews
January 14, 2022
Have problem with the portrayal of women in this novel as unfaithful, sex-hungry.. But otherwise an engaging novel.
Profile Image for Gautami Raghu.
229 reviews22 followers
February 4, 2023
"இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்" - வேள் பாரி. அதற்குப் பறை சாற்றுகிறான் கானகன்!

காடும் இயற்கையும் வெகுவாகக் கொண்ட இப்புதினம் வேள் பாரியையே நினைவு படுத்துகிறது. ஆனால் பறம்பு போல் அல்லாமல், காட்டின் மரத்தையோ, வளத்தையோ, மிருகங்களையோ காக்க முடியாமல் அவை வெட்டப்படுவதையும், கொல்லப் படுவதையும் பார்த்துப் பரிதவிக்கும் பளியர்கள் மனதை கனகச் செய்கின்றனர். இதுவே இன்றைய உண்மை என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறார் ஆசிரியர்.

யானை செல்லும் வழியையும், அவை நீர் அருந்தும் சுனையையும் ஆக்கிரமித்துக்கொண்டு, ஏதோ அவை மனிதர்களுக்குத் துன்பம் தருவது போல் வெடி வைத்து விரட்டுவது வேதனையாக இருக்கிறது. (This reminds me of a video where two people are clicking pictures on a zebra crossing. They get irritated when somebody crosses the road as he/she is photo-bombing their picture. One party is there for the purpose (elephants) and the other party is there for selfish reasons (people). But the one with the purpose (elephants) is considered to be the "nuisance". Height of ridiculousness right? That's how we humans are. It's shameful and shocking.)
தங்கப்பங்களும், வேட்டைகளும் செய்தி வழியே அறிவேன். ஆனால் வேட்டையின் போது யானை சரிந்து விழுந்த காட்சி இதுவரை கண்டிராத வலியை உணர்த்தியது.

வேட்டையோடு பளியர்களின் வாழ்வியலை விவரிக்கும் கானகன் இப்பிரச்சனையின் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த பயணம் நோக்கி வாசகனை கண்டிப்பாக நகர்த்துகிறான்.
யானை மிதித்த தாக்கம் இவ்வாசிப்பில்! The climax is poetic justice!
Profile Image for Varun19.
23 reviews8 followers
October 19, 2024
இரண்டு நாட்களுக்கு முன்பு எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஏதேட்சயாக வாசிக்கத் துவங்கிய நாவலிது. நாவலின் கதைக்களம் காடு, காட்டில் வாழும் பழங்குடியின மக்கள், இயற்கையுடன் இயைந்த அவர்களின் வாழ்வியல், அங்குள்ள விலங்கினங்களைப் பற்றியது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட சுவாரசியம் குன்றாமல், தொடக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்கிறது.  நமக்கு அதிகம் புலப்படாத காட்டின் உட்பகுதிக்கு நம்மை இழுத்துச் சென்றது போன்ற உணர்வையும், மிருக வேட்டை, குடிகளின் தெய்வ வழிபாடு என்று காட்டைப் பற்றிய பல புரிதல்களையும் அளிக்கிறது.

இயற்கைவளங்களைச் சூறையாடி, அதன்மூலம் பொருளீட்ட முனையும் முதளாளிகளும், தொண்டு நிறுவனங்களும் அந்நில மக்களைப் பயன்படுத்தி
அவர்களை வைத்தே அழித்திருக்க முடியும் என்பது நிதர்சனம். அதற்குப் பின் இருக்கும் அரசியலையும் வாசகனுக்குப் புரிய வைப்பதால் இதை வெறும் புனைநாவலாக மட்டும் கொளலாகாது.

பேராசையின் பிடியிலிருக்கும் மனிதன் மிருகமாக மாறும் போது, அந்த மிருகங்களை விடவும் அவன் கொடியவனாகவே மாறிவிடுகிறான். கதாபாத்திரங்களின் அமைப்பும், மொழிநடையும் தொய்வில்லாமல் அமைந்துள்ளது. இதுபோன்ற கதைகளை வாசிக்கும் போது நம்மையறியாமல் நாமும் அதனுள்ளே பயணிக்கத் தொடங்கிவிடுவது இயல்பே.

நவீன தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத பழங்குடியின மக்களின் வாழ்வியல், இயற்கை வளங்களின் அழிப்பு,  அவை சார்ந்த அரசியலை கதைகளமாக்கி,  சுவாரசியமான நடையில் படைத்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் பல.

எனது பார்வையில் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவலாகத் தோன்றுகிறது.
Profile Image for Abirami Sridhar .
64 reviews4 followers
January 21, 2024
ஒரு ஆகச் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அகமலைக் காடுகளில் வாழும் பளியர் இனத்தவரைச் சுற்றி புனையப்பட்டுள்ள இக்கதை, நிஜத்தைக் கொண்டே அமைந்துள்ளது.

புலிவேட்டையில் துவங்கி புலி வேட்டையில் முடியும் இந்தப் புத்தகத்தில், தங்கப்பன் வாசிமலையான் என்ற இரு முக்கிய கதாபாத்திரங்கள். தங்கப்பன் நெஞ்சில் ஈரம் இல்லாத ரத்த வெறி கொண்ட வேட்டைக்காரன். வாசியோ காட்டையும் அதன் ஆன்மாவையும் உணர்ந்து காட்டை பாதுகாக்கும் கருமாண்டி, கானகன். இவ்விருவருக்குள்ளும் நடக்கும் போராட்டமும் பழிவாங்கலும் கதையின் மையம்.

காட்டிற்கென்று எல்லைகள் ஏதும் கிடையாது. காட்டில் வாழும் மக்களுக்கும் எந்த வித எல்லையும் கிடையாது. அன்பும், வளமும், காதலும், காமமும், வெறியும், வேட்டையும் காட்டின் அம்சங்கள். அதுவே காட்டில் வாழும் மக்களுக்கும்.

கட்டற்ற காட்டை கட்டியாள நினைக்கும், காட்டைப் பற்றியே அறியாத மனிதரின் ஆடுகளமாக மாறி போகும் காடும், அதை தடுக்க காட்டின் பிள்ளைகளான மனிதர்களும் விலங்குகளும் அம்மிருகங்களுக்கும்‌ அரசாங்கத்திற்கும் எதிராக தொடுக்கும் போராட்டமும் சொல்லப்பட்டுள்ள விதம் அற்புதம்.

வனங்கள் சூறையாடப்பட்டு, பழங்குடியினர் துரத்தப்பட்டும், தண்டிக்கப்பட்டும், அழிக்கப்படும் அநீதியை மிக நேர்த்தியாகப் புனைந்துள்ளார் லக்ஷ்மி சரவணகுமார்.

புலியையும் யானையையும் வேட்டையாடும் காட்சிகள் பதைபதைப்பையும் கலக்கத்தையும் தரும். காடு மனிதனுக்கு அடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் துவக்கப்படும் செயல்கள் அச்சத்தைத் தரும்.
கடைசி காட்சி மட்டும் சினிமாத் தனமாக அல்லாமல் எழுதப்பட்டிருக்கலாம்.

அனைவரும் படிக்க வேண்டிய ஆகச் சிறந்த புத்தகம்!
78 reviews3 followers
March 2, 2023
காடே சாமி(கடவுள்), விலங்குகள் காட்டின் பிள்ளைகள், மரங்கள் இவ்விலங்குகளையும் மனிதர்களையும் இணைக்கும் ஓர் பாலம். காட்டை மனிதர்கள் பாதுகாக்கிரார்கள் மனிதர்களை காடு பாதுகாக்கின்றன. அக்காட்டை சுற்றி திரியும் பேராசை பிடித்த மனிதர்கள் காட்டை தன் வசம் அடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன். காட்டை அழித்து அதன் வனங்களை அபகரித்து அந்த காட்டில் பிள்ளைகளை வதைக்கும் பட்சத்தில் - அக்காடே அந்த அந்நியர்களுக்கு தக்க பதிலடி தருகிறது.

இன்நாவலில் நாம் மனிதர்களுக்கு வருத்தப்படுவதை விட மிருகங்களுக்காக தான் வருத்தப்படுவோம். குறிப்பாக வாசி வளர்த்த மானுக்காக, வாசி போராடித் தோற்ற யானைக்காக, புலிக்காக, அந்த காட்டிற்காகவும் தான். புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இக்கதை. இங்கு புலி கொண்டது வன்மம் அல்ல நீதிபுணர்ச்சி. நான் இன்நாவலின் எழுத்தாளரான லட்சுமியை பற்றி அறிந்த சில தினங்களிலேயே இவருடைய புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது, காடு சம்பந்தமாக நாவலையே தொடங்கலாம் என இந்நாவலை தேர்வு செய்தேன். காட்டிலே வாழ்ந்தேன் படுத்தேன் உறங்கினேன் அக்காட்டின் குடும்பமானேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
March 27, 2021
கானகன்

தமிழில் நான் வாசித்த முதல் காடு சார்ந்த நாவல்.(வேல்பாரியை தவிர்த்து)....காடும் அங்கு வாழும் பலியர்களின் வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும் காட்டின் மீதான பயம் கலந்த மரியாதையென நீள்கிறது நாவல். பாட்டா என்ற சொல்லும் பளிச்சியென்ற சொல்லும் வருமிடம் அனைத்தும் ஒரு பூரிப்பையும் சிலிர்ப்பையும் எனக்கு தருகிறது.... முடிவில் நியாயம் இருந்தாலும் எனக்கு ஏற்புடையதாக இல்லை.மொத்தத்தில் ஒரு வருட காலம் காட்டில் வாழ்ந்த ஒரு அனுபவம்.
Profile Image for Balu.
20 reviews11 followers
January 19, 2021
காட்டின் ஒரு விலங்கோ தாவரமோ அழிந்தாலும் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுமாயின், மாட்டை வேட்டையாடும் புலியைக் கொள்வது தர்மம்தானா என்ற கேள்வி எழுந்தது. ஆனால்

மாட்டின் எண்ணிக்கையும் புலியின் எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது கதையில், புலியை வேட்டையாடிய தங்கப்பன் கடைசியில் புலியால் வேட்டையாடப் படுகிறான்

மனிதனின் சாவைவிட மகத்தானதும் கொண்டாடப்பட வேண்டியதும் வேறெதுவுமில்லை
3 reviews
September 7, 2025
இது மிகவும் அற்புதமான நாவல் . நேரடியாக காட்டில் பயணம் செய்த மரியா அனுபவம் கிடைத்தது. எதார்த்தமான வகையிலும் உண்மைக்கும் மிக நேர்த்தியாக எழுதிய நாவல். காடு எப்படி இருக்கும், அதனுள் வாழும் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் , அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. கதையை பற்றி எதுவும் தெரியாமல் படிப்பது சுவாரசியமாக இருக்கும் .
3 reviews
April 10, 2020
Wonderful Stoey

When I read this story, I felt I am traveling in forest. Character Thangappan and Vaasi are traveling in forest, giving more insights about animal behavior. Kanagan, fantastic title.
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
September 25, 2022
லக்ஷ்மி சரவணக்குமார் இன் சிறந்த படைப்பு கானகன் தான். முதல் காட்சியும் இறுதி காட்சியும் சராசரியாக ஒரே நிகழ்வு தான் ஆனால் இரண்டுக்குமான உளவியல் வேறு. அதை விவர��ப்பது தான் இந்த நாவல், மிக அற்புதமாக அதை செய்திருப்பார்.
Profile Image for Dinesh Selvam.
Author 3 books2 followers
January 10, 2023
புலி வேட்டையில் தொடங்கும் கதை, புலி வேட்டையில் முடிகிறது. நாவல் நெடுக நிரம்பிக் கிடக்கும் மலையிலும், காட்டிலும் அதற்கே உரிய இயற்கையின் அமானுஷ்யம் ஊடாடுகிறது. பல தருணங்களில் நான் இந்த நாவலை அமானுஷ்ய உணர்வோடே அணுக நேர்ந்தது. மனிதர்களின் பேராசையும், வெற்றுச் சீற்றமும் ஒரு காட்டைத் துண்டுகளாக்க முயல, காடே திரண்டு அதிலிருந்து மீள மூர்க்கம் கொண்டு முயல்கிறது.
Displaying 1 - 30 of 50 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.