இயற்கை தன் இல்லமான இந்த உலகத்தில் தினம் சமைக்கும் கவிதைகளில் சில இங்கு தமிழ் ஓசைகளில் சிலையாகியிருக்கிறது. மறந்துபோன நிலாச்சோறு நினைவுகளையும், பள்ளிக்கூட குறும்புகளையும், பாட்டியிடம் கதை கேட்ட ஆர்வத்தையும் ஆசுவாசமாய் அசைபோட தமிழ் சாமரம் வீசுகின்றது. மண்ணை பிரிந்த சோகமும், தனிமை காட்டும் ஞானமும், சின்ன சின்ன ஆசையும் சிங்காரம் கட்டி தமிழ்ப்பாட்டியோடு செல்லம் கொஞ்சுகிறது. அதிகாலை அந்திமாலை வானம் தரும் வரங்களும் , பகலிரவு அயராது இயற்கை வகுத்த நியதிகளும், மேக வாசல் தாண்டி வாசல் வந்த மழைகளும், பூமியென்று பூத்து நின்ற புனிதமும் தமிழ் பூசிக்கொண்டு தாளம் போட்டு பாடுகின்றன . அன்னையின் அன்பும், தாலாட்டின் கனிவும், காதலின் அழகும், குழந்தையின் குழ