"ஹாய் சரண்" என்றபடி உரிமையாய் தோள் உரச அருகில் அமர்ந்த குமரனை "இதான் நீ நேரத்துல வர்ற லட்சணமா?" என முறைத்தாள் சரண்யா "அது..." என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவனை பேச விடாமல் "அலைபாயுதேல கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஷாலினி வெயிட் பண்ணுவா, நான் இப்பவே உனக்கு வெயிட் பண்ண வேண்டியிருக்கு" என்றாள் கோபமாய் "அப்போ என்னை மாதவன்னு சொல்ற" "இல்ல, என்னை ஷாலினினு சொல்றேன்" "அதை நீயே சொனனா எப்படி?" என வம்பிழுத்தான் "ஓஹோ, அப்போ எவ ஷாலினி மாதிரி இருக்காளோ அவளையே போய் லவ் பண்ணு" என எழப்போனவளை கை பற்றி அமர்த்தியவன் "எனக்கு என் சரண் தான் வேணும், ஷாலினி வேண்டாம்" என குறும்பாய் கண்சிமிட்டி சிரிக்கவும் அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க மனமின்றி "சரியான 420" என சிரித்தாள்... To read more, please download from Amazon.in. You can read for free if you have Kindle Unlimited Subscription
- “அபூர்வ ராகம்” என்ற சஹானாவின் நாவல், பிரபல வார இதழான கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகை வென்றது. அதோடு, செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட கண்மணி இதழில் அந்த நாவல் வெளியானது
- 2018 செப்டம்பரில், Newstn.in என்ற இணைய இதழில், சஹானாவின் ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை வெளியானது
- 2016ம் ஆண்டு மங்கையர் மலர் நடத்திய "ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி"யில், சஹானாவின் "இரண்டாவது அத்தியாயம்" என்ற சிறுகதை பரிசு பெற்றது
- அதே ஆண்டு "தமிழ் வலைப்பதிவர் குழுமம்" நடத்திய சிறுகதை போட்டியில் சஹானாவின் சிறுகதை பரிசு பெற்றது
- 2013ம் வருடம், மார்ச் மாதம் தினகரன் நாளிதழின் இணைப்பு இதழான "வசந்தம்" இதழில், "இணையத்தில் கலக்கிய இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில், சஹானாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது
- 2011ல் "நேசம் பவுண்டேசன்” நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் சஹானாவின் சிறுகதை முதல் பரிசு பெற்றது
- அது மட்டுமின்றி, சஹானாவின் சிறுகதைகள் பல "வல்லமை", "அதீதம்", "திண்ணை" போன்ற இணைய பத்திரிக்கைகளின் புத்தாண்டு / பொங்கல் / தீபாவளி சிறப்பிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
- யூத் விகடன் இணைய இதழில், சஹானாவின் கவிதைகள் சில வெளியாகியுள்ளன
- இரண்டரை லட்சத்திற்கு மேல் ஹிட்கள் பெற்றுள்ள சஹானாவின் “அப்பாவி தங்கமணி” என்ற பெயர் கொண்ட எனது வலைப்பூவில் (BLOG - not available to public view now), சஹானா எழுதிய தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை பதிவுகள், கட்டுரைகள் என 200க்கும் மேற்பட்ட பதிவுகள், பலரால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு, சஹானாவிற்கென ஒரு வாசகர் வட்டத்தையும், எழுத்துலக நட்புகளையும் பெற்றுத் தந்தது