இரண்டு வருடம் காத்திருந்தவனுக்கு, அந்த இரண்டு நொடி மிக நீண்டதாய் தெரிந்தது
அழைப்பு எடுக்கப்பட்டு, "ஹலோ..." என காயத்ரியின் குரல் கேட்க, வெகுநாட்கள் கழித்து அவள் குரல் கேட்டதும்,கண்ணில் நீர் கோர்த்தது கார்த்திக்கு
எதிர்முனையில் பதில் இல்லாததால், "ஹலோயாருங்க? ஹலோ" எனமீண்டும் காயத்ரி கேட்க
"காயத்ரி, நான் கார்த்தி பேசறேன்"என்றான் குரலை இயல்பாக்க முயன்றபடி
கார்த்தியின் குரல் கேட்டதும், மறுமுனை மௌனமானது
"காயத்ரி, லைன்ல இருக்கியா? ஹலோ…"அழைப்பைத் துண்டித்து விட்டாளோ என கார்த்தி கேட்க
"ம்...."என்றாள் முயன்று தருவித்த குரலில்
நீண்ட நாள் கழித்து பேசுவதால், என்ன பேசுவதென தெரியாமல் ஒருகணம் கார்த்தியும் மௌனமானான்
"மாமிக்கு உடம்புக்கு சரியில்லைனு அம்மா சொன்னா, அதான் பேசலானு...." என்றான் பட்டும் படாமல், ஆனால் மனம்முழுக்க அவளிடம் பேசவேண்டும் என்ற ஆசையுடன்
"அப்போ என்னோட பேசணும்னு கூப்பிடலையா?"என மனதில் தோன்ற, காயத்ரிக்கு கண்ணில் நீர் கரித்தது
தான் தானே அவனை பேச வேண்டாம், பார்க்க வேண்டாம் என கூறினோம் என்பது கூட மறந்தவளாய், அவன் மீது கோபம் கொண்டாள்
மனம் நினைத்ததை வாய் விட்டு கேட்க இயலவில்லை அவளால், "ஒரு நிமிஷம்...அம்மாட்டதரேன்..."
"காயத்ரி...ஒரு நிமிஷம்... உன்னிட்ட...." என கார்த்தி சுதாரிப்பதற்குள்
"ஹலோ கார்த்தி, நன்னா இருக்கியாப்பா?"என கோகிலாவின் குரல் கேட்டது
கோகிலாவிடம் உடல் நலம் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு,மீண்டும் காயத்ரியை பேசச் சொல்லி கேட்டான் கார்த்தி
"அவ ஏதோ சாமான் வாங்கணும்னு சொல்லிண்டுருந்தா, கடைக்கு போய்ட்டா போலிருக்கு கார்த்தி" எனவும், கார்த்தியின் மனம் சோர்வுற்றது
தன்னிடம் பேசுவதை தவிர்க்கவே வெளியே சென்று விட்டாள் என்பது புரிய, "இன்னுமா என்னிடம் கோபம்?" என மனம் வருந்தியது
காயத்ரிக்கோ, மனம் நிலை கொள்ளவில்லை.“அவுட் ஆப் சைட் அவுட் ஆப் மைண்ட்”என்று நினைத்ததெல்லாம் சுக்கு நூறாகியது
இத்தனை நாட்களுக்கு பின் கேட்ட அவனுடைய குரல், தன்னை இத்தனை பாதிக்குமென அவள் நினைக்கவில்லை
மனதில்கள்ளம் புகுந்ததும் மற்றதெல்லாம் துச்சமடி உன்கண்ணில் காதல் கண்டதும் உலகம் மொத்தம் உறைந்ததடி… to read more, you can get it from Amazon.in. You can read it for free, if you have kindle unlimited subscription
- “அபூர்வ ராகம்” என்ற சஹானாவின் நாவல், பிரபல வார இதழான கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகை வென்றது. அதோடு, செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட கண்மணி இதழில் அந்த நாவல் வெளியானது
- 2018 செப்டம்பரில், Newstn.in என்ற இணைய இதழில், சஹானாவின் ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை வெளியானது
- 2016ம் ஆண்டு மங்கையர் மலர் நடத்திய "ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி"யில், சஹானாவின் "இரண்டாவது அத்தியாயம்" என்ற சிறுகதை பரிசு பெற்றது
- அதே ஆண்டு "தமிழ் வலைப்பதிவர் குழுமம்" நடத்திய சிறுகதை போட்டியில் சஹானாவின் சிறுகதை பரிசு பெற்றது
- 2013ம் வருடம், மார்ச் மாதம் தினகரன் நாளிதழின் இணைப்பு இதழான "வசந்தம்" இதழில், "இணையத்தில் கலக்கிய இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில், சஹானாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது
- 2011ல் "நேசம் பவுண்டேசன்” நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் சஹானாவின் சிறுகதை முதல் பரிசு பெற்றது
- அது மட்டுமின்றி, சஹானாவின் சிறுகதைகள் பல "வல்லமை", "அதீதம்", "திண்ணை" போன்ற இணைய பத்திரிக்கைகளின் புத்தாண்டு / பொங்கல் / தீபாவளி சிறப்பிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
- யூத் விகடன் இணைய இதழில், சஹானாவின் கவிதைகள் சில வெளியாகியுள்ளன
- இரண்டரை லட்சத்திற்கு மேல் ஹிட்கள் பெற்றுள்ள சஹானாவின் “அப்பாவி தங்கமணி” என்ற பெயர் கொண்ட எனது வலைப்பூவில் (BLOG - not available to public view now), சஹானா எழுதிய தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை பதிவுகள், கட்டுரைகள் என 200க்கும் மேற்பட்ட பதிவுகள், பலரால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு, சஹானாவிற்கென ஒரு வாசகர் வட்டத்தையும், எழுத்துலக நட்புகளையும் பெற்றுத் தந்தது