வ.ஐ.ச. ஜெயபாலன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். 1970களில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ (1983) இவரது சமூகவியல் ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ (2011) திரைப்படத்தில் முதன்முதலில் நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு திறனுக்காக இந்திய ஒன்றிய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டது. 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள, ‘செக்குமாடு’ குறுநாவல், 1995ஆம் ஆண்டு நோர்வீஜிய எழுத்தாளர் சங்க விருது பெற்றது. பிரெஞ்சு, நோர்வீஜியன், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
V. I. S. Jayapalan is a Sri Lankan writer, political commentator and actor who has appeared in Tamil language films. He began writing in the 1970s while studying at the University of Jaffna and published his first anthology in 1986. He studied a degree in Economics during his time at the university, while also leading the student union. Since then he has published at least 12 anthologies of poetry and short fiction. In 1995, he was awarded as the best immigrant writer by the Norwegian Writers’ Association, with poetry being translated into English, Norwegian as well as in to Sinhala. In 2009, some of his poems were translated into English and published as a book in Canada - named 'Wilting Laughter’ - along with selected poems of R. Cheran and Puthuvai Raththinathurai.
பேட்டைக்காரனாக நமக்கு அறிமுகமுள்ள கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களது ஒரு குறுநாவலும் 3 சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. ஈழ இலக்கியங்கள் பொதுவாக புனையப்படும் அரசியல் ஆயுத களமல்லாது அவர்கள் குடும்பம், அந்த தமிழர்களுக்குள் இருந்த ஜாதி மத வர்க்க பேதங்கள், யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கும் வன்னியில் வசிப்பவர்களுக்கு இடையே இருந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை ஒட்டி பயணிக்கிறது இச்சிறுகதைகள்.
செக்குமாடு குறுநாவல் குடும்பத்தை பிரிந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்த தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு அத்தியாயமாக விரிகிறது. இப்புத்தகத்தின் சிறந்த புனைவாக இது இருக்கிறது.