1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது , லெப். ஜெர்விஸ் , நீலகிரி பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்கிறார். ஆங்கிலேயர்கள் நீலகிரியை கண்டறிந்து பதினைந்து வருடமே ஆகியிருந்தது. நீலகிரிக்கு செல்லும் வழி , தங்கும் இடங்கள் , அங்கு பார்க்க வேண்டியது , வேட்டையாட வேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். இன்றைய நமது 'ஊட்டி' சுற்றுலாவிற்கும் , இங்கு ஜெர்விஸ் விவரிக்கும் நீலகிரிக்கும் சிறிதும் சம்பந்தமில்லாதது , எந்த அளவிற்கு நாம் இந்த இடத்தை மாற்றிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் உணர வைக்கிறது. இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாக , நாம் காக்க மறந்துவிட்ட நமது நாட்டின் வளங்களின் எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜெர்விஸ் ஒரு ஓவியர். எனவே , புத்தகத்தில் அவர் வரைந்த பல படங்களும் , அவைக் குறிக்கும் இடங்களும் பற்றி உற்சாகமாக பேசுகிறார். இறுதியில் சிறு குறிப்பாக , வேறு சில இடங்களை அவர் வரைந்த படங்களும் , குறிப்புகளும் இருக்கின்றன.
அத்தியாயம் 1 - சிவசமுத்திரம் அத்தியாயம் 2 - நீலகிரி அத்தியாயம் 3 - யானை வேட்டை அத்தியாயம் 4 - புனித ஸ்டீபன் தேவாலயம் முடிவுரை பின்னிணைப்பு 1 - பூந்தமல்லி பின்னிணைப்பு 2 - வேலூர் பின்னிணைப்பு 3 - லால்பேட்டை பின்னிணைப்பு 4 - பெங்களூர் பின்னிணைப்பு 5 - கிளோஸ்பேட்
1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது லெப். ஜெர்விஸ் எனும் ஆங்கிலேயர், சிவசமுத்திரம் நீர்வழித்தடங்கள், காவிரி தமிழகத்தை வளப்படுத்தி கடலில் கலப்பது, தற்போதய நீலகிரியை உள்ளடக்கிய ஊட்டி, தொட்டபெட்டா, கோத்தகிரி, குன்னூர், கேட்டி, கூடலூர், ஊட்டியின் அழகு, தேவாலயம் அமைத்தது போன்ற தனது பல நினைவுகளை பதிவு செய்கிறார்.
ஆங்கிலேயர்கள் நீலகிரியை கண்டறிந்து பதினைந்து வருடமே ஆகியிருந்தது. நீலகிரிக்கு செல்லும் வழி , தங்கும் இடங்கள் , அங்கு பார்க்க வேண்டியது , வேட்டையாட வேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் தொட்டுச் செல்கிறார்.
எந்த ஒரு தொழில்நுட்ப வசதியும் அற்ற, 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், நீலகிரி மலைக்காடுகளில், அலைந்து, அதன் அழகையும் அதில் உள்ள ஆபத்துகளையும் வர்ணித்து, தனது தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார், திரு ஜெர்விஸ். குறிப்பாக, "தனது தாயகமான இங்கிலாந்தையே நாம் மறந்துவிடலாம், இந்த ஊட்டிக்கு வந்துவிட்டால்" என குறிப்பிட்டுருக்கிறார். ஒரு இடத்தில, 'நீலகிரியை, இந்திய சொர்க்கம் " என்றே சிலாகிக்கிறார்.
மேலும், நீலகிரியில் இருக்கும் நிலங்களை வரையறைக்கு உட்படுத்தி குத்தகை, வரி வசூல் செய்யும் திட்டத்தையும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இன்றைய நமது 'ஊட்டி' சுற்றுலாவிற்கும் , இங்கு ஜெர்விஸ் விவரிக்கும் நீலகிரிக்கும் சிறிதும் சம்பந்தமில்லாதது , எந்த அளவிற்கு நாம் இந்த இடத்தை மாற்றிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் உணர வைக்கிறது. இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாக , நாம் காக்க மறந்துவிட்ட நமது நாட்டின் வளங்களின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
அத்தியாயம் 1 - சிவசமுத்திரம் அத்தியாயம் 2 - நீலகிரி அத்தியாயம் 3 - யானை வேட்டை அத்தியாயம் 4 - புனித ஸ்டீபன் தேவாலயம் முடிவுரை பின்னிணைப்பு 1 - பூந்தமல்லி பின்னிணைப்பு 2 - வேலூர் பின்னிணைப்பு 3 - லால்பேட்டை பின்னிணைப்பு 4 - பெங்களூர் பின்னிணைப்பு 5 - கிளோஸ்பேட்
ஜெர்விஸ் ஒரு ஓவியர். எனவே , புத்தகத்தில் அவர் வரைந்த பல படங்களும் , அவைக் குறிக்கும் இடங்களும் பற்றி உற்சாகமாக பேசுகிறார். இறுதியில் சிறு குறிப்பாக , வேறு சில இடங்களை அவர் வரைந்த படங்களும் , குறிப்புகளும் இருக்கின்றன.
Interesting book. But it's written by British man. So whenever he mentions about indian people it's a bit awkward for us especially lines about tippu sultan and hyder ali