தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்
மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.
மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார்.பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.
விருதுகள்: 1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. 1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.
"களப்பிரர்களின் ஆட்சியில் தமிழகம் " - மயிலை சீனி. வேங்கடசாமி ********************************************************** கிட்டதட்ட கிபி 250-600ம் ஆண்டு வரை ஆண்ட களப்பிரர்கள்., களப்பரர்கள் , களப்ராக்கள் என்றைழைக்கப்பட்ட, கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட இனம், மெல்ல வளர்ந்து தென்னகத்தை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர்.
களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் சென்ற நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அவர்களை பற்றிய பெரும் செப்பேடுகளோ, நாணயங்களோ, வரலாற்று சிறப்புமிக்க சாதனை சரித்திர நிகழ்வுகளோ இல்லாததால், களப்பிரர்கள் என்ற ஒரு இனம் தமிழகத்தை ஆண்டது மிகத் தாமதமாகவே அறியக்கிடைத்திருக்கிறது .
களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்துகொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம்.
களப்பிரர்கள், மூவேந்தர்களுக்கு முன்பே பல்லவ, சளுக்கியர்களுக்கு இணையான, வலுவான நிலையில் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அதாவது, சேர,சோழ,பாண்டியர்கள் குறுநில மன்னர்களாக, களப்பிரர்கள் பெருங்குடையின் கீழ், அவர்களின் ஆட்சிக்குட்பட்டவர்களாக! அதேவேளையில் தமிழகத்தின் தொண்டைமண்டலம்(எனும் வடகோடி மாவட்டங்கள்) மட்டும் பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், களப்பிரர்களின் ஆளுமை இம்மண்டலத்தில் நடைபெறவில்லை.
இலங்கை களப்பிரர்கள் காலத்திலும் போர்களோடுதான் ஊடாடிகொண்டருக்கிறது. இலங்கை அரசர்களுக்குள்ளும் பாண்டிய சிற்றரசுகளின் படையெடுப்புகளாலும் நிம்மதியற்ற நிலையிலயே இலங்கை இருந்து வந்துள்ளதை அறியமுடிகிறது.
இப்படி பற்பல வரலாற்று தகவல்கள், சான்றுகள், செப்பேடுகள் கொண்டும், சங்க கால இலக்கியங்களான அகநானூறு , குறுந்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நற்றிணை , நாலாயிர திவ்வியப் பிரபந்தம் , பதிற்றுப்பத்து, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், பட்டினப்பாலை, பரிபாடல், பன்னிரு திருமுறைகள், பாண்டிக்கோவை, புறநானூறு, பெரியபுராணம், பெருங்கதை, மணிமேகலை உட்பட 130க்கும் மேலான தரவு நூல்களை கொண்டும் ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.
களப்பிரர்கள் பற்றிய நேரடி வரலாற்று தகவல்கள், 3 முதல் 6ம் நூற்றாண்டு வரை கிடைத்த சான்றுகள், பாடல்கள், வரைபடங்கள் வைத்து ஒப்பீட்டளவில் இந்த ஆய்வு புத்தகம் இயற்றப்பட்டிருக்கிறது.
சமணம், பௌத்தம் பற்றிய ஏராளமான குறிப்புகளும் அறியக்கிடைக்கிறது.
இதனாலேயே அதிக அளவில் இப்புத்தகத்திலிருந்து குறிப்பெடுத்துள்ளோம்(Highlights).
களப்பிரர்கள் இப்பெயர் குறித்து பொதுவாக என்ன அபிப்பிராயம் இருக்கும் என்பது நான் பகிர்ந்துள்ள படத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும். அதற்காகத்தான் இதை பகிர்ந்தேன். வரலாற்றில் இருண்ட காலம் என்பதற்கு அர்த்தம் அக்காலகட்டம் குறித்த தகவல் அதிகம் கிடைக்கப்பெறவில்லை என்று. ஆனால் நம்மாட்கள் அது ஏதோ கொடுரமான காலம் என்று நினைக்கிறார்கள். (டேய் பரமா வாசிங்கடா!) அதற்கு முன்பு நிலைப்படை மட்டும் கொண்டிருந்த மூவேந்தர்கள் எளிதாக வெளியிலிருந்து வந்த கர்நாடக களப்பிரர்களால் வெல்லப்பட்டிருப்பார்கள். மேலும் ஒவ்வொரு பேரரசும் வீழ்ச்சிக்கு பின்புதான் உருவாகும். அடுத்தடுத்து வளர்ந்து கொண்டுதான் போகும். அதை விடுத்து அப்போதே அப்படி இருந்தோம், இப்போது இல்லை என புலம்புவது அறிவீனம். இப்புத்தகம் ஆய்வு நூல். அதனால் வெறும் தகவல்களாலே நிரம்பியிருப்பினும் தர்க்கப்பூர்வமாக இருப்பது சுவாரசியத்தை கொடுத்தது. இன்னார் இப்படி சொல்கிறார்கள், இதனால் அது இப்படி இருக்காது என தன் கருத்தை முன்வைத்தபடி செல்கிறார். எனக்கு சுவாரசியமான தகவலாக இருந்தது. களப்பிர கால சோழர்களின் நிலைதான். களப்பிரர்களை தாஜா செய்ய மன்னர் பெயரை மகனுக்கு வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாண்டியர்கள் பரவாயில்லை, அருகாமை தீவுத்தேசத்திற்கு சென்று ஆட்சியைப் பிடித்துருக்கிறார்கள். அதே போல சமயம். களப்பிர கால சமயநிலை. கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டியது. ஏனென்றால் அதில்தான் பல தவறான வதந்திகள் உலா வருகின்றன. ஒரு மன்னனே நினைத்தாலும் மொத்தமாக இன்னொரு மதத்தை நிராகரிக்க முடியாது. களப்பிர காலத்தில் வைதீக மதம் நிலையை தெளிவாக விளக்கியிருக்கிறார். அதே போல் இன்னொரு முக்கியமான தகவலாக இறையனார் அகப்பொருள் என்றொரு நூலை ஏன் இறைவன் எழுதியாக முன்வைத்து பூ சுற்றப்பார்த்தார்கள் என்றும் விளக்கியிருக்கிறார். எனக்கு புதுகை சுற்றுலாவில் இறைவன் எழுதிய ஓலைச்சுவடி எனக்காட்டி பணம் பறித்தது நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள்கள் பட்டியலை ஏற்கனவே படித்திருந்தாலும் இவர் இன்னும் புதிதாக பலதை காட்ட வியப்பாக இருந்தது. எவ்வளவு காலத்தால் இழக்கப்பட்டிருக்கிறது? புனைவெழுத்தாளர்களை தாண்டி ஓர் ஆய்வாளராக 125 ஆண்டிலும் கொண்டாட பட வேண்டியவராக மயிலையார் இருக்க காரணம் அவரது படைப்புகளே... வாசித்து அறிவீர்....